Followers

Wednesday, July 10, 2019

நல்ல வார்த்தை


வணக்கம்!
          ஒருவரின் வார்த்தைகள் அவரை உயர்த்தும். ஒருவரின் வார்த்தையை பிரயோகப்படுத்தும்பொழுது அது எதிர்மறையான ஒரு எண்ணத்தை வரவழைப்பது போலவே வார்த்தைகள் இருக்ககூடாது. வார்த்தைகள் நன்றாக இருக்கவேண்டும்.

எங்களுக்கே வருகின்றோம் நாங்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தால் உடனே உங்களுக்கு பிரச்சினை வரப்போகின்றது தோஷம் இருக்கின்றது அங்கு பிரச்சினை இதில் பிரச்சினை என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.

பிரச்சினை என்று நாங்கள் சொல்லுவதால் அது பிரச்சினையாகவே உங்களுக்கு முடிந்துவிடும். முக்கால்வாசி சோதிடர்கள் பீடை பிடித்தவர்களாகவே இருப்பதற்க்கு காரணமாக இருப்பது அவர்கள் பிறரின் கர்மாவை பார்த்த காரணத்தால் வருவதில்லை அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால் வந்தது. 

நமது ஜாதகத்தால் வந்த கர்மாவிட நமது வார்த்தைகள் பயன்படுத்துவதால் வந்த கர்மா தான் அதிகமாக இருக்கும். எந்த நேரமும் தவறான வார்த்தைகள் பயன்படுத்தவதால் வந்த கர்மா அதிகமாக நமக்குள் இருக்கும்.

நீங்கள் பேசும்பொழுது முடிந்தவரை எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள். உடனே உங்களுக்கு பலன் தரவில்லை என்றாலும் போக போக சரியாகிவிடும். நல்ல வார்த்தைகள் நல்ல வாழ்க்கையை உருவாக்கும் என்பதை போக போக தெரிந்துக்கொள்வீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 8, 2019

ஆடி மாத சிறப்பு பூஜை


வணக்கம்!
          அம்மன் கோவிலுக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வந்து இறக்கிக்கொண்டு இருக்கிறேன். அதனை அனைவருக்கும் வாட்ஸ்அப்பில் புகைபடம் எடுத்து அனுப்பியிருக்கிறேன். அனைவரும் இந்த பணியில் பங்குக்கொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் அனைத்து மூலப்பொருட்களையும் இறக்கிக்கொண்டு வேலையை ஆரம்பிக்கவேண்டும் என்பதால் அனைவரும் இதில் தங்களின் பங்களிப்பை அளியுங்கள்.

உங்களின் நட்சத்திரம் என்ன என்பதை பார்த்து தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் உங்களின் செயல்பாடுகளை வைத்துக்கொள்ளவேண்டும். பெயரை கூட உங்களின் நட்சத்திரத்திற்க்கு தகுந்தார் போல வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவார்கள்.

நட்சத்திரத்திற்க்கு தகுந்தமாதிரி பெயரை வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அந்த நட்சத்திரன் தன்மையில் எப்படி இருக்கவேண்டும் அதன் குணம் என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்தார் போல் வைத்துக்கொள்ளுங்கள்.

இத்தனை வருடம் உங்களின் பெயரை தாங்கி வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் இதன்பிறகு மாற்றிக்கொள்ளவேண்டாம். நட்சத்திரத்திற்க்குரிய குணங்களை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் உள்ளவர்களும் எப்படி தன்னை மாற்றிக்கொள்ளலாம் என்பதை இனிவரும் பதிவில் சுருக்கமாக தருகிறேன். அதனை வைத்து உங்களின் குணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஆடி மாதம் அம்மன் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் எல்லாம் நடைபெறுகின்றன. இதில் பலர் தங்களின் குடும்பங்களுக்காக தனியாக செய்கின்றீர்கள். தங்களுக்கும் விருப்பும் இருந்தால் என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். பாதி நாட்கள் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது என்பதால் முன்கூட்டியே இதற்கு தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 5, 2019

தீர்வுகள் பகுதி 2


வணக்கம்!
          உங்களின் இராசிக்கு எந்த இராசி நல்லது செய்யும் எந்த இராசி கெடுதல் செய்யும் என்பதை நன்கு அறிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் உங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை அமைத்துக்கொள்ளுங்கள் என்பது அவர்களிடம் கொஞ்சம் உஷாராக இருந்து வாழ்க்கையை செலுத்துங்கள் என்று சொல்லுகிறேன்.

நம்முடைய இராசிக்கு எட்டாவது இராசியாக ஒரு இராசி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் இந்த எட்டாவது இராசியோடு நீங்கள் என்ன தான் பழகினாலும் அந்த இராசியினர் உங்களை எதாவது ஒரு இடைஞ்சலை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

உங்களின் இராசிக்கு ஆறாவது இராசியாக வருகின்றவர் உங்களை எதிர்த்துக்கொண்டே இருப்பார். உங்களிடம் சண்டை சச்சரவு போட்டுக்கொண்டே இருப்பவர்கள் உங்களின் இராசிக்கு ஆறாவது இராசியாக வரும் நபர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் எதிர்த்துக்கொண்டே இருப்பார்களா என்று நினைக்கலாம். பெரும்பாலும் நமக்கு நல்ல நேரம் சரியில்லை என்றால் அல்லது நமக்கு கெடுதல் தசா நடக்கின்றது என்றால் அவர்கள் எதிர்ப்பார்கள்.நல்ல நேரம் நடக்கும்பொழுது இவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று சாெல்லலாம்.

பெரும்பாலும் உங்களுக்கு நல்ல இராசியாக ஒத்துக்கொள்ளும் இராசியாக வரும் நபர்களிடம் அதிக தொடர்பு வைத்துக்கொள்ளும்பொழுது உங்களின் வாழ்க்கை நன்றாக செல்லும். நம்பிக்கை உடையவர்களை தேர்ந்தெடுக்க இந்த மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 


Thursday, July 4, 2019

தீர்வுகள் பகுதி 1


வணக்கம்!
         ஒருவருக்கு ஒரு பிரச்சினை வருகின்றது என்றால் அந்த நேரத்தில் அவர்கள் முதலில் செய்யவேண்டியவை என்ன என்று பார்க்கலாம். ஒரு பெரிய சிக்கல் வரும்பொழுது அதில் இருந்து மீள்வது எப்படி என்பதை யோசிப்பதை விட அதில் இருந்து தற்காத்துக்கொள்வது என்பதை தான் யோசிக்கவேண்டும்.

பெரிய அடியாக வரும்பொழுது அதனை எதிர்த்து நிற்பது கடினம் ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு உங்களின் இராசிநாதனுக்கு ஒரு தீபம் ஏற்றி ஒரு அர்ச்சனை செய்துவிடவேண்டும். இப்படி செய்தால் வருகின்ற பிரச்சினையின் தீவிரம் குறைந்துவிடும். 

அதிவேகமாக உங்களை தாக்கவரும் பிரச்சினை குறைந்த வேகத்தோடு உங்களை தாக்கும். தாக்குபிடிக்கும் சக்தி உங்களுக்கு கிடைத்துவிடும். அதே நேரத்தில் உங்களின் இஷ்ட தெய்வம் நன்றாக இருந்தாலும் அதுவும் உங்களை காக்கும்.

பிரச்சினை வந்துவிட்டது அதில் இருந்து உடனே மீண்டுவிடவேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்றாகவே இருக்கும். பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்க்கு என்று ஒரு சில காலம் இருக்கும் அது வரை பொறுமையை கடைபிடிக்கவேண்டும்.

எனக்கு பிரச்சினை வந்துந்து மீண்டு அடுத்த நகர்வுக்கு சென்றுவிடவேண்டும் என்று நினைப்பது மனிதன இயல்பு தான் ஆனால் கிரகங்கள் உடனே நகர்வது இல்லை அதற்குரிய காலத்தை எடுத்துக்கொள்கின்றது அல்லவா. அதுவரை பொறுமையாக நகர்த்த வேண்டும்.

கிரகத்தின் வேகம் குறையவேண்டும் அப்பொழுது தான் நாம் அடுத்து எடுத்து வைக்கும் அடி மிகச்சரியாக நல்லதாக நமக்கு அமையும். எளிமையாகவும் நமக்கு இருக்கும். எந்த வித தடங்கலும் இல்லாமல் காரியத்தை சாதிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 3, 2019

தீர்வுகள்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் எந்த நிலையில் கிரகங்கள் இருந்தாலும் அதாவது மோசமான பலனை தரக்கூடிய நிலையில் கிரகங்கள் இருக்கும்பொழுதும் உங்களின் சாமர்த்தியமான திறமையால் அதனை வென்று சென்றுவிடமுடியும்.

கிரகங்கள் தான் நம்மை ஆட்டி படைக்கின்றது இதில் இருந்து எப்படி திறமையாக செயல்படமுடியும் என்று கேட்கலாம். கண்டிப்பாக பொறுமையாக இருந்து அதோடு திறமையாக இருந்தால் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

பரிகாரம் என்பதை மட்டும் செய்துக்கொண்டு தான் இதனை கடக்கவேண்டும் என்பதில்லை. நாம் நிறைய வழிபாட்டு தலங்கள் மற்றும் புண்ணியதீர்த்தங்களில் சென்றாலே அதற்கான வழிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

நம்மிடம் கிடைக்கும் காெஞ்ச பணத்தையாவது சேமித்து வைத்துக்கொண்டு அதனை வைத்து உங்களால் முடிந்த கோவிலுக்கு சென்று வந்தாலே போதுமானதாகவே இருக்கும். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வழி இல்லை என்றாலும் நீங்கள் மட்டும் சென்று வந்தாலே போதுமானதாகவே இருக்கும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதில் உள்ள கிரகங்களுக்கு தகுந்த மாதிரியாக உங்களின் வாழ்க்கை மற்றும் உங்களின் நடத்தையும் மாற்றிக்கொண்டு வாழலாம். ஜாதகத்தில் உள்ள பல விசயங்களை நீங்களே அலசி ஆராய்ந்து வழிபட்டுக்கொள்ளலாம். அதனைப்பற்றி இனி பதிவுகளில் கொஞ்சம் தருகிறேன். அதுவே பல வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 2, 2019

சோகத்தை தரும் பூ செடிகள்

வணக்கம்!
          வீட்டில் பூ செடிகளை வளர்ப்பது நல்லது என்று சொல்லுவோம் ஆனால் பூ செடிகளை வளர்த்தால் அந்த வீட்டில் ஒரு வித சோகம் நிலவும் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பூ செடிகளை வளர்க்க வேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்தும்.

பூ செடிகள் வளர்த்தால் வீட்டிற்க்கு சோகத்தை கொடுத்து அந்த சோகத்தில் இருந்து விடுபட அந்த பூக்களை பார்ப்பது போன்று ஒரு நிலையை ஏற்படுத்திவிடும். பல வீடுகளில் இதனை நான் பார்த்து இருக்கிறேன்.

பூ செடிகள் வளர்ப்பது அந்த வீட்டில் வறுமையையும் கொடுக்கின்றது. பூ செடிகளை வளர்த்து நீங்களே ஏன் வறுமையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பூ செடிகளை வளர்க்காமல் இருப்பதே நல்லது. பெரிய பணக்கார வீடுகளில் எல்லாம் பூ செடிகளை வளர்க்கின்றார்களே என்று கேட்கலாம். பெரிய பணக்கார வீடுகளிலும் சோகம் நிறைய இருக்கின்றது வெளியில் தெரியாமல் இருக்கின்றன.

பூ உங்களின் வீட்டிற்க்கு தேவைப்படுகின்றது என்றால் அதனை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது உங்களின் வீடுகளுக்கு அருகைமையில் இல்லாமல் வெளியில் உள்ள தோட்டங்களில் பூ செடிகளை வளர்த்துக்கொள்ளலாம்.

கோவில்களில் நந்தவனம் என்று தனியாக வைத்திருப்பார்கள். நந்தவனத்தில் இருந்து தான் கோவில்களுக்கு தேவையான பூக்கள் பறிக்க வேண்டும். இன்றைய காலத்தில் இதனை எல்லாம் அந்தளவுக்கு யாரும் பராமரிப்பது இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          நல்ல நிறைவாக பழனி பயணம் அமைந்தது. அனைவருக்கும் சார்பாகவும் வேண்டுதல் வைத்து நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்ற பிராத்தனையும் வைத்தேன். நீங்களும் நன்றாகவே இருப்பீர்கள்.

நாளை அமாவாசை சிறப்பு அம்மன் யாகம் நடைபெறும். உங்களின் வேண்டுதல்கள் என்னுடைய வாட்ஸ்அப்பில் அனுப்பி வையுங்கள். தங்களுக்காகவும் பிராத்தனை செய்யப்ப்படும். தங்களின் வேண்டுதல்களை உடனே அனுப்பி வைக்கவும்.

இரவு நேரத்தில் அம்மன் யாகம் நடைபெறும். அம்மனுக்கு அமாவாசை என்பது மிகச்சிறப்பான ஒரு நாளாக இருப்பதால் அனைவரும் இதில் வேண்டுதல்களை வைக்கலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை. அம்மன்பூஜைக்கு அனுப்பிய பணத்திலேயே இதனை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.

ஆடி மாதம் நெருங்கி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் சிறப்பான ஒரு நிகழ்வாகவே செய்துக்கொண்டு இருப்பேன். அம்மனுக்குரிய மாதம் என்று இதனை செய்வது உண்டு. இந்த வருடமும் ஆடி மாதத்தில் நிறைய பூஜைகள் செய்யபட இருக்கின்றன.

ஆடி மாதத்திற்க்குரிய பூஜைகள் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. நீங்களும் விருப்பட்டால் இதனை செய்துக்கொள்ளலாம். உடனே தொடர்புக்கொண்டு புக்கிங் செய்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு