Followers

Saturday, January 7, 2012

சோதிட அனுபவ தொடர் 2



வணக்கம் சோதிட அனுபவம் தொடரில் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பார்த்து வருகிறோம்.

சென்ற பிறவியைப் பற்றி எப்படி தெரிந்துகொள்வது?

சென்ற பிறவியில் பாவம் செய்திருக்கிறா என்று பார்க்கலாம் ஆனால் எந்த மாதிரி பிறப்பு எடுத்திருக்கறார் என்று பார்ப்பது மிக கடினம். ஒரு சிலர் மட்டும் கூறுவதிற்க்கு வாய்ப்பு இருக்கிறது சாதாரான சோதிடர்களால் முடியாத காரியம். ஜாதகம் என்பதே சென்ற பிறவியில் என்ன செய்து இப்பிறவியில் பிறப்பு எடுத்திருக்கிறார் என்று பார்க்கதானே.

பூர்வ புண்ணியஸ்தானம் என அழைக்கப்படுகிற 5 ஆம் வீட்டைக்கொண்டும். பாக்கிய ஸ்தானம் என அழைக்கப்படுகிற 9 ஆம் வீட்டைக்கொண்டும் அறியலாம். நாம் இப்பொழுது இந்த ஜாதகத்தில் பார்க்கபோவது 5 ஆம் வீடு. இந்த வீடு தனுசு வீடாக வருகிறது இதன் அதிபதி குரு. அவர் 6 ஆம் வீட்டில் போய் அமர்ந்திருக்கிறார் எப்படி என்றால் நீசமாக இருக்கிறார்.

5 ஆம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். ஏதோ நல்ல திசையில் இருந்து புத்திரபாக்கியம் கிடைத்தாலும் இவர்களுக்கு எதிரி வேறு யாரும் இருக்கமுடியாது இவரின் பிள்ளைகள் தான் இவருக்கு எதிரி.

பூர்வ புண்ணிய வீடாக இருப்பதால் பெரியவர்களிடம் எதிரியாக இருப்பார்கள். அறிவு சம்பந்தப்பட்ட வீடு ஐந்தாம் வீடாக இருப்பதால் ஞாபகம் மறதி இவர்களிடம் இருக்கும். இது அனைத்தும் இவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலும் இவர் இப்படி தான் இருக்கிறார்.

ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகத்தைப் பற்றி பார்க்கலாம். இவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் ராகு கூட இணைந்து அமைந்துள்ளது. பொதுவாக 5 ஆம் வீட்டில் ஒரு கிரகமும் இருக்ககூடாது. திருமண ஜாதக பொருத்தம் பார்க்கும் போது 5 ஆம் வீட்டில் நிலையை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களின் கர்ப்ப பயை குறிக்கும் வீடு 5 ஆம் வீடு. 5 ஆம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். திருமணம் நிகழம் போது வெறும் திருமண பொருத்தத்தை மட்டும் பார்க்க கூடாது ஜாதகத்தையும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இப்பொழுது எல்லாம் சோதிடர்களிடம் சென்றால் மாப்பிள்ளை மற்றும் பெண் எந்த நட்சத்திரம் என்று கேட்பார்கள் உடனே இத்தனை பொருத்தம் இருக்கிறது திருமணம் செய்யலாம் என்று சொல்லிவிடுவார்கள். அவ்வாறு பார்ப்பது தவறாகும்.

ஜாதகத்தை பார்க்க வேண்டும்.முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் தான் அனைத்து தகவலும் தெரியவரும். இப்பொழுது உள்ள ஜாதகங்களில் பலபேருடைய ஜாதகங்கள் 5 ஆம் வீடு கெட்டு உள்ளது. இப்பொழுது எல்லாம் இந்த துறையில் மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது தெருவிற்க்கு தெரு ஒரு மருத்துவமனையாவது இத்துறையில் இருக்கிறது. அப்படி என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். 5 ஆம் வீடு கெட்டும் குழந்தை பாக்கியம் இருக்கும். அது வேறு கிரகங்களை வைத்து இருக்கும். என்ன ஒரு குறையென்றால் தாமதமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த மாதிரி ஒரு வாரத்திற்க்கு முன்பு ஒரு ஜாதகர் என்னிடம் வந்து தன் மகனுக்கு ஒரு வரன் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பிரபல Matrimony யின் ID யை என்னிடம் கொடுத்தார். அதில் எந்த ஜாதகம் நல்ல இருக்கு என்று பார்த்து அவரிடம் நான் அந்த ஜாதகியின் விபரங்களை எடுத்துக்கொடுக்க வேண்டும். நான் அதிகாலையில் இருந்து கணினியின் முன்பு உட்கார்ந்து பெண்ணின் ஜாதகத்தை பார்த்துதேன்.ஒரு நாள் முழுவதும் அவருக்காக கணினியின் முன்பு உட்கார்ந்து தேடினேன். பையனின் தகப்பனார் அடுத்த நாள் காலையில் என்னை பார்க்க வந்தார். நான் அவரிடம் 5 பெண்ணின் ஜாதகங்களை மட்டும் கொடுத்தேன்.



ஒரு நாள் முழுவதும் எத்தனை ஜாதகங்கள் பார்த்தேன் தெரியுமா ?

அடுத்த பதிவு வரை காத்திருங்கள் ...

நாம் பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர்த்து எங்கையோ பாடம் செல்கிறது என்று நினைக்க வேண்டாம். பாடத்துடன் சம்பந்தபட்ட விஷயம் அதனால் தான்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

2 comments:

MANI said...

அனுபவம் அருமை, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்.

தாங்கள் தொழில்முறை ஜோதிடரா? பல ஜாதகங்களில் ஜோதிட விதிகளை நாம் அப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. விதிகள், விதிவிலக்குகள் என்று எவற்றிற்கும் புலனாகாத ஜாதகங்களும் உண்டு.

உதாரணமாக குழந்தை பாக்கியத்திற்கு நாம் 5ம் வீட்டை கொண்டு கணக்கிடுகிறோம்.

சில ஜாதகங்களில் 5ம் மிடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆனாலும் வேறு சில விதிகளால் குழந்தைபாக்கியம் இருக்கும், சில ஜாதகங்களில் இருவருக்கும் யாதொரு பாதிப்பும் இருக்காது. ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும்.

இது போன்ற சமயங்களில் நாம் தடுமாறி ஏழரை சனி, குருபெயர்ச்சி முதலியவற்றை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை.

உங்கள் அனுபவத்தில் இதை தவிர்க்க எதாவது வழிமுறைகளை கண்டிருக்கிறீர்களா? நண்பரே.

rajeshsubbu said...

வாருங்கள் மணி அவர்களே !!
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நீங்கள் கேட்ட வினாகளுக்கு பதிவில் தான் பதில் அளிக்க வேண்டும். பதில் அளிக்கிறேன்.