Followers

Friday, May 1, 2015

ஒருவர் போதும்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் சோதிடர்களுக்கு தெரிந்த கோவில்களை விட ஜாதகம் பார்க்க வரும் நபர்களுக்கு அதிக கோவில் தெரியும். சோதிடத்தை பற்றியும் அதிகம் மக்களுக்கு தெரியும்.

நம்மை தேடி ஒருவர் வந்தால் அவர் என்னிடமே சொல்லுவார் அங்கு பெரிய சாமியார் இருக்கிறார். அவரிடம் நான் பல முறை சென்று இருக்கிறேன். அவர் நிறைய நல்லது செய்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள். அவரிடம் சென்று நல்லது நடந்த பிறகு எதற்கு என்னிடம் வருகிறீர்கள் என்று கேட்பது உண்டு.

ஒரு தெருவில் பத்து சோதிடன் இருந்தால் அந்த பத்து பேரையும் சந்தித்து கேள்வி கேட்டால் குழப்பம் மட்டுமே மிஞ்சும். அது போல் தான் ஒன்று நடக்கவேண்டும் என்றால் ஒரு ஆளை சார்ந்து இருப்பதே நல்லது.

ஒருவர் ஒரு காலம் கொடுத்து இந்த காலத்திற்க்குள் இது நடைபெறும் என்றால் அவர் அதற்கான வேலையை செய்துக்கொண்டு இருப்பார். அவர் செய்யும் வேலையில் குறுக்கீடு வரும்பொழுது அந்த வேலை நடைபெறாமல் போய்விடும்.

என்னை விட்டு போககூடாது என்பதற்க்காக இதனை சொல்லவில்லை எங்கு சென்றாலும் உங்களுக்கு காரியம் நடைபெறும் வேண்டுமானால் நீங்கள் அவரை மட்டும் தான் நம்பி இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: