Followers

Thursday, January 19, 2012

சந்தேகங்கள்



என்னிடம் சில கேள்விகள் வந்தன அதற்காக ஒரு பதிவு

ஆகமக்கடல்

ஒருவருக்கு குரு லக்னம் மற்றும் ராசி அதிபதியாக இருக்கார்.ஆனா இரண்டாமிடமான மகரத்தில் நீசமாக உள்ளார்.லக்னாதிபதியே நீசமாக உள்ளார்.இதன் பலன் மற்றும் பரிகாரம் என்ன?

நான் எழுதுவது பொதுபலனைத்தான் எழுதுகிறேன். ஒரு ஜாதகத்துக்கு பலன் முடிவு செய்வது என்பது அந்த ஜாதகத்தை பல விதத்திலும் அலசி ஆராய்ந்த பிறகு தான் முடிவு சொல்ல வேண்டும். சிறு தகவல்களை வைத்து சொல்லமுடியாது. நீங்கள் கேட்டுவிட்டீர்கள் அதனால் சிறு தகவல் வைத்துக்கொண்டு பலன் சொல்லுகிறேன்.

தனசு லக்னம் தனுசு ராசி . ராசி அதிபன் குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். குரு இரண்டாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று நான் பதிவில் இட்ட பலன்கள்

2 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

ஆனால் மகரத்தில் குரு நீசமாக இருக்கிறார். இவருக்கு சொன்ன பலன்களில் ஏதாவது ஒன்று பாதிக்கும். இரண்டாம் வீட்டை பார்க்கும் போது இரண்டாம் அதிபதி நிலை முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாம் வீட்டை பார்க்கும் கிரகத்தின் நிலையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.குரு மகரத்தில் இருந்தால் உடனே நீசம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. குரு எந்த நட்சத்திரத்தில் செல்கிறார் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுது தான் பலன்கள் சரியாக வரும்.

நீங்கள் கேள்வியை கேட்கும்போது பரிகாரத்தை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளதால் கண்டிப்பாக இரண்டாம் வீடு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

குருவுக்கு உரிய பொதுவான பரிகாரத்தை சொல்லுகிறேன்.

ஆலங்குடி செல்லலாம். வியாழன் தோறும் விரதம் இருந்து கொண்டைகடலை மாலை அணிவித்து குரு பகவானை வணங்கி வாருங்கள்.

sujindhiran

hai sir
7m veedu 6m veedu parivarthanai
ulladhu .laknam rishabam
2m veedu guru irukkirar
manaivi patri sollunga sar.

இப்படி கேள்வி கேட்பதற்க்கு பதிலாக என்னிடம் முழு ஜாதகத்தையும் கொடுங்கள் பதில் தருகிறேன்.

என்னுடைய email id astrorajeshsubbu@gmail.com


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

8 comments:

Lazy boy said...

Vanakam sir, these are my doubts.mithuna lagnam,risabha rasi.moon,mars and jupiter in 12th house,mercury,venus,rahu,sun in 9th house.it is trikona house.4lords here.9th lord sani is in 7th house.now i am in rahu dasa bhuthan bhukti.I didn't get any benefits.Suffered a lot.rahu and mercury in same star,venus and sun in different star not having link.But in same house.sir.Will these four lords help me in growth and career? m jobless.I have not faced any worst time so far like this rahu dasa mercury sub dasa.help me.how my future will be?

Lazy boy said...

Date of birth 13-03-1989,1:27pm sir.sir pls publish my questions only not birth time and year pls .thank you

rajeshsubbu said...

தங்கள் வருகைக்கு நன்றி Lazy boy. உங்கள் ஊர் எது என்றும் அனுப்புங்கள். சந்தேகங்கள் பகுதியில் வெளியிடலாமா ?அல்லது உங்கள் email லுக்கு அனுப்பவேண்டுமா?

Lazy boy said...

Sir m viswanathan from punjai puliampatti erode district sir.Pls send it to my mail sir.Pls help me sir.i believe only Astrology as guide.Thanks a lot sir.i ask my doubts later sir.

gvsivam said...

வியாழ பகவானின் பரிகார தலம் ஆலங்குடியா? அல்லது திருச்செந்தூரா?

ஆலங்குடியில் வணங்கப்படும் குரு யாரா? வியாழ பகவானா?தட்சிணாமூர்த்தியா?

Lazy boy said...

Sir my doubts.look into my jathagam,my 10th lord is with 11th lord and 2nd lord in 12th house.It means i can earn money only in foreign land? Even though it is inimical place,moon is uccha,jupiter's kendrathipati dosa cancelled,mars becomes sixth lord in 12th house it is good? then 12th house is 2nd from from 11th house,11th house to 2nd house.it seems good.Am i correct? I feel it is good placement and conjunction too.sir pls understand it and make it clear these 3 lord's combinations.Thank you sir

gvsivam said...

திரு ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம்,
குருவின் பரிகார தலம் எது என்று ஒரு குருக்கள் தங்களை கேள்விகேட்டதால் நீங்கள் பூஜை செய்யும் ஆலய அர்ச்சகரையே குறை கூறுகிறீர்கள்.ஏன் இந்த வன்மம்.நான் நீங்கள் கூறியது தவறு என்று கூறினேனா? அப்படியே தவறு என்றாலும் ,எனக்கு தெரிந்தவரை என்ற ஒற்றை வரியில் முடித்திருக்கலாமே,அதை விடுத்து கேள்விகேட்ட சமூகத்தையே குறை கூறுவது தங்களின் தரத்தை தாங்களே குறைப்பதாக ஆகிவிட்டது.
நான் உங்களை ஜோதிட ரீதியாகவே கேட்டேன்.நீங்களும் அப்படியே பதில் தந்திருக்கலாம்.அதை விடுத்து இப்படி பேசுகிறீர்களே,

...சரி நானும் விவாதத்திற்கு தயார்.
(இந்த ஜோசியகாரங்களே இப்படித்தான்.ஒவ்வொரு ஆளும் ஒவ்வொருமாதிரி சொல்வாங்க.ஒரு ஆள் செவ்வாய் தோஷம் இருக்கும்னு சொல்வார்.ஒரு ஜோசியர் இல்லம்பார்.இந்த ஈனம் தேவையா?)
அடுத்த சமூகத்தை குறை கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.அப்பதான் உங்க சோதிட வாக்கு பலிக்கும்.

rajeshsubbu said...

// * venkatesa gurukkal said...
திரு ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம்,
குருவின் பரிகார தலம் எது என்று ஒரு குருக்கள் தங்களை கேள்விகேட்டதால் நீங்கள் பூஜை செய்யும் ஆலய அர்ச்சகரையே குறை கூறுகிறீர்கள்.ஏன் இந்த வன்மம்.நான் நீங்கள் கூறியது தவறு என்று கூறினேனா? அப்படியே தவறு என்றாலும் ,எனக்கு தெரிந்தவரை என்ற ஒற்றை வரியில் முடித்திருக்கலாமே,அதை விடுத்து கேள்விகேட்ட சமூகத்தையே குறை கூறுவது தங்களின் தரத்தை தாங்களே குறைப்பதாக ஆகிவிட்டது.
நான் உங்களை ஜோதிட ரீதியாகவே கேட்டேன்.நீங்களும் அப்படியே பதில் தந்திருக்கலாம்.அதை விடுத்து இப்படி பேசுகிறீர்களே,

...சரி நானும் விவாதத்திற்கு தயார்.
(இந்த ஜோசியகாரங்களே இப்படித்தான்.ஒவ்வொரு ஆளும் ஒவ்வொருமாதிரி சொல்வாங்க.ஒரு ஆள் செவ்வாய் தோஷம் இருக்கும்னு சொல்வார்.ஒரு ஜோசியர் இல்லம்பார்.இந்த ஈனம் தேவையா?)
அடுத்த சமூகத்தை குறை கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.அப்பதான் உங்க சோதிட வாக்கு பலிக்கும். */

பதிவில் மாற்றிவிட்டேன். நீங்கள் வருத்தபட வேண்டாம்.