வணக்கம்!
ஒருவர் நீண்டநாள்களாக கஷ்டப்பட்டு வந்து அவர்கள் திடீர் பணவரவு வர ஆரம்பித்தால் இவ்வளவு நாள்கள் கஷ்டப்பட்டு வந்ததை மறந்துவிட்டு ஆடஆரம்பித்துவிடுவார்கள். ஒருவர்க்கு பணம் வரும்பொழுது அதனை மறைக்கதெரிவதில்லை. அதாவது தன்னிடம் பணம் வருகின்றது என்பதை வெட்டவெளிச்சம் போடுவது போல செய்துவிடுவார்கள். தன்னிடம் பணம் இருக்கின்றது என்பதை காட்டிவிடுவார்கள்.
நகர்புறத்தை விட கிராமபுறத்தில் உள்ளவர்களுக்கு இந்த பழக்கம் அதிகமாகவே இருக்கும். பணம் வந்துவிட்டால் தலை கால் புரியாமல் நடந்துக்கொள்வார்கள். எப்படி பழமொழி சொல்லுவார்கள் என்றால் புது பணக்காரனுக்கு தன்னை மறைக்கதெரியாது என்பார்கள்.
உங்களிடம் பணம் வருகின்றது என்றால் தன்னை எப்படி அமைதிப்படுத்துக்கொண்டு அந்த பணத்தை எப்படி மேலும் மேலும் பெருக்கிக்கொள்ளலாம் என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள். எல்லாம் அனுபவிக்கலாம் ஆனால் அதனை படிப்படியாக மேலே கொண்டு செல்ல கற்றுக்கொள்ளவேண்டும்.
ஒரு சிலர் பணம் வந்துவிட்டால் போதும் உடனே அனைத்தையும் வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். சாப்பாட்டை முறையாக சாப்பிடாமல் வாங்கி கட்டிக்கொள்வார்கள். இதனை செய்வதும் தவறான ஒன்று. உடனே நிறைய சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்துவிட்டால் உங்களுக்கு சில காலங்களில் உடல் பிரச்சினை வர ஆரம்பித்துவிடும். இதிலும் எச்சரிக்கையாேடு இருக்கவேண்டும்.
ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும்பொழுது அடுத்தநிலைக்கு தன்னை உடனே மாற்றிக்கொள்ளகூடாது. அடுத்த நிலையில் நாம் கடைசிவரை இருக்கமுடியும் என்ற உறுதி இருந்தால் மட்டுமே தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து வெளிக்காட்டிக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment