Followers

Monday, January 9, 2012

சோதிட அனுபவ தொடர் 3



ஒரு நாள் முழுவதும் எத்தனை ஜாதகங்கள் பார்த்தேன் தெரியுமா ?

1474 ஜாதகங்களைப் பார்த்தேன்.என்ன இது இத்தனை ஜாதகங்கள் எடுத்து வெறும் ஐந்து ஜாதகங்கள் மட்டும் தான் நல்ல இருந்ததா என்று கேட்க தோன்றும். மீதி ஜாதகங்களில் உள்ள பெண்களுக்கு திருமணம் ஆகாதா என்று கேட்கலாம் ஆகும் ஆனால் திருமணத்திற்க்கு உரிய வயதில் திருமணம் ஆகாது. அப்படியே திருமணம் ஆனாலும் திருமண நடைபெற்ற பின் குழந்தை பிறக்க தாமதம் ஆகும்.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் 5 ஆம் வீடு 7 ஆம் வீடு 8 ஆம் வீடு சுத்தமாக இருந்தால் நல்லது. திருமணத்தை தடுத்து நிறுத்துவதில் 5 ஆம் வீடு முக்கிய பங்கு ஏற்கிறது. அந்த வீடு கெட்டாலும் திருமணத்தில் சிக்கல் தான்.

இப்படி எல்லாம் திருமணம் பார்த்து செய்வது என்றால் நீங்கள் 21 வயதில் இருந்து ஆரம்பித்தால் தான் திருமணம் சரியான வயதில் நடைபெறும் இல்லை நான் 30 வயதில் இந்த மாதிரி கண்டிஷன் போட்டு திருமணத்திற்க்கு பெண்ணே அல்லது மாப்பிள்ளையோ பார்ப்பேன் என்றால் இந்த ஜன்மத்தில் திருமணம் நடைபெறாது.அதை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இவருடைய ஜாதகத்தில் செவ்வாய்யும் ராகுவும் புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. முதலில் நாம் செவ்வாய் எடுத்துக்கொள்வோம் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் இவரிடம் ரொம்ப ஜாக்கிரத்தையாக பழக வேண்டும். வில்லங்க பேர்வழி. எடுத்தவுடனே கோபம் வரும். ராகு ஐந்தில் இருப்பதால் இவரும் கடுமையான புத்திரதோஷத்தை தருவார்.

ராகு ஐந்தில் நின்றதால் ஏற்படும் தோஷத்தைப்பற்றி பார்க்கலாம்?

20 வருடத்திற்க்கு முன்பு சோதிடர்களிடம் சென்றால் ராகு தோஷத்திற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் பாம்பை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் என்ற கூறுவார்கள். 20 வருடத்திற்க்கு முன்பு பாம்பை அடிக்காதவர்கள் ஒரு கிராமத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். பாம்பை அடிக்கவில்லை என்றால் இவர்கள் உயிருடனே வாழ்வது சாத்தியமில்லை. பாம்பினால் இந்த தோஷம் ஏற்பட வழி குறைவுதான்.

ராகு ஐந்தில் நின்றால் கடுமையான பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும். பித்ரு தோஷத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்களில் வாழ்வு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடைகளாக தான் இருக்கும்.வீட்டை விட்டு வெளியில் ஒரு கடைக்கு செல்லவேண்டும் என்றாலும் கூட தடைகள் ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாபங்களில்தான் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.

அவர்கள் எப்படி வாழ்க்கையை எதிர்நோக்குவது ?

இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்லுவீர்கள் ?


அன்புடன்

ராஜேஷ்சுப்பு


2 comments:

velu said...

காளஹாஸ்தி சென்று பரிகாரம் செய்யலாம். பூர்வ புண்ணியம் கெட்டு இருப்பதால் ராமேஸ்வரம், காசி மற்றும் கய சென்று வரலாம்.
குலதெய்வ வழிபாடு அமாவசை அன்று செய்யலாம்

rajeshsubbu said...

திரு வேலு தங்கள் வருகைக்கு மற்றும் கருத்திற்க்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன பரிகாரம் செய்யலாம்.