வணக்கம்!
பொதுவாக தற்பொழுது நமது நண்பர்கள் நிறைய யூடிப் சானலில் பார்த்துவிட்டு நிறைய கேள்விகளை முன்வைக்கின்றார்கள். இது நல்லது என்றாலும் அனைவரும் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. அவர் அவர்களுக்கும் தெரிந்ததை சொல்லுவார்கள் அது அனுபவத்தில் நடந்து இருக்கின்றதா என்றால் அப்படி ஒன்றும் நடந்து இருக்காது.
மகரராசிக்கு குரு தசா நல்லது செய்யாதா என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். சந்திரன் சனியின் வீட்டில் இருக்கின்றது. மகரராசியில் குரு பகவான் நீசம் அதனால் குரு தசா அந்தளவுக்கு நன்மை செய்வதில்லை என்று சொன்னார்கள் என்றும் கேட்டார்.
ஒருவருக்கு நான்காவது தசாவாக வரும் தசா அது எப்படிப்பட்ட மோசமான கிரகத்தின் தசாவாக வந்தாலும் நன்மை செய்யும். நான் பார்த்தவரையில் மகரராசியில் இருந்தவர்கள் பெரியளவில் சாதித்தது குரு தசாவில் தான் சாதித்து இருக்கின்றார்கள்.
மகரராசியில் குரு தசா ஒருவருக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும் பிறர் சொல்லுகின்றார்கள் என்று சும்மா இருந்துவிடாதீர்கள். மகரராசியில் குரு தசாவ தவறவிட்டவர்கள் பிற தசாவில் முன்னேற்றம் காண்பது கடினமாக இருக்கும்.
உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனிதன்மையானவன் ஒவ்வொருவரின் ஜாதகமும் வேறுமாதிரியான பலனை கொடுக்கும். பொதுபலனாக பார்த்தால் மகரராசிக்கு குருதசா நல்லதை செய்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment