Followers

Friday, May 8, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          இன்று காலை தஞ்சாவூர் வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்தேன். சென்னையில் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டாலும் தொழில் நண்பர்களின் அலுவலகத்தில் உள்ள வேலை காரணமாக வெளியில் உள்ள நண்பர்களை சந்திக்க முடியவில்லை.

அம்மனை வைத்து வேலை செய்தாலும் ஒவ்வொரு அலுவலகமாக நானே சென்று பார்க்கும்பொழுது அங்கு தடையின்றி வேலை வேகமாக நடைபெறும். ஒவ்வொரு நண்பர்களின் வீட்டிற்க்கும் நான் செல்வதின் நோக்கமே அவர்களின் மொத்த பிரச்சினையும் தீரும் என்பதற்க்காக செல்லுகிறேன்.

ஒவ்வொரு வாரத்திற்க்கும் பல ஊர்களுக்கு செல்லுகிறேன். அத்தனை ஊர்களையும் நான் பதிவில் சொல்லமுடியாது. நீங்கள் என்னை சந்திக்க நினைத்தால் என்னுடைய மொபைல் நம்பருக்கு மெசேஷ் செய்துவிடுங்கள். அந்த ஊருக்கு வரும்பொழுது உங்களை நான் சந்திக்கிறேன். பழைய நண்பர்களாக இருந்தால் போனில் கூப்பிட்டு சொன்னால் போதும் உங்களை வந்து சந்திக்கிறேன்.

சென்னையில் அடிக்கும் வெயில் கொடுமையாக இருந்தது. அந்த வெயிலும் பல இடங்களுக்கு சென்று நண்பர்களை பார்த்துவிட்டு வந்தேன். பல நண்பர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் மிக குறைந்த காலத்தில் நல்ல வாழ்க்கையை அம்மன் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறது.

பதிவில் வரும் அனைவரையும் உடனே சந்தித்துவிடமுடியாது. ஒவ்வொருவராக சென்று பார்த்து அவர்களின் பிரச்சினையை தீர்த்து வருகிறேன். புதிய நண்பர்கள் பொறுமையாக நான் சொல்லுவதை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். நல்ல வாழ்க்கையை வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          அம்மன் பூஜை நாளை  09-05-2015 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு பங்களித்தவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்
திரு மருதுபாண்டியன் அவர்கள்
திரு சரவணபாபு அவர்கள்
திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்

கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
திருப்பூரை சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள்

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர். நாளை மாலை நேரத்தில் பூஜை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 4, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          கோயம்புத்தூர் பயணம் முடித்து சனிக்கிழமை அன்று இரவே தஞ்சாவூர் கிளம்பிவிட்டேன். ஒரு நாள் மட்டும் தான் கோயம்புத்தூரில் இருந்தேன். சனிக்கிழமை அன்று பொள்ளாசி மாசாணியம்மன் கோவில் சென்று வந்தேன்.

ஒவ்வொரு கோவிலாக சென்று பார்க்கும்பொழுது ஒவ்வொரு அனுபவம் ஏற்படுகிறது. இந்த கோவிலில் ஒரு புதிய அனுபவம் ஒன்று இருந்தது. மிளகாய் அரைத்து அம்மனுக்கு பூசுவதாக ஒரு சடங்கு செய்வார்களாம்.

பொதுவாக இந்த மாதிரியான விசயங்களில் தலையீடு செய்யவேண்டாம் என்று தான் நான் பிறர்க்கு சொல்லுவேன். அதே நேரத்தில் உங்களின் வேண்டுதலை இப்படி செய்யாமல் தீபம் அல்லது அர்ச்சனை இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் வேண்டுதல் வையுங்கள்.

மிளகாய் அரைத்து பூசுவது அந்த கோவிலின் வழக்கமாக இருந்தாலும் நீங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் நல்ல வழியில் வேண்டுதல் வைத்து நிறைவேற்றிக்கொள்வது நல்லது. 

சென்னையில் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். சென்னை வருவதாக திட்டம் இருக்கிறது. சென்னை வரும்பொழுது உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 2, 2015

நம்பினால் நம்புங்கள்


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் தினசரி செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் விபத்துக்கள் நடைபெறுவதை காண்பிப்பார்கள். தினமும் ஏதாவது விபத்துக்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது.

விபத்துக்கு பல காரணங்களை சொல்லுகின்றார்கள். ஒரு இடத்தில் மட்டும் அதாவது ஒரு பகுதியில் மட்டும் அடிக்கடி விபத்து நடைபெறும் அந்த பகுதியில் விபத்துபகுதி என்று பலகை எழுதி வைத்து இருப்பார்கள்.

ஒரே இடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால் அந்த பகுதிக்கு அருகில் ஏதாவது ஒரு தேவதை இருக்கும். அந்த தேவதை அந்த சாலையை கடக்கும்பொழுது குறிப்பிட்ட பகுதியை கடக்கும்பொழுது அப்பொழுது செல்லும் நபர்கள் விபத்தால் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் விபத்து நடந்த பகுதிக்கு நான் சென்று பார்த்து இருக்கிறேன். விபத்து நடந்த பகுதிக்கு அருகில் அதன் சுற்றவட்டாரத்தில் ஒரு தேவதையின் நடமாட்டம் இருக்கின்றது.

எங்களின் ஊருக்கு அருகில் ஒரு இடம் இருக்கின்றது. அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும். அந்த பகுதியில் அருகில் எந்த தேவதையும் இல்லை ஆனால் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஆலமரம் இருக்கின்றது. அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு தேவதை நான் சொன்ன வழியாக செல்லுகிறது. 

பத்து கிலோ மீட்டர் அளவுக்கு அந்த தேவதை குறுக்காக சென்று வருகிறது. பத்து கிலோ மீட்டரில் இரண்டு சாலைகள் குறுக்கீடு இருக்கிறது. இரண்டு சாலையிலும் அது குறுக்கீடும் இடத்தில் விபத்து நடக்கிறது. 

ஒரே இடத்தில் தான் அது குறுக்கிடுகிறது. சரியாக அதே இடத்தில் பல விபத்துக்கள் நடந்து இருக்கிறது. பல உயிர்களை காவு வாங்கி இருக்கின்றது.

இதனை எல்லாம் நம்புவது கடினம் ஆனால் அது தான் உண்மை. நீங்கள் ஆன்மீக பயிற்சி செய்தால் இதனை ஒரு சோதனையாக செய்துப்பாருங்கள். நான் சொல்லுவது உண்மை என்று தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 1, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          
                அம்மனின் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதுவரை அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றிக்கொடுத்த நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம்.

புதிய வேண்டுதல் வைப்பவர்கள் அம்மன் பூஜை அன்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாத அம்மன் பூஜைக்குள் அம்மன் அதனை உங்களுக்கு நிறைவேற்றிக்கொடுக்கும்.

பணம் அனுப்புவர்கள் தங்களின் பெயர் மற்றும் ஊர் மொபைல் நம்பரை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.

இன்று மாலை கோயம்புத்தூர் பயணம். கோயம்புத்தூர் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளலாம். கோயம்புத்தூர் சென்றுவிட்டு அங்கிருந்து ஏதாவது ஒரு இடத்திற்க்கு செல்வது உண்டு. ஒரு நாளில் திரும்பிவிடுவேன். ஒய்வு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன். சந்திக்க விரும்பும் புதிய நண்பர்கள் தங்களின் பெயரை எனக்கு மெசேஷ் செய்துவிடுங்கள். உங்களை நான் கூப்பிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஒருவர் போதும்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் சோதிடர்களுக்கு தெரிந்த கோவில்களை விட ஜாதகம் பார்க்க வரும் நபர்களுக்கு அதிக கோவில் தெரியும். சோதிடத்தை பற்றியும் அதிகம் மக்களுக்கு தெரியும்.

நம்மை தேடி ஒருவர் வந்தால் அவர் என்னிடமே சொல்லுவார் அங்கு பெரிய சாமியார் இருக்கிறார். அவரிடம் நான் பல முறை சென்று இருக்கிறேன். அவர் நிறைய நல்லது செய்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள். அவரிடம் சென்று நல்லது நடந்த பிறகு எதற்கு என்னிடம் வருகிறீர்கள் என்று கேட்பது உண்டு.

ஒரு தெருவில் பத்து சோதிடன் இருந்தால் அந்த பத்து பேரையும் சந்தித்து கேள்வி கேட்டால் குழப்பம் மட்டுமே மிஞ்சும். அது போல் தான் ஒன்று நடக்கவேண்டும் என்றால் ஒரு ஆளை சார்ந்து இருப்பதே நல்லது.

ஒருவர் ஒரு காலம் கொடுத்து இந்த காலத்திற்க்குள் இது நடைபெறும் என்றால் அவர் அதற்கான வேலையை செய்துக்கொண்டு இருப்பார். அவர் செய்யும் வேலையில் குறுக்கீடு வரும்பொழுது அந்த வேலை நடைபெறாமல் போய்விடும்.

என்னை விட்டு போககூடாது என்பதற்க்காக இதனை சொல்லவில்லை எங்கு சென்றாலும் உங்களுக்கு காரியம் நடைபெறும் வேண்டுமானால் நீங்கள் அவரை மட்டும் தான் நம்பி இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம்!
          இன்றைய மாதம் நிறைய கருத்துக்களை தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன். மனிதன் எல்லா வளத்தையும் பெற நினைத்தாலும் வாழ்வின் இறுதிக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

நாம் நிறைய சேர்த்து வைத்தாலும் அது எல்லாம் வீண் என்று நமக்கு தோன்றும் நேரம் ஒரு இடத்தில் நமக்கு வரும். அந்த இடத்தில் கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை வீணடித்துவிட்டோம் என்று நினைக்கதோன்றும்.

உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சி மேற்க்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.இந்த ஜென்மத்தில் இருந்து விடபட ஒரு வழியை ஏற்படுத்தி தரும்.

தூக்கத்திலும் போனால் போகும் சுளி மாறினாலும் போகும் உயிர் என்பார்கள். மரணம் வரும் நேரத்தில் ஆன்மீக பயிற்சியை மேற்க்கொள்ளாமல் இதனை படித்தவுடன் உடனே ஆரம்பியுங்கள்.

உங்களுக்கு எல்லாம் நல்ல ஒரு ஆன்மீக ஆரம்பம் அமைய அம்மனிடம் பிராத்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு