Followers

Thursday, May 31, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் ஒருவர் ஒரு கேள்வி அனுப்பியிருந்தார். ஊர் ஊராக கோவில் குளங்களை சுற்றினால் மட்டும் நமக்கு நல்லது நடந்துவிடுமா என்று கேட்டார்.

ஒரு விதி இருக்கின்றது. ஒரே மாதிரியாகவே அனைத்தும் செல்லாது. நம்முடைய வாழ்க்கையில் பகல் என்று ஒன்று இருந்தால் இரவு என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தே தீரும். இரவு இருப்பதால் தான் பகலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. இரவு மட்டும் இல்லை என்றால் பகல் என்ற ஒன்றை எவனும் கண்டுக்கொள்ளவே மாட்டான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சில காலக்கட்டங்களில் அதிகபடியான நன்மை நடக்கும் ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு  தீமை அதிகபடியாக நடக்க ஆரம்பித்துவிடும். தீமை தரும் காலங்களில் நீங்கள் நான் சொல்லுவது போல சென்றுவிட்டால் அதிகப்பட்சம் என்பதை குறைந்த பட்சமாக மாற்றிக்கொள்ளமுடியும்.

நான் வீட்டிலேயே தான் இருப்பேன் என்றால் தாராளமாக இருந்துக்கொள்ளலாம். உங்களிடம் சக்தி இருந்தால் தாராளமாக எதிர்க்கொள்ளலாம். சக்தி இல்லை என்றால் மட்டும் நீங்கள் சிந்தனை செய்யவேண்டும்.

கோவில்கள் என்று சுற்றும்பொழுது அது உங்களின் இந்த வாழ்க்கை மட்டும் அல்லாமல் அடுத்த ஜென்மத்திற்க்கும் அது நன்றாக உதவும் என்பதால் இதனை அடிக்கடி சொல்லுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: