வணக்கம்!
நாளை மாட்டுப்பொங்கல் இதோடு உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் படையல் செய்யும் விழாவாகவும் இது இருக்கின்றது. முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அவர்களுக்கு படையல் செய்து சாமி கும்பிடும் ஒரு விழாவாகவும் இது அமைந்து இருக்கின்றது. தஞ்சாவூர் பகுதி முழுவதும் மிக சிறப்பாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது.
இன்றைய காலத்தில் நகர்புறங்களில் பொங்கல் என்றாலே வெளியூர் சென்று சுற்றுவது ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர். பொங்கல் விழாவை கொண்டாடுவதில்லை ஆனால் கிராமபுறங்களில் அனைவரும் இதனை கொண்டாடிவருகின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு மட்டும் இன்றி அன்றைய நாளில் முன்னோர்களுக்கு படையல் வைத்து படைப்பது ஒரு சிறப்பான ஒரு நிகழ்வு நடைபெறும். வருடந்தோறும் இதனை நான் உங்களுக்கு சொல்லிவருகிறேன்.
மாட்டுப்பொங்கல் அன்று இரவு நேரத்தில் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகள் மற்றும் அவர்களுக்கு என்று வேஷ்டி சட்டை மற்றும் புடவைகளை வாங்கி அதனை வைத்து படைத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை வருடந்தோறும் செய்யவேண்டும். நான் வருடம்தோறும் செய்து வருகிறேன்.
உங்களின் தாத்தாவிற்க்கு ஒரு உணவின் மீது அதிக ஈடுபாடு இருந்தால் அதனை நீங்கள் சமைத்து அதனை படைக்கவேண்டும். அசைவம் மற்றும் சைவம் இந்த வகையில் எந்த உணவாக இருந்தாலும் பரவாயில்லை அவர்க்கு என்ன பிடிக்கின்றதோ அதனை நீங்கள் செய்தால் போதும். கண்டிப்பாக அதனை செய்து படைத்தால் அது நிவர்த்தியாக இருக்கும்.
நாம் திலாஹோமம் மற்றும் வருடந்தோறும் வரும் பிரசித்திபெற்ற அமாவாசையில் செய்யும் சடங்குகளை விட இது சிறப்பான ஒரு சடங்கு இதனை நீங்கள் செய்தால் உங்களுக்கு உள்ள தோஷம் நீங்கி நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment