வணக்கம்!
கோயம்புத்தூர் பயணம் முடித்து சனிக்கிழமை அன்று இரவே தஞ்சாவூர் கிளம்பிவிட்டேன். ஒரு நாள் மட்டும் தான் கோயம்புத்தூரில் இருந்தேன். சனிக்கிழமை அன்று பொள்ளாசி மாசாணியம்மன் கோவில் சென்று வந்தேன்.
ஒவ்வொரு கோவிலாக சென்று பார்க்கும்பொழுது ஒவ்வொரு அனுபவம் ஏற்படுகிறது. இந்த கோவிலில் ஒரு புதிய அனுபவம் ஒன்று இருந்தது. மிளகாய் அரைத்து அம்மனுக்கு பூசுவதாக ஒரு சடங்கு செய்வார்களாம்.
பொதுவாக இந்த மாதிரியான விசயங்களில் தலையீடு செய்யவேண்டாம் என்று தான் நான் பிறர்க்கு சொல்லுவேன். அதே நேரத்தில் உங்களின் வேண்டுதலை இப்படி செய்யாமல் தீபம் அல்லது அர்ச்சனை இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் வேண்டுதல் வையுங்கள்.
மிளகாய் அரைத்து பூசுவது அந்த கோவிலின் வழக்கமாக இருந்தாலும் நீங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் நல்ல வழியில் வேண்டுதல் வைத்து நிறைவேற்றிக்கொள்வது நல்லது.
சென்னையில் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். சென்னை வருவதாக திட்டம் இருக்கிறது. சென்னை வரும்பொழுது உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment