வணக்கம் நண்பர்களே!
நமது ஜாதககதம்பம் வழியாக அதுவும் ஆன்மீகவழியில் சொல்லிக்கொடுக்கும் ஒரு செயல் காயத்ரி மந்திரம் மட்டுமே. நிறைய ஆன்மீக பதிவுகளை நான் எழுதினாலும் ஆன்மீக வழியில் வேறு எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை.
தனக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று பல மகான்கள் சொல்லுவார்கள். எனக்கு தெரிந்த ஒரு சில விசயங்களில் இந்த காயத்ரி மந்திர பயிற்சியும் ஒன்று. மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம் என்று சொல்லுவார்கள் அந்த மந்திரத்தை நீங்கள் பிறர் சொல்லி செய்தாலும் நமது ஜாதககதம்பத்தின் வழியாக செய்யும்பொழுது நமது அம்மனி்ன் ஆசி உங்களுக்கு கிடைக்கும் என்பதால் இதனை செய்யுங்கள் என்று சொல்லுகிறேன்.
பொதுவாக ஆன்மீகத்திற்க்கு என்று ஏற்ற நேரம் பிரம்மமுகூர்த்த நேரம் இந்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை எட்டுமணிக்குள் செய்துவிடவேண்டும் என்று சொல்லுவேன். காலையில் எழுந்து கடவுளை கும்பிடுவது ஒரு நல்ல செயல். எழுந்தவுடன் கடவுளை கும்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பித்தால் அந்த நாள் முழுவதும் நமக்கு எந்த பிரச்சினையும் ஏற்படபோவதில்லை அனைத்தையும் கடவுளே பார்த்துக்கொள்வார்.
ஒரு சிறந்த ஆன்மீகப்பயிற்சியை செய்வதற்க்கான நேரம் இப்பொழுது வருகிறது அந்த நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வரும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம். எப்படி செய்வது என்பதை கேட்டுக்கொள்ள எனது மொபைலை தொடர்புக்கொள்ளுங்கள்.
Cell 9551155800
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment