Followers

Tuesday, August 24, 2010

இரண்டாம் வீடு



இரண்டாம் வீடு என்பது குடும்ப ஸ்தானம்.தன ஸ்தானம். வாக்கு ஸ்தானம் எனப்படும். இரண்டாம் வீட்டை வைத்து என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம். முதலில் இரண்டாம் வீட்டு அதிபதி யார் அவர் எங்கு இருக்கிறார். இரண்டாம் வீட்டை எந்த கிரகங்களின் பார்வை இருக்கிறது என்று பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் பலன் சரியாக வரும். இரண்டாம் வீடு என்பது ஒருவரின் பணநிலமை. வங்கியில் இருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் குறிக்கும். குடும்பம் எப்படி இருக்கும் குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குடும்பத்தில் கலவரம் இருக்குமா ஒருவர் எப்படி பேசுவார் திக்கிதிக்கி பேசுவார அல்லது வேடிக்கையாக பேசுவார அல்லது பேசவே மாட்டாரா என்று கூறலாம். ஒருவருடைய கண்பார்வை எப்படி இருக்கும் என்பதும் பற்றியும் கூறலாம்.

ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தையும் இந்த வீட்டை வைத்து சொல்லலாம் ஒருவருக்கு குழந்தை பாக்கியத்ததை கொடுக்கும் வீடு 5 ஆம் வீ்டு ஆனால் குழந்தை பாக்கியம் என்றால் ஒரு நபர் குடும்பத்தில் கூடுகிறார் என்று அர்த்தம் குடும்பத்தின் நபர்களை குறிப்பது இரண்டாம் வீடு இரண்டாம் வீடு நன்றாக இருந்தால்தான் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் இரண்டாம் வீடு கெட்டால் குழந்தை பாக்கியம் இருக்காது. இப்பொழுது புரிகிறதா இரண்டாம் வீட்டின் பயன் என்ன வென்று.

அதைப்போல் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால் ஏன் என்று இரண்டாம் வீட்டை வைத்து பார்க்க வேண்டும். இரண்டாம் வீட்டின் அடுத்த பண்பு இளைய சகோதரத்தின் விரையம். எப்படி இது சாத்தியம் இளைய சகோதரத்தைப் பற்றி கூறுவது மூன்றாம் வீடு மூன்றாம் வீட்டிற்க்கு 12 ஆம் வீடு இரண்டாம் வீடு அல்லவா அதனால் அது மூன்றாம் வீட்டிற்க்கு விரையம் ஆகிறது. இளைய சகோதரத்தின் விரையம் மரணம் ஆகியவற்றை காட்டும். அவர் எப்படி இறப்பார் எப்படி பணத்தை செலவு செய்வார் ஆகியவற்றை காட்டும் வீடு இரண்டாம் வீடு

இரண்டாம் வீட்டை வாக்கு ஸ்தானம் என்று கூறினேன் அல்லவா அதைப்பற்றி பார்ப்போம் இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கடினமாக பேசுவார் கேது இருந்தாலும் பேச்சு கடினம் இருக்கும். புதன் இருந்தால் நன்றாக பேசுவார். நல்ல கிரங்கள் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும்.

இரண்டாம் வீட்டை தன ஸ்தானம் என்றும் கூறுவது எப்படி என்று பார்ப்போம் நமக்கு வரும் வருமானம் அதாவது பொருளாதார வளர்சி எப்படி என்று காட்டுவது இரண்டாம் வீடு. இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் தீயகிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது 10 ஆம் மற்றும் 11 வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் 6 ஆம் வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் 6 ஆம் வீடு ஜாதகர் செய்வது சுயதொழிலா அல்லது அடிமைதொழிலா என்று தெரியவரும். இவற்றையேல்லாம் கணக்கில் கொண்டுதான் தன ஸ்தானத்தை முடிவு செய்யவேண்டும்.

இப்பொழுது 2 ம் வீட்டு அதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

முதல் வீட்டில் இருந்தால் நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார்.

இரண்டாம் வீட்டில் இருந்தால் குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர்.

மூன்றாம் வீட்டில் இருந்தால் சகோதர் மூலம் வருமானம் கிடைக்கும.

4 ஆம் வீட்டில் இருந்தால் வீடு வாகனம் மூலம் வருமானம் உண்டு.

இரண்டாம் வீட்டு அதிபர் 5 ல் இருந்தால் அவருக்கு திடிர் என்று பணவரவு இருக்கும் லாட்டரி அல்லது ரேஸ் மூலம் பணவரவு இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 6 ல் இருந்தால் வேலையின் மூலம் பணவரவு இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபதி 7 ல் இருந்தால் அவரின் மனைவி அல்லது கணவன் மூலம் வருமானம் இருக்கும் சிலருக்கு அந்நிய நாட்டின் மூலமாக வருமானம் இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 8 ல் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல ஏன் என்றால் 8 ஆம் வீடு மறைவு ஸ்தானம் ஆகும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 9 ல் இருந்தால் தந்தை வழியாக பணம் வரும் அல்லது அந்நிய நாட்டின் மூலமாக பணவரவு இருக்கும்.

இரண்டாம் வீட்டு அதிபர் 10 ல் இருந்தால் தொழில் செய்து சம்பாதிப்பார்.

இரண்டாம் வீட்டு அதிபர் 11 ல் இருந்தால் நல்ல பணவரவு இருக்கும். அண்ணன் மூலமாகவும் பணவரவு உதவி இருக்கும்

இரண்டாம் வீட்டு அதிபர் 12 ல் இருந்தால் பணம் விரையமாகும்.

இரண்டாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் கண் பார்வையில் கோளாறு இருக்கும். அதைப்போல் 7 ம் வீட்டு மூலம் நன்றான மனைவி அமைந்தாலும் இரண்டாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் இருவரையும் தனித்தனியாக பிரித்து வைத்துவிடும். ஒருவருக்கு இரண்டாம் வீட்டு அதிபதியின் தசா புத்தியில் மரணம் ஏற்படும். மரணத்தைப் பற்றி எழுதும் போது முழுவதும் எழுதுகிறேன்.

இரண்டாம் வீட்டை வைத்து அண்ணனின் வீட்டைப்பற்றி கூறலாம். எப்படி என்றால் 11 ம் வீடு அண்ணனின் வீடு 11 ம் வீட்டில் இருந்து 4 ம் வீடு ஜாதகரின் இரண்டாம் வீடு அல்லவா அதனால் அண்ணனின் வீடு எப்படி இருக்கும் என்று கூறலாம். அதைப்போல் தாயின் வருமானத்தைப்பற்றியும் கூறலாம் எப்படி என்றால் 4 ம் வீடு தாய் ஸ்தானம் 4 ம் வீட்டிற்க்கு 11ம் வீடு ஜhதகரின் இரண்டாம் வீடு அல்லவா அதனால் தாயாரின் லாபம் எப்படி என்றும் கூறலாம். இதுவரை 2 ம் வீட்டின் காரதுவத்தைப்பற்றி பார்த்தோம் இனி அடுத்த வீடு இதுவரை பொறுமையாக படித்தற்க்கு மிக்க நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


No comments: