வணக்கம்!
வீட்டில் பூ செடிகளை வளர்ப்பது நல்லது என்று சொல்லுவோம் ஆனால் பூ செடிகளை வளர்த்தால் அந்த வீட்டில் ஒரு வித சோகம் நிலவும் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பூ செடிகளை வளர்க்க வேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்தும்.
பூ செடிகள் வளர்த்தால் வீட்டிற்க்கு சோகத்தை கொடுத்து அந்த சோகத்தில் இருந்து விடுபட அந்த பூக்களை பார்ப்பது போன்று ஒரு நிலையை ஏற்படுத்திவிடும். பல வீடுகளில் இதனை நான் பார்த்து இருக்கிறேன்.
பூ செடிகள் வளர்ப்பது அந்த வீட்டில் வறுமையையும் கொடுக்கின்றது. பூ செடிகளை வளர்த்து நீங்களே ஏன் வறுமையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பூ செடிகளை வளர்க்காமல் இருப்பதே நல்லது. பெரிய பணக்கார வீடுகளில் எல்லாம் பூ செடிகளை வளர்க்கின்றார்களே என்று கேட்கலாம். பெரிய பணக்கார வீடுகளிலும் சோகம் நிறைய இருக்கின்றது வெளியில் தெரியாமல் இருக்கின்றன.
பூ உங்களின் வீட்டிற்க்கு தேவைப்படுகின்றது என்றால் அதனை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது உங்களின் வீடுகளுக்கு அருகைமையில் இல்லாமல் வெளியில் உள்ள தோட்டங்களில் பூ செடிகளை வளர்த்துக்கொள்ளலாம்.
கோவில்களில் நந்தவனம் என்று தனியாக வைத்திருப்பார்கள். நந்தவனத்தில் இருந்து தான் கோவில்களுக்கு தேவையான பூக்கள் பறிக்க வேண்டும். இன்றைய காலத்தில் இதனை எல்லாம் அந்தளவுக்கு யாரும் பராமரிப்பது இல்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment