Followers

Tuesday, January 24, 2012

குரு முடிவு பகுதி



குரு எப்பொழுதும் சொந்த மதத்தை குறிப்பவர். அவர் அவர்களின் மதங்களை பின்பற்றினாலே குரு நல்லது செய்கிறது. என்னிடம் சோதிடம் பார்க்க வந்தார் ஒருவர் . அவர் சென்னையில் ஒரு கட்டிடத்தை கட்டி அதை வாடகைக்கு விட்டு வந்தார்.

அவரின் கட்டிடத்தில் குடியிருபவர்கள் பெரும்பாலும் மாற்று மதத்தினர். இவருக்கு மூன்று பையன்கள் இருக்கிறார்கள். மூத்த பையன் காதல் திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்த பையனும் காதல் திருமணம் செய்ய இருக்கிறார். அவர் என்னிடம் வந்து கேட்ட கேள்வி நான் இவர்களை கஷ்டபட்டு வளர்த்து இவர்கள் இஷ்டம்போல் வெளியில் திருமணம் செய்வதற்கா என்று கேட்டார்.

என்னடா இது இந்த விஷயத்திலும் கிரகங்கள் பிரச்சினை செய்கிறதா என்றால் கண்டிப்பாக செய்கிறது. என் அனுபவத்தில் நிறைய பேருக்கு குரு இந்த மாதிரி பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்.

ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும்.

குரு ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்த்துவருகிறோம் அந்த வரிசையில்

7 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

8 ஆம் வீட்டில் குரு இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வாதை இல்லாமல் உடனே போகும்.

9 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

10 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.

11 ஆம் வீட்டில் குரு இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.

12 ஆம் வீட்டில் குரு இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு



5 comments:

Lazy boy said...

Guru becomes 7th lord for my lagna and is in 12th house which becomes 6th house from 7th house.so is it bad placement sir?.But my guru comes under kandhiratipati dosa.It is my 7th and 10th house lord.So this dhosa gets cancelled? reply sir. If cancelled what benefit i will get? Thanks you for sharing

gvsivam said...

சரிங்க,
ஒருவருக்கு லக்னாதிபதியே குரு.ஆனா அவர் நீசமாயிட்டாலோ பகை வீட்டில் இருந்தாலோ,மறைந்திருந்தாலோ அந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெறுவது கஷ்டம் என்று கூறலாமா?மேலும் குரு தசையோ குரு புக்தியோ அவருக்கு நன்மை செய்யாது என்று கூறலாமா?

rajeshsubbu said...

//* Lazy boy said...
Guru becomes 7th lord for my lagna and is in 12th house which becomes 6th house from 7th house.so is it bad placement sir?.But my guru comes under kandhiratipati dosa.It is my 7th and 10th house lord.So this dhosa gets cancelled? reply sir. If cancelled what benefit i will get? Thanks you for sharing
*/
வருக நான் சொல்லிதருவது அடிப்படை தான் போக போக தான் அனைத்தும் வரும். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

rajeshsubbu said...

/* venkatesa gurukkal said...
சரிங்க,
ஒருவருக்கு லக்னாதிபதியே குரு.ஆனா அவர் நீசமாயிட்டாலோ பகை வீட்டில் இருந்தாலோ,மறைந்திருந்தாலோ அந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெறுவது கஷ்டம் என்று கூறலாமா?மேலும் குரு தசையோ குரு புக்தியோ அவருக்கு நன்மை செய்யாது என்று கூறலாமா? */

வருகைக்கு நன்றி நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் ஜாதக்தை பொருத்து இருக்கிறது. சில ஜாதகங்களில் அஷ்டவர்கத்தில் குரு நல்ல பரல்களோடு இருந்தால் பலன் மாறும்.

gvsivam said...

மிக்க நன்றி.

(குரு ரொம்ப நுணுக்கமா பதிவு எழுத/பதில் சொல்ல வச்சிட்டாரோ!)

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்