வணக்கம்!
தற்பொழுது எல்லா இடத்திலும் விளக்கு பூஜை செய்வார்கள். பெரும்பாலும் தஞ்சாவூர் மாவட்டம் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் எல்லாம் விளக்கு பூஜை செய்வார்கள். இதனை ஐயப்ப பக்தர்களும் செய்கின்றனர்.
விளக்கு பூஜை பெண்களை மட்டும் வைத்து குத்துவிளக்கை வைத்து பூஜை செய்வார்கள். சுமாராக ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் இதனை செய்வார்கள். பூஜை முடிந்தவுடன் கலந்துக்கொண்ட பெண்களுக்கு பரிசுகளை எல்லாம் வழங்குவார்கள் அதன் பிறகு அன்னதானம் நடைபெறும்.
விளக்கு பூஜையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பரிசுகளாக ஜாக்கெட்பிட் அல்லது புடவை வழங்குவார்கள். இதனை விழாகுழுவினர் அல்லது யாராவது இதற்கு நன்கொடை கொடுத்து உதவுவார்கள்.
சுக்கிரனின் காரத்துவம் உடைய வேலை. பெண்களுக்கு புடவை அல்லது ஏதாவது துணிகளை பரிசாக கொடுப்பது. உங்களின் பகுதியில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தால் நீங்கள் இவர்களுக்கு துணிகளை பரிசாக கொடுக்க பாருங்கள்.
குறைந்தது நூறு பெண்களுக்கு இதனை கொடுப்பார்கள். ஒரு சில இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் எல்லாம் கலந்துக்கொள்கிறார்கள். உங்களின் தகுதிக்கு தகுந்தவாறு இதனை செய்துவிட்டால் சுக்கிரனின் காரத்துவத்தை நீங்கள் பெற்றுவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment