Followers

Monday, June 4, 2018

தன்னை மறைத்துக்கொள்ளும் நிலை


வணக்கம்!
          ஒருவர் நீண்டநாள்களாக கஷ்டப்பட்டு வந்து அவர்கள் திடீர் பணவரவு வர ஆரம்பித்தால் இவ்வளவு நாள்கள் கஷ்டப்பட்டு வந்ததை மறந்துவிட்டு ஆடஆரம்பித்துவிடுவார்கள். ஒருவர்க்கு பணம் வரும்பொழுது அதனை மறைக்கதெரிவதில்லை. அதாவது தன்னிடம் பணம் வருகின்றது என்பதை வெட்டவெளிச்சம் போடுவது போல செய்துவிடுவார்கள். தன்னிடம் பணம் இருக்கின்றது என்பதை காட்டிவிடுவார்கள்.

நகர்புறத்தை விட கிராமபுறத்தில் உள்ளவர்களுக்கு இந்த பழக்கம் அதிகமாகவே இருக்கும். பணம் வந்துவிட்டால் தலை கால் புரியாமல் நடந்துக்கொள்வார்கள். எப்படி பழமொழி சொல்லுவார்கள் என்றால் புது பணக்காரனுக்கு தன்னை மறைக்கதெரியாது என்பார்கள்.

உங்களிடம் பணம் வருகின்றது என்றால் தன்னை எப்படி அமைதிப்படுத்துக்கொண்டு அந்த பணத்தை எப்படி மேலும் மேலும் பெருக்கிக்கொள்ளலாம் என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள். எல்லாம் அனுபவிக்கலாம் ஆனால் அதனை படிப்படியாக மேலே கொண்டு செல்ல கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலர் பணம் வந்துவிட்டால் போதும் உடனே அனைத்தையும் வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். சாப்பாட்டை முறையாக சாப்பிடாமல் வாங்கி கட்டிக்கொள்வார்கள். இதனை செய்வதும் தவறான ஒன்று. உடனே நிறைய சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்துவிட்டால் உங்களுக்கு சில காலங்களில் உடல் பிரச்சினை வர ஆரம்பித்துவிடும். இதிலும் எச்சரிக்கையாேடு இருக்கவேண்டும்.

ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும்பொழுது அடுத்தநிலைக்கு தன்னை உடனே மாற்றிக்கொள்ளகூடாது. அடுத்த நிலையில் நாம் கடைசிவரை இருக்கமுடியும் என்ற உறுதி இருந்தால் மட்டுமே தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து வெளிக்காட்டிக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 2, 2018

உங்களின் பணவரவு எப்படி?


ணக்கம்!
          மனிதர்கள் பெரும்பாலும் என்ன ஆசைப்படுவார்கள். எப்படியும் பெரிய ஆளாக வந்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பெரிள ஆளாக என்றால் அனைத்து அந்தஸ்துக்களோடு வாழ்வதை தான் சொல்லுகிறேன். ஆசைப்படுவது நல்லது தான் ஆனால் அதற்கு ஜாதகம் இடம்தருமா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய காலத்தில் ஒருவரிடம் பணம் வந்தாலே போதும் அவர்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். ஒருவருடைய ஜாதகத்தில் பணம் வரவை காட்டக்கூடிய இரண்டாம் வீடு நன்றாக இருந்தால் போதும் அவர்களுக்கு பணவரவு சாத்தியப்படக்கூடிய ஒன்று தான் அந்த வீடு சரியில்லை என்றால் பணவரவு தடங்கல் ஏற்பட்டுவிடும்.

இரண்டாம் வீட்டு அதிபதி மற்றும் அவர் அமர்ந்த இடம் மற்றும் இரண்டாம் வீட்டிற்க்கு கிடைக்கும் கிரகங்களின் பார்வை இவற்றை வைத்து பணப்புழக்கம் எப்படி இருக்கும் என்பதை சொல்லிவிடலாம். அதிகபட்சம் நல்ல கிரகங்களில் பார்வை இருந்தால் நல்லது.

இரண்டாம் அதிபதி சென்று அமர்ந்த இடத்தை வைத்து அந்த இடத்தில் இருந்து பெரும்பாலும் பணம் வரும் என்பதை நாம் சொல்லிவிடலாம். இரண்டாம் அதிபதி சென்ற இடத்திற்க்கு தகுந்தமாதிரி அவர்களுக்கு பணம் வரும் அங்கு பிரச்சினை இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

பெரிய லாபம் என்பதை பதினோராவது வீடு காட்டினாலும் இரண்டாவது வீட்டு பொறுத்து தான் மொத்த பணத்தையும் நாம் கணிக்கலாம். இரண்டாம் வீடு கெட்டால் பணம் வருவதில் நிறைய தடங்கல் ஏற்பட்டு அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          இந்த மாதமும் அதிகமான பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கிறேன். ஒரு சில நல்ல கருத்துக்களை நாம் மனதில் வைத்து செயல்பட்டாலே போதும் அது நம்முடைய வாழ்க்கையை நல்ல திசையில் இழுத்து செல்லும்.

நமக்கு நிறைய உதவிகள் மற்றும் பழக்கவழக்கத்தில் ஒருவர் இருப்பார். ஏதோ ஒரு காரணத்தால் அவர் ஒரு தவறை செய்துவிட்டால் நாம் உடனே அவர்களை வெறுக்க தொடங்கிவிடுவோம். அவர் மீது நாம் வெறுப்புகளை அள்ளி வீச தொடங்கிவிடுவோம்.

ஆயிரம் நல்லதை செய்தவர்கள் ஒரு தவறை மட்டும் செய்தவுடன் நாம் ஆயிரம் நல்லதை விட்டுவிட்டு ஒரு தவறை மட்டும் எடுத்துக்கொள்வோம். மனது அப்படி தான் செய்யும். தவறை மட்டும் மறுபடியும் மறுபடியும் கொண்டு வந்து காட்டிக்கொண்டே இருக்கும்.

மனது மறுபடியும் தவறை காட்டிக்கொண்டே இருப்பதால் அவர் தவறானவர் என்று முடிவுகட்டிவிடுவீர்கள். ஆயிரம் நல்லது போய்விடுகின்றது. இப்படி மட்டும் ஒருவரை முடிவு செய்யக்கூடாது அவர் என்ன தான் தவறை செய்தாலும் அதனை எல்லாம் பொருட்ப்படுத்தாமல் அவரிடம் எப்பொழுதும் போலவே பழகவேண்டும்.

தவறை பட்டியல் போடும் மனநிலையை நாம் அகற்றிவிட்டாலே போதும் நிறைய நமக்கு நல்ல வாய்ப்பை இறைவன் கொடுப்பான். நிறைய விசங்கள் நமக்கு சாதகமாகவே அமைய தொடங்கிவிடும். இதுவரை சண்டை போட்டவர்கள் எல்லோரையும் நீங்களே கூப்பிட்டு நன்றாக இருக்கின்றீர்களாக என்று நலம் விசாரியுங்கள். நிறைய நல்லது நடக்க ஆரம்பித்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 31, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் ஒருவர் ஒரு கேள்வி அனுப்பியிருந்தார். ஊர் ஊராக கோவில் குளங்களை சுற்றினால் மட்டும் நமக்கு நல்லது நடந்துவிடுமா என்று கேட்டார்.

ஒரு விதி இருக்கின்றது. ஒரே மாதிரியாகவே அனைத்தும் செல்லாது. நம்முடைய வாழ்க்கையில் பகல் என்று ஒன்று இருந்தால் இரவு என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தே தீரும். இரவு இருப்பதால் தான் பகலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. இரவு மட்டும் இல்லை என்றால் பகல் என்ற ஒன்றை எவனும் கண்டுக்கொள்ளவே மாட்டான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சில காலக்கட்டங்களில் அதிகபடியான நன்மை நடக்கும் ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு  தீமை அதிகபடியாக நடக்க ஆரம்பித்துவிடும். தீமை தரும் காலங்களில் நீங்கள் நான் சொல்லுவது போல சென்றுவிட்டால் அதிகப்பட்சம் என்பதை குறைந்த பட்சமாக மாற்றிக்கொள்ளமுடியும்.

நான் வீட்டிலேயே தான் இருப்பேன் என்றால் தாராளமாக இருந்துக்கொள்ளலாம். உங்களிடம் சக்தி இருந்தால் தாராளமாக எதிர்க்கொள்ளலாம். சக்தி இல்லை என்றால் மட்டும் நீங்கள் சிந்தனை செய்யவேண்டும்.

கோவில்கள் என்று சுற்றும்பொழுது அது உங்களின் இந்த வாழ்க்கை மட்டும் அல்லாமல் அடுத்த ஜென்மத்திற்க்கும் அது நன்றாக உதவும் என்பதால் இதனை அடிக்கடி சொல்லுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விதி வீட்டை சுற்றும்பொழுது


வணக்கம்!
          வீட்டைசுற்றி விதி ஆட்டம்போடுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதாவது நிறைய பிரச்சினைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றது. ஒரு பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை என்பதை தான் வீட்டை சுற்றி விதி ஆட்டம் போடுகின்றது என்று சொல்லுகிறேன். 

ஒருவருக்கு வீட்டைச்சுற்றி விதி ஆட்டம் போட்டால் அவர் செய்யவேண்டியது சாமியார் போல் ஒரு கோவிலையும் விடாமல் சென்று வருவது தான் தீர்வாக இருக்கமுடியும். கோவில் கோவிலாக சுற்றினால் உடனே பிரச்சினை தீர்ந்துவிடாது கொஞ்ச நாள்கள் எடுத்துக்கொண்டு பிரச்சினை தீர்ந்துபோகும்.

ஒரு சில இடத்தில் சொல்லுவார்கள் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நிற்கவேண்டும் ஓடகூடாது என்பார்கள். அவன் அவனுக்கு வந்தால் தான் பிரச்சினை என்ன என்பது தெரியும். யார் வேண்டுமானாலும் உபதேசம் எல்லாம் செய்யலாம் ஆனால் பிரச்சினையை நேரில் எதிர்க்கொள்ளும்பொழுது மட்டுமே உண்மை என்பது புரியும்.

இந்த நேரத்தில் சந்நியாசி எப்படி செல்வார் என்பதை உணர்ந்துக்கொண்டு அவர்களை போல நீங்களும் சுற்றிக்கொண்டே இருங்குள். கோவில் கோவிலாக சுற்றுங்கள். கண்டிப்பாக ஒரு தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.

விதி அடிக்கும்பொழுது எதிர்த்து நிற்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் கிடையாது. முடிந்தவர்கள் எதிர்த்து நின்று பாருங்கள். முடியாதவர்கள் கோவில் கோவிலாக அலைந்து திரியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 30, 2018

கெடுதல் நேரம் எப்பொழுது வரும்?


வணக்கம்!
          ஒரு மோசமான கிரகத்தின் தசா அல்லது கோச்சாரபலன் வருவதற்க்கு முன்பே தன்னை தயார் செய்துவிடும் அதனை செயல்படுத்துவது அதன் காலத்தில் இருக்கும். தற்பொழுது உங்களுக்கு நல்ல நேரம் நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் இந்த நேரத்தில் உஷாராக செயல்படவேண்டும்.

நல்ல நேரத்தில் நமக்கு வரும் செல்வம் அதனை வைத்து ஏதோ செய்கிறோம் என்று செய்வோம் அதன் பாதிப்பு கெடுதல் நேரத்தில் தான் தெரியும். என்னை நாடி வரும் பெரும்பாலான நபர்கள் சொல்லுவது நல்ல பணம் வந்தது. நமக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும் என்று பெரிய அளவில் ஆசைப்பட்டேன். பணம் நின்றுவிட்டது தற்பொழுது மாட்டிக்கொண்டேன் என்பார்கள்.

எதுவுமே தொடர்ச்சியாக நமக்கு வந்துக்கொண்டே இருக்கும் என்று நாம் நினைக்ககூடாது. அதே நேரத்தில் நம்முடைய நல்ல காலத்தில் மிக மிக நிதானமாக இருக்கவேண்டும். நிதானமாக இருந்துவிட்டால் கெடுதல் கிரகங்கள் நம்மிடம் அதிகம் வேலையை காட்டாது.

நாம் இஷ்டத்திற்க்கு ஆட்டம் போடும்பொழுது நமக்கு பிரச்சினையை அந்த நேரத்திலேயே நமக்கு தெரியாமல் செய்துவிடுகின்றது. அது பிரச்சினையை கொடுக்கும் நேரம் வந்துவிட்டால் பெரிள அளவில் காட்டிவிடுகின்றது. 

உங்களுக்கு தற்பொழுது நல்ல நேரம் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்றால் நீங்கள் கொஞ்சம் உஷாராகவே இருங்கள். அனைத்தையும் நன்றாக கவனித்துக்கொள்ளவும். நாம் சரியாக இருந்துவிட்டால் போதும் அதன்பிறகு இறைவன் விட்ட வழி என்று இருந்துவிடலாம்.

மதுரைக்கு இன்று செல்கிறேன். மதுரையில் இருந்து திரும்பியபிறகு பதிவுகளை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 29, 2018

எதனால்?



வணக்கம்!
          பல இடங்களில் நாம் சொல்லுவது உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமானால் நீங்கள் நிறைய புண்ணியம் செய்துவிடுங்கள் என்று அடிக்கடி சொல்லுவது உண்டு. இது நமது தலைமுறையை காப்பதற்க்கு மட்டும் அல்லாமல் நீங்கள் அடுத்த பிறப்பு எடுப்பதற்க்கும் நன்றாக இருக்கும் என்பதற்காகவும் இதனைப்பற்றி நிறைய சொல்லிருக்கிறோம்.

நான் எந்த விசயத்தை சாென்னாலும் உண்மை நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் சொல்லிவிடுவது உண்டு. நாம் நிறைய புண்ணியம் எல்லாம் செய்தாலும் இது எப்படி நம்மை காப்பாற்றும் என்பது இறைவனுக்கு மட்டும் தெரிந்த ஒன்று.

பல இடங்களில் நீங்களே பார்த்து இருக்கலாம். ஊரில் பள்ளிகூடம் கட்டுவதற்க்கு மற்றும் மருத்துவமனை கட்டுவதற்க்கு எல்லாம் அந்த காலத்தில் தன்னுடைய நிலத்தை கொடுத்து இருக்கின்றனர். பல ஊர்களில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

இப்படிப்பட்ட நிலம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அவர்களின் தர்மத்தை எப்படி சொல்லுவது அவர்களின் இந்த செயல் நாம் எதனோடும் ஒப்பிட முடியாது. இது எப்படிப்பட்ட புண்ணியத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கும்.

இப்படி நிலம் மற்றும் கட்டடம் எல்லாம் கட்டிக்கொடுத்து மக்களுக்கு உதவி செய்த பெரும்பான்மையான குடும்பங்கள் இன்று அட்ரஸ் இல்லாமல் சென்றுவிட்டது என்பது தான் நான் பார்த்த வரையில் உண்மையான தகவல். பல ஊர்களில் இப்படிப்பட்ட குடும்பங்கள் வாரிசுகள் என்று ஒருவரும் கூட இல்லாமல் இருக்கின்றனர். அந்த குடும்பங்கள் எல்லாம் என்ன ஆனாது என்று கூட தெரியவில்லை.

இன்று பல ஊர்களில் அவர்களின் வாரிசுகள் ஒரு சிலர் இருந்தாலும் மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றனர். அந்த ஊர்களில் எல்லாம் அந்த ஊரை கெடுத்து கொண்டு இருப்பவர்கள் அந்த ஊர்களில் பெரியஆள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். கெட்டவன் இன்று தலைவனாக இருக்கின்றனர் என்று சொல்லலாம்.

இவர்கள் செய்த இந்த புண்ணியம் எல்லாம் எங்கு சென்றது என்று சந்தேகப்பட வைக்கின்றது. கண்டிப்பாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் உங்களின் ஊரிலும் நிகழ்ந்து இருக்கும். இதனை கொஞ்சம் நினைவுகளை அசைப்போட்டு பாருங்கள். என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு