Followers

Wednesday, July 14, 2010

நட்சத்திரங்களின் பொதுகருத்து தொடர்ச்சி





உத்திராடம்

உத்திராடத்தில் பிறந்தவர்கள் மிகவும் உண்மையானகராகவும் நேர்மை தவறாதவராகவும் இருப்பார்கள். புகழ் பெறுவார்கள் இந்த நட்சத்திரம் வானத்தில் கட்டில் கால் போல் தெரிகிறது. இது வானத்தில் மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5.36 மணி முடிவு 7.12 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.



திருவோணம்

இந்த நட்சத்திரத்திம் திருமாலின் நட்சத்திரம் ஆகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்புடன் இருப்பார்கள். இவர்களை நம்பி எதையும் செய்ய சொல்லாம். நட்புக்கு இலக்கணமாக திகழ்வார்கள். இவர்களுக்கு அழகிய மனைவி அமையும். இது வானத்தில் மரங்களின் வேர்கள் போல் இருக்கிறது. இது வானத்தில் வடமேற்கு திசையில் இந்தநட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.00 மணி முடிவு 9.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepediaதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.



அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரம் வானில் மேளம் போல் இருக்கிறது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சினிமா. கலைகள் மேல் தீராத ஆர்வம் இருக்கும். எந்தவேலையும்செய்துமுடிப்பார்கள். இது வானத்தில் வடமேற்கு திசையில் இந்தநட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5..36 மணி முடிவு 7.12 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepediaதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.





பார்க்கலாம் ...

No comments: