Followers

Tuesday, August 3, 2010

திதி



முன்பு எல்லாம் நாள்களை திதி என்று தான் அழைப்பார்கள். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு தான். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். தினமும் சூரியனைவிட்டு சந்திரன் 12டிகிரி விலகிசென்றுகொண்டிருக்கும். பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனலில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருக்கும். அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசை முடிய 15 நாட்கள் ஆக மொத்தம் 30 நாட்கள்.

அமாவாசைக்கு அடுத்த நாள் பெயர் பிரதமை அதற்கு அடுத்த நாள் துதியை மூன்றாம் நாள் திருதியை 4 ஆம் நாள் சதுர்த்தி 5 ஆம் நாள் பஞ்சமி 6 ஆம் நாள் சஷ்டி 7 ஆம் நாள் சப்தமி 8 ஆம் நாள் அஷ்டமி 9 ஆம் நாள் நவமி 10 ஆம் நாள் தசமி 11 ஆம் நாள் ஏகாதசி 12 ஆம் நாள் துவாதசி 13 ஆம் நாள் திரியோதசி 14 ஆம் நாள் சதுர்தசி 15 ஆம் நாள் பௌர்ணமி இவ்வாறு பெயர் வைத்து அழைப்பார்கள்.

சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது சிறிதாக வளர்வதால் எல்லா திதிகளும் வளர்பிறை திதிகள் எனப்படும். இந்த வளர்பிறை திதிகளை சுக்கில பட்ஷ திதிகள் என அழைக்கிறார்கள். இவை அனைத்தும் நல்ல திதிகள் ஆகும். பௌர்ணமியில் இருந்து வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதிகள் அதாவது தேய்பிறை திதிகள் எனப்படும்.

சுபகாரியங்கள் செய்ய ஆகாத திதிகள் பிரதமை, சஷ்டி, ஏகாதசி, துவிதியை, சப்தமி, துவாதசி ஆகிய திதிகளில் சுபகாரியங்கள் செய்ய ஆகாது. அஷ்டமி திதியும் கெட்ட திதி என்று கூறுகிறார்கள். அந்த திதியிலும் நல்ல் காரியங்கள் செய்யலாம். ஆனால் வியாழகிழமை வரும் அஷ்டமியில் மட்டும் செய்யக்கூடாது.

No comments: