வணக்கம்!
பங்குனி உத்திரம் அன்று முருகன் கோவில் சென்று அனைவரும் வழிபட்டு வருவார்கள் ஆனால் தற்பொழுது கொராேனா பாதிப்பால் எந்த ஒரு கோவிலும் திறக்கப்படவில்லை அதனால் பங்குனி உத்திரம் அன்று வீட்டிலேயே இருந்து வழிபடும் முறையைப்பற்றி பார்ப்போம். பங்குனி உத்திரம் அன்று முருகனுக்கு திருக்கல்யாணம் என்பதால் அதனை தரிசித்தால் அல்லது அதற்க்காக விரதம் இருந்தால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
தற்சமயம் வீட்டிலேயே இருப்பதால் நீங்கள் முருகனுக்கு விரதத்தை மட்டும் செய்தால் போதும். காலையில் இருந்து எந்த ஒரு ஆகரமும் எடுக்காமல் இருந்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்துவிட்டு சமையல் செய்து மதியம் பூஜையறையில் பூஜை செய்துவிட்டு விரத சாப்பாட்டை சாப்பிடுங்கள். விரத காய்கறியில் வாழைக்காய் மற்றும் பரங்கிகாய் இருந்தால் சிறப்பான ஒன்று தற்சமயம் உங்களுக்கு காய்கறி கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் காய்கறியை வைத்து நீங்கள் சமையல் செய்துக்கொள்ளுங்கள். மாலை நேரத்தில் பூஜையறையில் தீபம் ஏற்றி மனதார முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
நீங்கள் கோவிலுக்கு செல்லமுடியவில்லை என்று கவலைப்படதேவையில்லை இந்த வழிபாட்டை செய்தாலே போதுமானது. ஜாதகத்தில் செவ்வாயால் நீசம் பெற்றால் அவருக்கு துணிவு மற்றும் நிலங்கள் இருக்காது. என்ன தான் பாடுபட்டாலும் ஒரு நிலம் தனக்கு இல்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கும். செவ்வாய் பலம் இழந்து காணப்படும் அனைவரும் இந்த வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.
இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவு தந்திருக்கிறேன் அதனை பாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment