Followers

Saturday, November 12, 2016

திருமண வாழ்வு


ணக்கம்!
          நேற்று திருமணம் சம்பந்தப்பட்ட கருத்தை பார்த்தோம். மேலும் இன்று ஒரு சில தகவலை பார்க்கலாம். ஒரு திருமணத்திற்க்கு ஏழாவது வீடு எப்படி முக்கியமோ அதனை போல் நான்காவது வீடும் முக்கியம்.

நான்காவது வீடு சரியில்லை என்றால் வாழ்க்கையே வீண் என்று சொல்லிருக்கிறேன். நான்காவது வீட்டில் செவ்வாய் அல்லது சனி போன்ற கிரகங்கள் நின்றால் அது திருமண பந்தத்தை சரியாக கொண்டு வராது என்பது எனது அனுபவத்தில் நிறைய பார்த்து இருக்கிறேன்.

நான்காவது வீட்டில் தீயகிரகங்கள் இருக்கும்பொழுது திருமண வாழ்வில் கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. திருமண வாழ்வில் கசப்பு இல்லை என்றாலும் சம்பந்தப்பட்ட ஜாதகரின் துணைக்கு அல்லது அவருக்கு நோய் தாக்கி இறக்கும் சம்பவம் எல்லாம் நடக்கிறது.

நான்காவது வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் ஏழாவது வீடு சரியில்லை என்றாலும் கூட அவர்களின் திருமண வாழ்வு நன்றாக இருக்கின்றது. நான்காவது வீடு அந்தளவுக்கு நல்லதை கொடுக்கிறது என்று அர்த்தம்.

பழைய பதிவில் கூட ஒரு சோதிட தகவலுக்கு நான்காவது வீடு எந்தளவுக்கு நல்லது செய்யும் என்பதை சொல்லிருக்கிறேன். ஒரு ஜாதகத்தை எடுத்து நான்காவது வீட்டை கவனித்தாலே போதும் அவனின் வாழ்க்கை என்ன என்று தெரிந்துவிடும்.

நான்காவது வீட்டில் உங்களுக்கு அல்லது உங்களின் வாரிசுக்கு தீயகிரகங்கள் இருந்தால் ஆன்மீகவாதியோடு நிறைய கோவிலுக்கு செல்லுங்கள் இது தான் பரிகாரம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 11, 2016

தாலிபாக்கியம்


வணக்கம்!
          திருமணப்பொருத்தம் பார்க்கும்பொழுது ரஜ்ஜி பொருத்தம் என்ற ஒரு பொருத்தம் பார்ப்பது உண்டு. இது ஒருவரின் தாலிபாக்கியத்தை காட்டக்கூடிய ஒரு பொருத்தம். பொதுவாக திருமணப்பொருத்தம் என்பது நட்சத்திரத்தை வைத்து பார்க்ககூடிய பொருத்தமாக இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து பார்த்தால் தான் உண்மையான நிலையை கண்டறியமுடியும்.

ரஜ்ஜி பொருத்தம் என்பது தாலிபாக்கியத்தை காட்டக்கூடிய ஒரு பொருத்தம். தாலிபாக்கியம் இல்லை என்றால் திருமண வாழ்வு நன்றாக இருக்காது என்பார்கள். ரஜ்ஜி பொருத்தம் பார்க்கும்பொழுது ரஜ்ஜி தட்டுகிறது அதனால் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள்.

ரஜ்ஜி பொருத்தம் சுக்கிரனை முதன்மையாக வைத்து பார்க்ககூடிய ஒரு பொருத்தம். சுக்கிரன் தாலிபாக்கியத்தை தருகிறார் என்பது பொதுவான கருத்து. ரஜ்ஜி தட்டினால் கூட இன்றைய காலத்தில் திருமணம் செய்கிறார்கள். ரஜ்ஜி தட்டும்பொழுது அவர்கள் சுக்கிரனை வழிபட்டால் நல்லது என்பார்கள்.

சுக்கிரன் திருமண வாழ்வில் முதன்மை வகிக்கிறார் என்பது இந்த பொறுத்தத்தை வைத்தே நாம் கண்டுக்கொள்ளலாம். பலருக்கு இன்றைய காலத்தில் சுக்கிரன் கிரகம் நன்றாக இருப்பதில்லை. நன்றாக இருந்தால் அவர்களின் திருமண வாழ்வும் நன்றாக இருக்கும் சுகபோக வாழ்க்கையும் அனுபவிப்பார். 

பலருக்கு நன்றாக இல்லை என்றால் முதலில் அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்தால் கூட நடக்காது என்பது தான் உண்மை. உங்களின் ஜாதகத்தில் திருமணம் நடக்கவில்லை என்றால் உங்களின் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்கிறார் என்பதை பார்ப்பதோடு சுக்கிரனின் பலமும் இருக்கின்றதா என்பதை பாருங்கள். சுக்கிரன் பலமாக இருந்தால் திருமணம் உடனே நடந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருமணம் செய்ய ஏற்ற இடம்


ணக்கம்!
         இன்று பல நல்ல முகூர்த்தம். பல இடங்களில் திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண முகூர்த்தம் நடைபெறும் இடம் எல்லாம் அதிகபட்சம் திருமண மண்டபங்களில் நடைபெறுகிறது. திருமண மண்டபம் நடைபெறும் இடங்கள் எல்லாம் ஒரு காலத்தில் எப்படி இருந்தன என்பது நமக்கு தெரியாது.

பல மண்டபங்கள் சினிமா தியேட்டரை இடித்துவிட்டு கட்டப்பட்ட திருமண மண்டபங்களாக இருக்கின்றன. திருமண பந்தம் ஏற்படும் இடம் கோவிலாக இருந்தால் நல்லது. நமது ஆடம்பரத்தை திருமண மண்டபத்தில் தான் காட்டவேண்டும் என்பதில்லை. கோவிலில் திருமணத்தை வைத்துவிட்டு வரவேற்பை திருமண மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம்.

இன்றைய இளம்வயதில் உள்ளவர்களின் திருமண வாழ்வில் நிறைய பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக இது இருக்கும். இதுவரை திருமண மண்டபத்தில் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்திருந்தால் விட்டுவிட்டு இனிமேல் உள்ளவர்களின் திருமணத்தை கோவிலில் வையுங்கள்.

கோவிலில் திருமணம் வைத்தால் மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்க்கும் இருக்கின்ற தோஷம் நிவர்த்தியாகி திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். புகழ்பெற்ற கோவிலில் தான் வைக்கவேண்டும் என்பதில்லை உங்களின் ஊரில் உள்ள ஒரு கோவிலில் வைத்துக்கொள்ளலாம்.

சிவன் கோவிலில் பெரும்பாலும் திருமணம் நடத்தப்படுவதில்லை. ஒரு சில குறிப்பிட்ட சிவன் கோவிலில் மட்டும் திருமணம் நடத்துவார்கள். எல்லா கோவிலிலும் நடத்தப்படமாட்டார்கள். 

நீங்கள் திருமண கோவிலை தேர்ந்தெடுக்கும்பொழுது அது முகூர்த்தம் செய்கின்ற கோவிலாகா இருந்தால் நல்லது. அதாவது ஒரு சிலர் மாரியம்மன் கோவிலை தேர்ந்தெடுப்பார்கள். மாரியம்மன் கோவிலில் திருமணம் நடத்தலாம். இப்படிப்பட்ட கோவிலை தேர்ந்தெடுத்து திருமணத்தை வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 10, 2016

எட்டில் சந்திரன் ஏழரைசனி


ணக்கம்!
          ஒருவருக்கு எட்டில் சந்திரன் இருந்து அவருக்கு ஏழரை சனி ஆரம்பித்தால் போதும் அவரை போட்டு அடி அடி என்று அடிக்கும் என்று சொல்லலாம். ஏழரை சனிக்கு முன்னாடி ஆடி காரில் சென்றவர் ஏழரை சனியில் வீட்டுக்குள் முடங்கிவிடுவார்.

சந்திரன் எட்டில் இருக்கும்பொழுது பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை அதாவது கணவன் மனைவிக்குள் அந்தளவுக்கு ஒற்றுமை என்பது இருக்காது. ஏழரை சனியின் காலத்தில் வீட்டிற்க்குள் இருந்தால் கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த இந்த ஏற்பாடு ஏழரை சனி செய்யும் என்பது மட்டும் உண்மை.

சந்திரன் எட்டில் இருந்தால் இது மட்டுமா என்று கேட்கலாம். ஒரு சிலருக்கு யோகமாகவும் அமைந்திருக்கிறது அது எப்படி என்றால் அவருக்கு ஏழரை சனி நடக்கும் காலத்தில் நல்ல தசா அல்லது குரு தசா நடக்கும் என்று சொல்லலாம்.

குரு தசா நடந்தால் பெரும்பாலும் தீயபலன் கொடுப்பதில்லை. ஒரு சிலருக்கு குரு தசாவில் ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால் அவர் குரு தசா காட்டும் காரத்துவத்தில் இருந்து விலகி இருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

எதற்கும் பரிகாரத்தை பரிந்துரைக்கும் வழக்கம் நம்மிடம் இருப்பதால் பாக்கியஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணியஸ்தானம் காட்டும் காரத்துவத்தை கையில் எடுத்தால் இதற்கு பரிகாரமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாமியார் வீட்டில் மரியாதை எப்படி?


வணக்கம்!
          நேற்று சுகஸ்தானத்தைப்பற்றி ஒரு சில விசங்களை சொல்லிருந்தேன். அதனைப்பற்றி மேலும் கொஞ்சம் பார்க்கலாம். இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் முடிந்தவுடன் அவர்களின் மாமனார்களின் வீடுகளுக்கு தஞ்சம் புகுந்துவிடுகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.

மாமனார் வீடுகளுக்கு எப்பொழுதாவது சென்று வந்தால் மரியாதை இருக்கும். எப்பொழுதும் அங்கே கிடந்தால் மரியாதை என்ன கிடைக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. 

ஒரு நல்ல பையன் மாமனார் வீட்டிற்க்கு ஒரு முறை செல்லும்பொழுது அங்கு அவர்க்கு இராஜமரியாதை கொடுத்தால் அந்த பையனுக்கு நான்காவது வீடு என்பது நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

ஒரு நல்ல பையன் மாமனார் வீட்டிற்க்கு செல்லும்பொழுது அங்கு மரியாதை என்பது கிடைக்கவில்லை என்றால் அவர்க்க்கு நான்காவது வீடு நன்றாக இல்லை என்று அர்த்தம். ஒரு சிலருக்கு அடி கூட விழும் அவர்களுக்கு எல்லாம் படுமோசமாக நான்காவது வீடு இருக்கும் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

மிதுன ராசியினர்க்கு மாமனார் வீடு செட்டாவது என்று பொதுவாக சொல்லுவார்கள். நான் பார்த்தவரை மிதுனராசியினர் மாமியார் வீட்டில் வீடு கூட்டும் விளக்கமாறு அடி வாங்கியிருக்கிறார்கள்.

ஒருவருக்கு நான்காவது வீடு செவ்வாய்யாக வரும்பொழுதும் அல்லது நான்காவது வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர்க்கும் அவரின் மாமியார் வீட்டிற்க்கும் அடி தடி கூட நடந்துள்ளது.

ஒருவருக்கு நான்காவது வீட்டில் சுக்கிரன் இருந்தால் அவர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்.கூடுதலாக ஒரு நல்ல விசயம் என்ன என்றால் அங்கு நிறைய மச்சினியும் இருப்பார்கள். மாப்பிள்ளைக்கு யோகம் தான் என்று சொல்லலாம்.

உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீடு எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். நான்காவது வீடு நன்றாக இருந்தால் நல்லது அப்படி இல்லை என்றால் அடி நிச்சயம்.

4 மணிக்கு எட்டில் சந்திரன் ஏழரைசனி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விதியை மாற்றும் தர்மம்

ணக்கம்!
          படைக்கும் பிரம்மனின் விதியை மாற்றும் வலிமை தர்மத்திற்க்கு உண்டு என்று கிருஷ்ணன் சொல்லியுள்ளார். கர்ணன் மீது அர்ச்சுணன் வில்லை விடும்பொழுது அவன் மேல் பூமாதிரி விழுகிறது அல்லவா அவன் உயிரை எடுக்கமுடியவில்லை அதற்கு காரணம் அவன் செய்த தர்மம். இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் ஒருவன் தர்மம் செய்தால் விதியை மாற்றலாம் என்பது உண்மை என்பதற்க்காக சொல்லுகிறேன்.

செவ்வாய் பரிகாரம் செய்யும்பொழுது நண்பர் ஒருவர் சொல்லிருந்தார். ஏன் கோவிலுக்கு கொடுக்கிறீர்கள் அதனை நமது இராணவத்தில் அடிப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவுக்கு கொடுக்கலாம் என்று சொல்லி அதற்குரிய இணைய இணைப்பையும் கொடுத்து இருந்தார். அதனை நான் அந்த நேரத்தில் வெளியிடவில்லை.

செவ்வாய் பரிகாரம் செய்யும்பொழுது அது கோவிலுக்கு செய்தால் தான் உடனே பலன் கிடைக்கும் என்பதால் அதனைப்பற்றி சொல்லவில்லை. முதலில் நம்மை சரிசெய்துக்கொண்டு அதன்பிறகு நாட்டிற்க்கு கொடுக்கலாம். கோவிலில் செய்யும்பொழுது உடனே அந்த பலனை பெறமுடியும் என்பதால் கோவிலுக்கு செய்யுங்கள் என்று சொன்னேன்.

நண்பர் இராணுவ வீரர்களுக்கு மருத்துவசெலவிற்க்கு என்று சொன்னது கூட செவ்வாய் காரகதன்மை உடையது என்றும் சொல்லிருந்தார். அதனை ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் ஒரு விசயத்தை நன்றாக கவனியுங்கள். ஒருவர் சண்டை போடுகிறார் என்றால் அவர்க்கு நீங்கள் உதவி செய்கிறேன் என்றால் பிரமஹத்தி தோஷம் பிடிக்கும் என்பது இங்கு சொல்லி ஆகவேண்டும். 

இந்தியாவில் உள்ள இராணுவமும் மனித உயிர் தான். பாகிஸ்தானில் உள்ள இராணுவமும் மனித உயிர்தான். ஒரு ஆன்மீகவாதிக்கு இரண்டையும் வேறுபடுத்தி பார்க்ககூடாது. மனித உயிர் என்பது மட்டும் தான் அவனுக்கு தெரியவேண்டும். 

சண்டை போடுபவர்களுக்கு உதவி செய்யவேண்டாம். முதலில் நாம் கோவிலில் பூஜை நடப்பதற்க்கு உதவி செய்வோம் அதன் வழியாக நமது வாழ்க்கை மேம்பட்டவுடன். அடுத்த உதவி எல்லாம் நாம் பார்த்துக்கொள்ளலாம்.

தர்மம் செய்வது கூட நல்லது தான் ஆனால் அதனை பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்றும் சொல்லியுள்ளார்கள் அல்லவா. அதனை கடைபிடிப்பதும் அவசியம்.

மதியம் 1 மணி பதிவில்

மாமியார் வீட்டில் மரியாதை எப்படி?

அடுத்த வாரத்தில் காேயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 9, 2016

சுகஸ்தானம்


வணக்கம்!
          உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டு அதிபதி நன்றாக இருந்தால் உங்களுக்கு வீடு யோகம் எளிதாக அமைந்துவிடும். நான்காவது வீட்டு அதிபதி யார் என்பதை கவனித்து அந்த அதிபதியின் நிலை என்ன என்பதை ஜாதகத்தில் பார்க்கவேண்டும். நான்காவது அதிபதி அமரும் இடத்தையும் ஆய்வு செய்து உங்களுக்கு வீடு அமையுமா அல்லது அமையாதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

ஒரு நண்பர்க்கு நான்காவது வீட்டு அதிபதியாக செவ்வாய் வந்தது. செவ்வாய் கிரகம் நெருப்பு கிரகம் அல்லவா. அவரின் வீட்டில் கூட்டுக்குடும்பம் அவர்க்கு ஒதுக்கப்பட்ட அறை சமையல் அறையாக வந்தது.

அவர் தங்கும் இடம் எல்லாம் மிக அருகில் சமையல் அறை இருப்பது போல் இருக்கும். நமது சுகஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய அறையை காட்டக்கூடிய இடமும் நான்காவது இடம்.

உங்களின் கட்டில் அமையும் இடமும் நான்காவது வீட்டை பொறுத்து தான் அமையும். நான்காவது வீட்டு அதிபதியை வைத்து தான் உங்களின் படுக்கை அறையும் இருக்கும். 

நான்காவது வீடு என்பது உங்களின் வீட்டை மட்டும் காட்டக்கூடிய இடம் கிடையாது உங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் காட்டக்கூடிய ஒரு இடம். நான்காவது வீடு நன்றாக இருந்தால் அனைத்தும் நன்மை. நான்காவது வீடு சரியில்லை என்றால் அனைத்தும் கெடுதல்.

அடுத்த வாரத்தில் கோயம்புத்தூர் திருப்பூர் பயணம் இருக்கின்றது. சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு