Followers

Thursday, July 4, 2019

தீர்வுகள் பகுதி 1


வணக்கம்!
         ஒருவருக்கு ஒரு பிரச்சினை வருகின்றது என்றால் அந்த நேரத்தில் அவர்கள் முதலில் செய்யவேண்டியவை என்ன என்று பார்க்கலாம். ஒரு பெரிய சிக்கல் வரும்பொழுது அதில் இருந்து மீள்வது எப்படி என்பதை யோசிப்பதை விட அதில் இருந்து தற்காத்துக்கொள்வது என்பதை தான் யோசிக்கவேண்டும்.

பெரிய அடியாக வரும்பொழுது அதனை எதிர்த்து நிற்பது கடினம் ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு உங்களின் இராசிநாதனுக்கு ஒரு தீபம் ஏற்றி ஒரு அர்ச்சனை செய்துவிடவேண்டும். இப்படி செய்தால் வருகின்ற பிரச்சினையின் தீவிரம் குறைந்துவிடும். 

அதிவேகமாக உங்களை தாக்கவரும் பிரச்சினை குறைந்த வேகத்தோடு உங்களை தாக்கும். தாக்குபிடிக்கும் சக்தி உங்களுக்கு கிடைத்துவிடும். அதே நேரத்தில் உங்களின் இஷ்ட தெய்வம் நன்றாக இருந்தாலும் அதுவும் உங்களை காக்கும்.

பிரச்சினை வந்துவிட்டது அதில் இருந்து உடனே மீண்டுவிடவேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்றாகவே இருக்கும். பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்க்கு என்று ஒரு சில காலம் இருக்கும் அது வரை பொறுமையை கடைபிடிக்கவேண்டும்.

எனக்கு பிரச்சினை வந்துந்து மீண்டு அடுத்த நகர்வுக்கு சென்றுவிடவேண்டும் என்று நினைப்பது மனிதன இயல்பு தான் ஆனால் கிரகங்கள் உடனே நகர்வது இல்லை அதற்குரிய காலத்தை எடுத்துக்கொள்கின்றது அல்லவா. அதுவரை பொறுமையாக நகர்த்த வேண்டும்.

கிரகத்தின் வேகம் குறையவேண்டும் அப்பொழுது தான் நாம் அடுத்து எடுத்து வைக்கும் அடி மிகச்சரியாக நல்லதாக நமக்கு அமையும். எளிமையாகவும் நமக்கு இருக்கும். எந்த வித தடங்கலும் இல்லாமல் காரியத்தை சாதிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: