Followers

Friday, February 20, 2015

வழிகாட்டி


வணக்கம் !
          ஒரு வேலை செய்யவேண்டும் என்றால் அதற்கு ஒரு குரு தேவை. வழிகாட்டுவதற்க்கு ஒரு வழிகாட்டி வேண்டும். கலியுகத்தில் அதனை தான் யாரும் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

ரவுடியாக இருந்தாலும் அதனை வழிநடத்த வழிகாட்டி என்பவர் ஒருவர் வேண்டும் என்பதை உணர்த்துவதற்க்கு தான் சுக்கிரன் என்ற கிரகம் இருக்கிறது. அசுரகுலத்திற்க்கு வழிகாட்டியாக சுக்கிராசாரியார் என்பர் இருந்தார். ரவுடி எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று தான்தோன்றிதனமாக செயல்படவில்லை. ஒருவரின் வழிகாட்டிதல் பேரில் தான் செயல்பட்டார்கள்.

தற்காலத்தில் யாருக்கும் வழிகாட்டி என்பவர் இருப்பதுபோல் தெரியவில்லை. தான்தோன்றிதனமாக செயல்படுகிறார்கள்.எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கு வழிகாட்டி என்பவர் ஒருவர் மட்டும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அந்த காரியத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.

உங்களுக்கு ஒரு ஆலாேசகரை நீங்கள் நியமித்துக்கொள்ளுங்கள். உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுபவர்களாக அதே நேரத்தில் எந்த விதத்திலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்க்கும் ஒரு வழிகாட்டியை நியமித்துக்கொண்டால் உங்களின் வாழ்வு அனைத்திலும் வெற்றிப்பெற்ற வாழ்வாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சிவபூஜை பகுதி 2


வணக்கம் !
          நேற்று சிவபூஜையைப்பற்றி சொல்லிருந்தேன். அதன் தொடர்ச்சி இது.
சிவபூஜையில் அபிஷேகம் பொருட்கள். 

தேன் குரல் வளம் பெற
எலும்மிச்சை பழம் எமன் பயம் நிவர்த்தி
நெய் மோட்சம்
அன்னம்  இறைவன் அருள் பெற
விபூதி எல்லா நன்மையும் பெற
பன்னீர் மகிழ்ச்சி
சந்தனம் உயர் பதவி
நார்த்தங்காய் குடும்ப ஒற்றுமை
மாம்பழம் வெற்றி
குங்குமம் தாலி பாக்கியம்
கரும்புச்சாறு ஆத்ம சாந்தி இனிய வாழ்வு
சொர்ணாபிஷேகம் குபேர வாழ்க்கை

எளிமையாக கொடுத்து இருக்கிறேன். இதனை எல்லாம் நீங்கள் பயன்படுத்தி அபிஷேகம் செய்துக்கொள்ளுங்கள்.

அனைத்து அபிஷேகமும் முடிந்தவுடன் ஊதுவத்தி சாம்பிராணி வைத்து  பஞ்சதீபம் ஏற்றி தீபாராதனை காட்டுங்கள்.

முதலில் செய்யும்பொழுது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கச்செய்யும். பழக பழக நல்ல முறையில் நீங்கள் அபிஷேகம் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். நல்ல முறையில் நீங்கள் அபிஷேகம் செய்து சிவஅருளை நீங்கள் பெறுங்கள். நல்ல வாழ்வை வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவில் தரிசனம்


வணக்கம்!
         நேற்று மதியம் ஆலங்குடி குருஸ்தலம் செல்லலாம் என்று முடிவு எடுத்து கிளம்பினேன். என்னோடு வந்த நண்பர் முதலில் நாம் பட்டீஸ்வரம் சென்று வரலாம் அதன் பிறகு வரும் வழியில் ஆலங்குடி குரு ஸ்தலம் தரிசனம் செய்யலாம் என்று சொன்னார். அப்படியே செய்வோம் என்று கிளம்பினோம்.

பட்டீஸ்வரம் மாலை ஐந்து மணியளவில் கோவிலை அடைந்தேன். சிவன் தேனுபுரீஸ்வராக இருக்கிறார். அம்மன் ஞானாம்பிகையாக இருக்கிறாள். உள்ளே நாங்கள் செல்வதற்க்கும் மாலை பூஜை துவங்கியது. முதலில் தேனுபுரீஸ்வரை தரிசனம் செய்துவிட்டு பிறகு ஞானாம்பிகையை தரிசனம் செய்தோம். 

இந்த தலத்தில் உள்ள சிறப்பு என்ன என்றால் துர்கை அம்மன் தான். துர்கையின் தலைமை இடம் இந்த தலம் என்று சொல்லுவார்கள். துர்க்கை அம்மனுக்கு அதிகமுக்கியதுவம் கொடுத்து இருக்கிறார்கள். துர்க்கை அம்மனை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பொதுவாக தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களை பார்த்தால் கோவில்களின் வாசற்படியில் இருந்து கோவிலின் மூலவரை தரிசனம் செய்வதற்க்கு ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டியிருக்கும். அவ்வளவு பிரமாண்டாமாக கட்டி வைத்திருப்பார்கள். அப்படியே கல்லால் செதுக்கி வைத்திருப்பார்கள்.

இந்த கோவில்கள் எல்லாம் புராணக்காலத்து கதைகளோடு சம்பந்தப்பட்டு இருக்கும். மிக பழமையான கோவில்களாக இருக்கும். இப்படிப்பட்ட கோவில்களுக்குள் நாம் உள்ளுக்குள் செல்லும்பொழுது நமது பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட கோவிலாக நமக்குள் உள்ளூணர்வு ஒன்று ஏற்படும்.

எத்தனையோ கோடி மக்கள் தரிசனம் செய்த கோவில்களை நாம் தரிசனம் செய்யும்பொழுது நமது ஆத்மா மிகவும் தூய்மையானதாக இருக்கும் நமது கர்மாவும் நம்மை விட்டு செல்லும். தஞ்சாவூர் பகுதிக்கு நீங்கள் வரும்பொழுது இந்த பட்டீஸ்வரத்திற்க்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Thursday, February 19, 2015

சிவபூஜை பகுதி 1


வணக்கம்!
         சிவபூஜையைப்பற்றி சொன்னதில் இருந்து அதனைப்பற்றி நிறைய கேள்விகள் வந்தன. அதனை ஒரு சிலர் செய்யவும் தொடங்கிவிட்டனர். இந்த பதிவை சிவராத்திரி அன்றே அளிக்கவேண்டும் என்று இருந்தேன். அன்று எனக்கு பல வேலைகள் இருந்த காரணத்தால் உங்களுக்கு அளிக்கமுடியவில்லை. இன்று பார்க்கலாம்.

சிவபூஜை செய்வதற்க்கு நடராஜர் சிலை ஒன்றை கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். கடையில் வாங்கும்பொழுது அந்த சிலைக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்று கேட்டுவாங்குங்கள். ஒரு சில சிலைகள் அபிஷேகம் செய்யமுடியாது. அபிஷேகம் செய்யக்கூடிய சிலையை அவர்கள் தருவார்கள்.

பெரிய தட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு அதில் நடராஜர் சிலை வைத்துக்கொண்டு ஸ்ரீ ருத்ரம் ஆடியோவை ஒலிக்கவிட்டு பூஜையை தொடங்குங்கள். ஒரு அகல் விளக்குயில் தீபம் ஏற்றி வைத்துக்கொண்டு அதற்கு சிறிய தம்பளம் ஒன்றை வைத்து அகல் விளக்கை அதில் வைத்துக்கொள்ளுங்கள்.  

நடராஜருக்கு முதலில் தண்ணீரை வைத்து அபிஷேகத்தை ஆரம்பியுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யுங்கள். ஒவ்வொரு அபிஷேகம் முடிந்தவுடன் நடராஜருக்கு ஒரு திலகம் இட்டு தீபாராதனையை காண்பியுங்கள். முழுமையான அபிஷேகம் முடிந்தவுடன் நடராஜரை அபிஷேக தட்டியில் இருந்து எடுத்து வெளியில் வைத்துக்கொண்டு ஊதுவத்தி சாம்பிராணி போட்டு முடிந்தால் நைவேத்தியம் வைக்கலாம் அல்லது அவல் பொரி வைத்து ஐந்து தீபம் ஏற்றி தீபாராதனை காண்பியுங்கள்.

சிவன் அருள் பெற அபிஷேகம் பொருட்கள் அதன் பயன்கள்

முதலில் நல்லெண்ணையை சிலை முழுவதும் ஊற்றி நன்றாக உடல் மீது படுமாறு கைகளால் தேய்த்துவிடுங்கள். எண்ணெய் நாம் அபிஷேகம் செய்யும்பொழுது நமது கர்மவினைகள் அனைத்தையும் சிவன் எடுத்துவிடுவார்.

மஞ்சள் பொடியை எடுத்து சிறிய பாத்திரம் வைத்துக்கொண்டு அதில் தண்ணீரில் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கலக்கி அபிஷேகம் செய்யவேண்டும். மஞ்சள் பொடியை சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் மங்களம் பொங்கும்.

நாட்டு மருந்து கடையில் திரவியப்பொடி என்று கேட்டுவாங்குங்கள். திரவியப்பொடியை பாத்திரத்தில் போட்டு தண்ணீரை விட்டு நன்றாக கலக்கி அதனை அபிஷேகம் செய்யவேண்டும். திரவியப்பொடியை சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் பொருள் வளம் பெறமுடியும்.

நாட்டுமருந்துகடையில் நீங்கள் எல்லாப்பொருட்களும் வாங்குங்கள். வாசனைப்பொடி என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். அதனை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி அதனை அபிஷேகம் செய்யுங்கள். வாசனைப்பொடியை நாம் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது நமது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

மாவுப்பொடி இது அரிசிமாவுப்பொடி தான். வீட்டில் அரிசியை ஊறவைத்து மிக்ஸியில் கூட அடித்துக்கொள்ளலாம். இதனை அப்படியே எடுத்து அவரின் உடல் மீது படுமாறு வைக்கவேண்டும். இதனை தண்ணீரில் கலந்துவிடாதீர்கள். உடல் மீது வைப்பது தான் அபிஷேகம். மாவுப்பொடியை நாம் சிவனுக்கு பயன்படுத்தும்பொழுது மாந்தர் உயர்வு பெறலாம்.

நமக்கு எல்லாம் மிகப்பெரிய பலகீனம் நமது நினைவாற்றல் திறன். முக்கால்வாசி பேருக்கு நினைவாற்றல் திறன் இருப்பதில்லை. நெல்லிப்பொடியை கடையில் வாங்கி அதனை சிவனின் அபிஷேகத்திற்க்கு பயன்படுத்தும்பொழுது நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். இந்த பொடியை சிலைக்கு தேய்க்கலாம் அல்லது தண்ணீரில் கலந்துகூட பயன்படுத்தமுடியும்.

பால் இது பசும்பாலாக இருந்தால் நல்லது. இப்பொழுது பசும்பால் கிராமங்களில் கூட கிடைப்பது அரிதாகிவருகிறது. இயற்கையான பாலாக இருந்தால் நல்லது கிடைக்கவில்லை என்றால் கடையில் உள்ள பாலை வாங்கிக்கொள்ளுங்கள். பசும்பாலை அபிஷேகத்திற்க்கு பயன்படுத்துவதால் ஆயுள் விருத்தியடையும்.

இந்த காலத்தில் குழந்தைகள் ஒருவருக்கு பிறப்பது என்பதே மிகப்பெரிய விசயமாக இருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் அபிஷேகத்திற்க்கு தயிரை பயன்படுத்தும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் இருப்பவர்கள் அவர்களின் நல்வாழ்விற்க்கு இந்த அபிஷேகத்தை செய்யலாம்.

செல்வவளத்திற்க்கு நமது ஜாதககதம்பம் நிறைய சொல்லியுள்ளது அதனோடு இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பஞ்சாமிர்தம் வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது உங்களுக்கு நல்ல செல்வவளத்தை தரும்.

இந்த காலத்தில் பதவி என்று அலைபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். நீங்கள் இருக்கின்ற வேலையில் நல்ல பதவியை நீங்கள் அடையவேண்டும் என்றால் இளநீர் வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் மீதம் உள்ளவற்றை பார்க்கலாம்...

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 16, 2015

சிவனின் நாள்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று கோயம்புத்தூர் பயணத்தில் மருதமலை முருகனை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நல்ல தரிசனம். ராஜஅலங்காரத்தில் தரிசனம் கிடைத்தது. இன்று காலை தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன்.

நேற்று திடிர் பயணமாக மருதமலை முருகனை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று கிரிக்கெட் போட்டி என்று கேள்விப்பட்டேன். நான் கிரிக்கெட் பார்த்தது கிடையாது. இந்தியா பாகிஸ்தான் இரண்டுக்கும் போட்டி என்று நண்பர் சொன்னார், அடடா எனக்கு தெரியவில்லையே என்று சொன்னேன். தெரிந்து இருந்தால் உங்களுக்கு இந்த செய்தியை முதலிலேயே சொல்லிருப்பேன்.

கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் உள்ள முக்கால்வாசி மக்கள் பார்த்து இருப்பார்கள். ஒட்டுமொத்த மக்களின் எண்ணமும் கிரிக்கெட் மீது இருக்கும்பொழுது நாம் கடவுள் மீது பக்தியை வைத்தால் அந்த நேரத்தில் நாம் கடவுளிடம் இருந்து நிறைய பெற்றுவிடலாம்.

அடுத்தமுறை இப்படிப்பட்ட வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் கடவுளிடம் பக்தியை செலுத்துங்கள். மிக எளிதில் அவரை நீங்கள் அடைந்துவிடமுடியும். நம்மை யாரும் இன்று தீண்டவில்லை என்று இருக்கும் நேரத்தில் நாம் அவரை மனதில் நினைத்தால் பரவாயில்லை இந்த நேரத்திலும் என்னை நினைக்க ஆள் இருக்கின்றது என்று அவர் நமக்கு அருள் செய்வார்.

இன்றும் நாளையும் சிவனை நினைக்க மிக சிறந்த நாள். பிரதோஷ காலத்தில் நான் சிவன் கோவிலுக்கு செல்லுகிறேன். பூஜைக்கு தேவையான பொருளை வாங்கி கொடுத்துவிட்டு பூஜையில் கலந்துக்கொள்கிறேன். நாளை அம்மனுக்கு விஷேசமான நாள். நாளை அம்மனையும் இரவில் அப்பனையும் நினைத்துக்கொண்டே இருங்கள்.

இந்த வருடத்தில் நாளை நாள் மிகசிறந்த நாள். சிவனுக்கு ஒரு நாள் தான் அது சிவராத்திரி நாள். நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 15, 2015

சிவபூஜை


வணக்கம் நண்பர்களே!
                      சிவராத்திரி வரும் நேரத்தில் இந்த பதிவை உங்களுக்கு அளிக்கிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் சிவபூஜை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல பேர்கள் இதற்கு தயக்கம் காட்டினார்கள். ஒரு சில எனக்கு தெரிந்த நண்பர்கள் செய்கிறேன் என்று சொல்லி அதற்கு தயார் செய்தார்கள்.

சிவனை எப்படி வீட்டில் வைத்து வழிப்படுவது என்றும் ஒரு சிலர் என்னை கேட்டனர். சிவ லிங்கம் வாங்காமல் நடராஜரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடலாம். பூஜை முடிந்து நடராஜரை நீங்கள் வீட்டில் உள்ள பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம்.

வீட்டில் செய்வதற்க்கு பயமாக இருக்கின்றது என்றால் நீங்கள் வெளிஇடங்களுக்கு செல்லும்பொழுது இந்த வழிப்பாட்டை நீங்கள் செய்யலாம். சிவனுக்குரிய சிவராத்திரி அன்றே இந்த பூஜையை நீங்கள் செய்ய தொடங்கலாம். 

வடமாநிலங்களில் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு நீங்கள் சிவலிங்கத்திற்க்கு பூஜை செய்யுங்கள். வடமாநிலங்களில் நீங்களே சிவலிங்கத்திற்க்கு அபிஷேகம் செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 14, 2015

தெய்வ தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னை தேடிவந்து ஏதாவது ஒரு உதவி கேட்கிறார்கள். ஆன்மீகவழியில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்துவருகிறேன்.

ஒரு சிலருக்கு உடனே நடந்துவிடும். ஒரு சிலருக்கு கொஞ்ச காலம் ஏற்படும். ஏன் காலம் எடுத்து அவர்களுக்கு நடைபெறுகிறது என்பதை பல பதிவுகளில் நானே சொல்லிருக்கிறேன். ஒரே நாளில் நடக்கவேண்டும் என்று பல பேர்கள் வருகிறார்கள்.

உங்களுக்கு ஒரு ஆன்மீகவாதியிடம் சென்று நல்லது நடக்கவேண்டும் என்றால் உங்களின் புண்ணியகணக்கில் நிறைய நல்லது இருக்கவேண்டும். அப்படி புண்ணிய கணக்கில் இருக்கும்பொழுது உங்களுக்கு நல்லது உடனே நடக்கும். 

புண்ணியம் செய்யமுடியவில்லை என்றால் நிறைய கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வைத்திருங்கள். உங்களால் முடிந்தளவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவேண்டும். முடிந்தால் ஒரு ஆன்மீகவாதியை வைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வாருங்கள். நிறைய கோவில்களை தரிசனம் செய்யும்பொழுது உங்களின் ஆத்மா பலப்படும்.

சனிதசாவைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிருந்தேன். கோயம்புத்தூர் விசிட் சென்று வந்தவுடன் எழுதுகிறேன். இப்பொழுது பதிவுகளில் நிறைய கருத்துக்களை சொல்ல தயங்குகிறேன். பதிவில் எழுதியவுடன் அந்த கருத்துகளை எடுத்து பல புதிய பதிவுகள் பிறரின் பதிவுகளில் எழுதப்படுகிறது. என்னை சந்திக்கும்பொழுது உங்களுக்கு தேவையானவற்றை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு