வணக்கம்!
ஜாதகத்தில் எப்படி இருந்தாலும் ஒரு வாரிசை வளர்க்கும் விதத்தில் தான் அந்த வாரிசு எப்படி இருக்கும் என்பதை சொல்லலாம். பல குடுபங்களில் வாரிசுகளை ஒழுங்காக வளர்க்காமல் அந்த குடும்பம் ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு அழிவை நோக்கி செல்கின்றது.
ஒரு ஊரில் ஒருவர் கொடிகட்டி வாழ்பவராக இருப்பார் ஆனால் அவர்க்கு பிறந்த வாரிசு அவரின் காலத்திலேயே அழிவை சந்திப்பதை நீங்களே பல பேரை பார்த்து இருக்கலாம். ஏன் இப்படி நடக்கின்றது அவர்க்கு ஜாதகத்தில் கட்டங்கள் சரியில்லை என்றால் கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும். வளர்ப்பு முறையில் சரி இருக்காமல் இருக்கும்.
ஒருத்தருக்கு ஒரு பணக்காரர் வீட்டில் பிறக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக ஜாதகத்தில் அதற்குள்ள நல்ல அமைப்பு இருக்கும் ஆனால் அந்த நல்ல பையனை வளர்க்கும் விதத்தில் தான் தவறாக அமைந்துவிடும். ஜாதகத்தில் அதற்கு வழி இருப்பதால் தானே என்று கேட்கவேண்டாம். பலரின் ஜாதகத்தில் இதற்கு வழி இல்லை என்றே சொல்லலாம்.
நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் நீங்கள் உங்களின் வாரிசுகளுக்கு நிறைய கற்றுக்கொடுங்கள். குடும்பத்தின் தரத்தைபற்றி நிறைய சொல்லிக்கொடுங்கள் மற்றும் எது நல்ல வழி என்பதையும் நீங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மட்டுமே உங்களின் வாரிசுகள் நன்றாக வளரும்.
நிறைய குடும்பங்களில் தங்களின் வாரிசுகளை பெண்கள் கெடுத்துவிடுகின்றனர். நிறைய செல்லம் கொடுத்துஅவர்களை உருபடாமல் செல்வதற்க்கு வழி வகுத்துவிடுகின்றனர். இதனை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். உங்களின் வளர்ப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கண்டு பயப்படதேவையில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment