வணக்கம்!
விடியற்காலையில் எழுவது என்பது சிரமமான ஒன்று தான் ஆனால் அந்த நேரத்தில் நாம் எழுந்து செய்யும் ஆன்மீக காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பான ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கும்.
தற்பொழுது பனிக்காலம் என்பதால் விடியற்காலையில் பனியும் அதிகமாக இருக்கும். பனி பெய்யும் காலத்தில் ஆன்மீக விசயங்களில் ஈடுபடுவது ஒரு அற்புதமான ஒரு நிகழ்வாக இருக்கும்.
காலையில் எழுந்து உங்களுக்கு தெரிந்த ஒரு மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கலாம். காயத்ரி மந்திரம் சொல்லுபவர்கள் அதனை சொல்லிக்கொண்டு இருக்கலாம். விடியற்காலையில் எழுந்து அந்த மந்திரம் சொல்லும்பொழுது அது நாள் முழுவதும் நமக்கு நன்மை பயக்கும்படி அமையும்.
மந்திரத்தை வாய்விட்டு சொல்லவேண்டியதில்லை. மந்திரம் வாய்விட்டு சொல்லுவது அதிக நன்மை அளிக்காது. மந்திரத்தை உங்களின் மனதிற்க்குள்ளே சொல்லுங்கள். எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் சரி அதனை மனதிற்க்குள் சொல்லும்பொழுது அதிகமான பலனை கொடுக்கிறது.
நான் செய்யும் எந்த ஒரு பூஜையிலும் மந்திரத்தை வாய்விட்டு சொல்லமாட்டேன். அனைத்தும் மனதிற்க்குள் சொல்லி தான் செய்கிறேன். நீங்கள் விடியற்காலையில் எழுந்து ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லுங்கள்.
மந்திரம் சொல்லமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களின் மூச்சுகாற்றையாவது கவனித்துக்கொண்டு இருங்கள். அதனை கவனிப்பதும் உங்களின் ஆத்மா பலனை அதிகரிக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment