வணக்கம்!
இன்று பல நல்ல முகூர்த்தம். பல இடங்களில் திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண முகூர்த்தம் நடைபெறும் இடம் எல்லாம் அதிகபட்சம் திருமண மண்டபங்களில் நடைபெறுகிறது. திருமண மண்டபம் நடைபெறும் இடங்கள் எல்லாம் ஒரு காலத்தில் எப்படி இருந்தன என்பது நமக்கு தெரியாது.
பல மண்டபங்கள் சினிமா தியேட்டரை இடித்துவிட்டு கட்டப்பட்ட திருமண மண்டபங்களாக இருக்கின்றன. திருமண பந்தம் ஏற்படும் இடம் கோவிலாக இருந்தால் நல்லது. நமது ஆடம்பரத்தை திருமண மண்டபத்தில் தான் காட்டவேண்டும் என்பதில்லை. கோவிலில் திருமணத்தை வைத்துவிட்டு வரவேற்பை திருமண மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம்.
இன்றைய இளம்வயதில் உள்ளவர்களின் திருமண வாழ்வில் நிறைய பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக இது இருக்கும். இதுவரை திருமண மண்டபத்தில் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்திருந்தால் விட்டுவிட்டு இனிமேல் உள்ளவர்களின் திருமணத்தை கோவிலில் வையுங்கள்.
கோவிலில் திருமணம் வைத்தால் மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்க்கும் இருக்கின்ற தோஷம் நிவர்த்தியாகி திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். புகழ்பெற்ற கோவிலில் தான் வைக்கவேண்டும் என்பதில்லை உங்களின் ஊரில் உள்ள ஒரு கோவிலில் வைத்துக்கொள்ளலாம்.
சிவன் கோவிலில் பெரும்பாலும் திருமணம் நடத்தப்படுவதில்லை. ஒரு சில குறிப்பிட்ட சிவன் கோவிலில் மட்டும் திருமணம் நடத்துவார்கள். எல்லா கோவிலிலும் நடத்தப்படமாட்டார்கள்.
நீங்கள் திருமண கோவிலை தேர்ந்தெடுக்கும்பொழுது அது முகூர்த்தம் செய்கின்ற கோவிலாகா இருந்தால் நல்லது. அதாவது ஒரு சிலர் மாரியம்மன் கோவிலை தேர்ந்தெடுப்பார்கள். மாரியம்மன் கோவிலில் திருமணம் நடத்தலாம். இப்படிப்பட்ட கோவிலை தேர்ந்தெடுத்து திருமணத்தை வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment