Followers

Sunday, December 10, 2017

ஏழாவது வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் ஏழில் நின்றால் அது களத்திரதோஷம் என்று சோதிடம் சொல்லுகிறது. சுக்கிரன் ஏழில் நிற்பவர்கள் நிறைய பேர்கள் நல்ல வாழ்க்கையும் வாழ்கின்றனர். ஏழில் சுக்கிரன் நிற்க்கும்பொழுது அவர்களுக்கு திருமணம் செய்யும்பாெழுது மட்டும் காலதாமதம் ஆகும் என்பதை தவிர மற்றபடி நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.

ஏழில் தனித்து நிற்க்கும் சுக்கிரன் களத்திரம் தோஷம் தருகின்றது என்று நீங்கள் நினைத்தால் சுக்கிரனுக்குரிய பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம். ஒரு சில இடத்தில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும் அவர்கள் சுக்கிரன் வழிபாட்டை செய்துக்கொள்ளலாம்.

சுக்கிரன் ஏழில் நின்று உங்களுக்கு பொருத்தம் பார்க்கும்பொழுது ரஜ்ஜி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யவேண்டாம். ரஜ்ஜி பொருத்தம் இருந்தால் மட்டும் திருமணம் செய்துக்கொள்ளுங்கள். 

ஏழில் நிற்க்கும் சுக்கிரன் அதிக பெண் தொடர்பை கொடுப்பார். உங்களின் திருமண வாழ்வில் பிரச்சினை வருகின்றது என்றால் சந்தேகபார்வை பார்ப்பதால் தான் வரும். பெண்களின் தொடர்பில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தால் இந்த பிரச்சினை வராது.

களத்திர தோஷம் கடுமையாக இருக்கின்றது என்றால் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தாலி வாங்கிக்கொடுத்தால் இந்த தோஷம் நிவர்த்தியாகும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 9, 2017

சுக்கிரனுக்கு பரிகாரம்


வணக்கம்!
          தற்பொழுது எல்லா இடத்திலும் விளக்கு பூஜை செய்வார்கள்.  பெரும்பாலும் தஞ்சாவூர் மாவட்டம் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் எல்லாம் விளக்கு பூஜை செய்வார்கள். இதனை ஐயப்ப பக்தர்களும் செய்கின்றனர். 

விளக்கு பூஜை பெண்களை மட்டும் வைத்து குத்துவிளக்கை வைத்து பூஜை செய்வார்கள். சுமாராக ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் இதனை செய்வார்கள். பூஜை முடிந்தவுடன் கலந்துக்கொண்ட பெண்களுக்கு பரிசுகளை எல்லாம் வழங்குவார்கள் அதன் பிறகு அன்னதானம் நடைபெறும்.

விளக்கு பூஜையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பரிசுகளாக ஜாக்கெட்பிட் அல்லது புடவை வழங்குவார்கள். இதனை விழாகுழுவினர் அல்லது யாராவது இதற்கு நன்கொடை கொடுத்து உதவுவார்கள்.

சுக்கிரனின் காரத்துவம் உடைய வேலை. பெண்களுக்கு புடவை அல்லது ஏதாவது துணிகளை பரிசாக கொடுப்பது. உங்களின் பகுதியில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தால் நீங்கள் இவர்களுக்கு துணிகளை பரிசாக கொடுக்க பாருங்கள்.

குறைந்தது நூறு பெண்களுக்கு இதனை கொடுப்பார்கள். ஒரு சில இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் எல்லாம் கலந்துக்கொள்கிறார்கள். உங்களின் தகுதிக்கு தகுந்தவாறு இதனை செய்துவிட்டால் சுக்கிரனின் காரத்துவத்தை நீங்கள் பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவ அம்மன்(சண்டி) யாகம்


வணக்கம்!
          பொதுவாக ஒரு நவஅம்மன் யாகம் நடத்தலாம் என்று பதிவில் எழுதியிருந்தேன். பதிவை எழுதி அடுத்த பத்து நிமிடத்திற்க்குள் தனி நபர் ஒருவர் தன்னுடைய குடும்பத்திற்க்கு மட்டும் ஒன்றை செய்துக்கொடுங்கள் என்று கேட்டார். 

அவரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு என்று உடனே நடத்தலாம் என்று திட்டமிட்டேன். பொது நவ அம்மன் யாகம் அவருக்கு நடத்திய பிறகு நடத்தப்படும். பொது நவ அம்மன் யாகத்திற்க்கு நிறைய நண்பர்கள் கேட்டுள்ளனர்.  அனைவரும் ஜாதகம் அனுப்பிய பிறகு ஆரம்பிக்கப்படும்.

தனி நபர்கள் இதற்கு அதிகம் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர் என்பது எனக்கு இந்த யாகம் ஆரம்பித்தவுடனே எனக்கு தெரிந்தது. நிறைய நண்பர்கள் விரும்பம் தெரிவித்தனர். இது ஒரு சேவைபோல நடத்தப்படுவதால் இதற்கு விரும்பம் அதிகம் அதோடு பலனும் அதிகமாக கிடைக்கும்.

நவ அம்மன் யாகம் வருகின்ற திங்கள் கிழமை(11-12-2017) முதல் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த நவஅம்மன் யாகம் ஒருவரின் குடும்பத்திற்க்காக நடத்தப்படுகிறது. அவரின் பெயர்.

அணைக்கரையை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

இவர் இந்த முறை நவ அம்மன் யாகம் நடத்துகிறார். தொடர்ந்து ஒன்பது நாட்கள் இந்த யாகம் நடைபெறும். சிறந்த முறையில் நடைபெறவிருக்கிறது.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கும் தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள். இந்த யாகம் முடிந்த பிறகு அடுத்த பொது நவ அம்மன் யாகம் கண்டிப்பாக நடத்தப்படும்.

அம்மன் பூஜையும் ஒரு சில தினங்களில் நடத்தப்பட இருக்கின்றது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆஞ்சநேயர் வழிபாடு


ணக்கம்!
         சனிப்பெயர்ச்சி நெருங்கி வரும் நேரத்தில் அனைவரும் ஒன்றை செய்யலாம். சனி நல்லது கொடுத்தாலும் சரி தீமைக்கொடுத்தாலும் சரி அதற்கு நல்லதை தரும் விதமாக ஆஞ்சநேயர் வழிபாட்டை செய்யலாம்.

இன்று சனிக்கிழமை அனைவரும் உங்களுக்கு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் சென்று அங்கு ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். ஆஞ்சநேயர் கோவில் சென்று வெண்ணைகாப்பு சாத்தி வழிபட்டு வாருங்கள். வெண்ணைகாப்பு செய்யமுடியவில்லை என்றால் சும்மா வழிபாடு செய்துவிட்டு வாருங்கள்.

ஆஞ்சநேயர் சனியால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து நல்ல பலனை தருவார். இதனை பல வருடங்கள் சொல்லிவருகிறேன். பலர் நன்மை அடைந்து இருக்கின்றனர். நாம் ஏன் செல்லவேண்டும் என்று இருக்காமல் ஒரு முறை சென்று வருவது நல்லது.

ஆஞ்சநேயர் வழிபாடு என்பது சனியின் பாதிப்புகள் இருக்கும்பொழுது மட்டும் செய்யாமல் எப்பொழுதும் செய்யலாம். பல நன்மைகள் இருக்கின்றன. ஆஞ்சநேயர் கோவில் மிக பழைமையான கோவில் எல்லாம் இருக்கின்றது அதனை தேடிப்பிடித்து வழிபாட்டை செய்யலாம்.

ஆயிரம் வருடத்திற்க்கு முற்பட்ட ஆஞ்சநேயர் கோவில்கள் கூட இருக்கின்றது. நாம் கொஞ்சம் முயற்சி எடுத்து இப்படிப்பட்ட கோவிலை கண்டு தரிசனம் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தினமும் செய்ய வேண்டியவை

ணக்கம்!
          விடியற்காலையில் எழுவது என்பது சிரமமான ஒன்று தான் ஆனால் அந்த நேரத்தில் நாம் எழுந்து செய்யும் ஆன்மீக காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பான  ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கும்.

தற்பொழுது பனிக்காலம் என்பதால் விடியற்காலையில் பனியும் அதிகமாக இருக்கும். பனி பெய்யும் காலத்தில் ஆன்மீக விசயங்களில் ஈடுபடுவது ஒரு அற்புதமான ஒரு நிகழ்வாக இருக்கும்.

காலையில் எழுந்து உங்களுக்கு தெரிந்த ஒரு மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கலாம். காயத்ரி மந்திரம் சொல்லுபவர்கள் அதனை சொல்லிக்கொண்டு இருக்கலாம். விடியற்காலையில் எழுந்து அந்த மந்திரம் சொல்லும்பொழுது அது நாள் முழுவதும் நமக்கு நன்மை பயக்கும்படி அமையும்.

மந்திரத்தை வாய்விட்டு சொல்லவேண்டியதில்லை. மந்திரம் வாய்விட்டு சொல்லுவது அதிக நன்மை அளிக்காது. மந்திரத்தை உங்களின் மனதிற்க்குள்ளே சொல்லுங்கள். எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் சரி அதனை மனதிற்க்குள் சொல்லும்பொழுது அதிகமான பலனை கொடுக்கிறது.

நான் செய்யும் எந்த ஒரு பூஜையிலும் மந்திரத்தை வாய்விட்டு சொல்லமாட்டேன். அனைத்தும் மனதிற்க்குள் சொல்லி தான் செய்கிறேன். நீங்கள் விடியற்காலையில் எழுந்து ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லுங்கள்.

மந்திரம் சொல்லமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களின் மூச்சுகாற்றையாவது கவனித்துக்கொண்டு இருங்கள். அதனை கவனிப்பதும் உங்களின் ஆத்மா பலனை அதிகரிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 8, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் சனியின் வீட்டிற்க்கு அதிக நன்மையை வழங்ககூடிய ஒரு கிரகம். எந்த கிரகத்திற்க்கு நன்மையை வழங்கிறதோ இல்லையோ சனி கிரகத்திற்க்கு நன்மையை அதிகம் வழங்கும்.

சனியின் வீடாக மகரம் மற்றும் கும்ப ராசி வருகின்றது. இதில் மகரத்திற்க்கு அதிகபடியான நன்மையை வழங்கும். கும்பராசிக்கு குறைவாக தான் நன்மையை வழங்கிறது. இது அனுபவத்தில் பார்த்ததில் இருந்து சொல்லுகிறேன்.

கும்பராசியை உடையவர்களுக்கு திருமணமும் உடனே நடைபெறுவதில்லை. திருமணம் நடைபெற்றாலும் அது எந்தளவுக்கு நன்மையை தரும் என்பது ஒரு கேள்விகுறியாகவே இருக்கும். ஏன் என்றால் பலர் கஷ்டத்தில் இருக்கின்றனர்.

ஒரு சில கும்பராசிக்கு ஜாதகர்களுக்கு திருமணமே நடைபெறாமலும் இருக்கின்றது. சுக்கிரன் நன்றாக இவர்களுக்கு நன்மையை வழங்குகிறது என்றால் திருமணம் இளம்வயதிலேயே நடைபெறவேண்டும் ஆனால் இவர்களுக்கு திருமணம் தள்ளிபோகிறது.

மகரராசியினர்க்கும் திருமணம் தாமதமாக நடைபெறும் ஆனால் கண்டிப்பாக திருமணம் நடைபெற்றுவிடும். அதோடு செல்ல செழிப்பை வாரி வழங்கி இவர்களுக்கு சுக்கிரன் கொடுத்துவிடும்.

உலகத்தில் உள்ள அதிகபடியான பணக்காரர்கள் மகரராசியை உடையவர்களாக இருக்கின்றனர். இதற்கு சுக்கிரனும் ஒரு காரணம் என்பது தெரிகிறது. சனியின் முதல் வீடான மகரராசிக்கு சுக்கிரன் முதல்தரமான நன்மையை வழங்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 7, 2017

நவ அம்மன்(சண்டி) பொது யாகம்


ணக்கம்!
          கடந்த முறை நவஅம்மன்(சண்டி) யாகம் நடந்தபொழுது இரண்டு நபர்க்கு செய்யப்பட்டது. இதனை ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன். பலர் இதனைப்பற்றி கேட்டுள்ளனர். 

பலர் செய்வதற்க்கு ஆசைப்படுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அந்தளவுக்கு அதற்கு பணம் கொடுக்க முடியவில்லை. பணம் இல்லாமல் இருக்கின்றனர் என்பது தெரியவருகிறது. ஒரு சில நண்பர்கள் என்னிடம் போனில் தெரிவிப்பதற்க்கு தயக்கப்பட்டு மெயிலில் எழுதியுள்ளனர்.

ஒரு சிலர் மெயிலில் நிறைய கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் பொதுவாக ஒன்றை செய்யுங்கள். அடிக்கடி அதனை நடத்தப்படவில்லை என்றாலும் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறையாவது பொதுவாக ஒரு நவஅம்மன் யாகத்தை செய்துக்கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

என்னால் முடியாது என்று அவர்களிடம் சொல்லமுடியவில்லை. அதே நேரத்தில் போதிய பணம் இல்லை என்றால் என்ன செய்வது என்று அவ்வப்பொழுது நமக்கு நிதி அளிக்கும் நண்பர்களை தொடர்புக்கொண்டேன். அவர்களும் இதனை செய்யலாம் என்று சொல்லிருந்தனர். 

ஒரு சில தினங்களில் அம்மன் பூஜை முடிந்த பிறகு நவ அம்மன் யாகத்திற்க்கு ஆயத்தம் செய்யப்படும். நவ அம்மன் யாகத்திற்க்கு விருப்படுபவர்கள் தங்களின் ஜாதகம் மற்றும் தங்களைப்பற்றிய விபரத்தோடு தங்களால் முடிந்த பணத்தை செலுத்தி வைக்கலாம். தங்களின் வாட்ஸ்அப் எண்ணையும் இணைக்கவேண்டும்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்கிறேன் என்று சொல்லிருந்தேன் அதனை செய்யவில்லை. சனிப்பெயர்ச்சி பரிகாரத்தை விட சக்தி வாய்ந்த நவ அம்மன் யாகம் செய்யப்படுகிறது. சனிப்பெயர்ச்சிக்கும் இந்த நவ அம்மன் யாகம் செய்வது நல்லது தான் செய்யும். உடனே காலம் தாழ்த்தாமல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அனைவரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு