Followers

Tuesday, October 2, 2018

குரு பெயர்ச்சி விழிப்புணர்வு


வணக்கம்!
         ஊரு எல்லாம் தற்பொழுது குருபெயர்ச்சியை பற்றி தான் பேச்சு அதிகமாக இருக்கின்றது. இதனைப்பற்றி நமது நண்பர்களும் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இதனைபற்றி அதிகம் கவலைப்படதேவையில்லை.

குரு கிரகம் ஒரளவுக்கு நமக்கு நன்மையை தரவில்லை என்றாலும் அதிக தீமையை எல்லாம் கொடுத்துவிடாது. குரு கிரகம் நன்மை தரும் நிலையில் இருந்தால் அது அதிகமாக உங்களுக்கு நல்ல சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

குரு கிரகம் என்றாலே அது சுபநிகழ்ச்சிகள் அதிகம் தரக்கூடிய ஒரு கிரகம். உங்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்றால் உடனே இதற்கு தயாராகுங்கள். சுபநிகழ்ச்சிகள் நடத்தமுடியவில்லை என்றால் உங்களின் குலதெய்வத்திற்க்கு சென்று ஒரு பொங்கல் வைத்து கூட இரண்டு உறவினர்களை அழைத்து கொண்டு சென்றுவிட்டு வரலாம்.

குரு கிரக பெயர்ச்சி என்று ஒரு கோவில் விடாமல் ஹோமம் அல்லது ஏதாவது ஒன்றை செய்துக்கொண்டு இருப்பார்கள். இதில் எல்லாம் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை அதற்கு பதிலாக  பொறுமையாக ஒரு நாள் சென்று அமைதியாக கோவிலுக்கு சென்று வாருங்கள்.

குரு கிரகத்தை கவனிப்பதை விட உங்களுக்கு நடக்கும் தசா என்ன என்பதை பார்த்து அது செல்வது சரியாக இருக்கின்றதா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். தசாநாதன் அனைத்தையும் மீறி வேலை செய்துக்கொண்டு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
         சோதிடம் என்பது பெரிய கடல் என்பது உங்களுக்கு தெரியும். இந்த கடலை இறுதிவரை நாம் கற்றுக்கொண்டே இருந்தாலும் முழுவதுமாக கற்று தெரிந்துவிடமுடியாது. நாமும் ஒரு ஜாதகத்தை என்ன தான் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் ஒரு எல்லையை தாண்டி நாமும் அதனை ஆராய்ச்சி செய்துக்கொண்டே இருக்கமுடியாது.

சோதிடபலனை மட்டும் நாம் தெரிந்துக்கொண்டு அதன்பிறகு என்ன செய்யவேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கவேண்டும். சோதிடத்தையே ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருந்தால் நம்முடைய வாழ்க்கையை வாழ்வது என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்.

ஒரு சோதிடரிடம் சென்று சோதிடபலனை தெரிந்துக்கொள்ள செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் உங்களுக்கு ஒரு பத்து வருடம் நேரம் சரியில்லை நீங்கள் எதிலும் வெற்றி பெறமுடியாது என்று சொன்னால் அதனை கேட்டுவிட்டு நீங்கள் எதுவும் செய்யமுடியாமல் உட்கார்ந்துக்கொண்டே இருந்தால் உங்களின் வாழ்க்கை வீணாக சென்றுவிடும்.

வாழ்க்கையில் பத்து வருடத்தை வீணாக போய்விட்டால் அதன்பிறகு என்ன தான் செய்தாலும் அதனை சரி செய்வது என்பது முடியாத ஒரு காரியமாகவே இருக்கும். காலம் என்பதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே ஒருவர் வெற்றி பெறமுடியும்.

சோதிடத்தை பாருங்கள் அதனை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்து அதன்படி செயல்பட்டால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பரிகாரம் என்பதை பரிந்துரைக்கவேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை உங்களை கொஞ்சம் மாற்றிக்கொண்டு செயல்பட்டாலே போதுமானதாக இருக்கும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். விரைவில் அம்மன் பூஜை நடைபெற இருக்கின்றது. நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு கலந்துக்கொள்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 30, 2018

அலிகளுக்கு தானம்


வணக்கம்!
          பெரும்பாலும் இன்று தான தர்மம் எல்லாம் நிறைய செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக நடத்து தர வர்க்கத்தில் இருக்கும் குடும்பங்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அனைவரும் ஆர்வம் காட்டினாலும் இவர்கள் கொஞ்சம் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.

தானம் தர்மம் செய்யும்பொழுது கூட நம்ம ஆட்கள் ஒன்றை சொல்லிருக்கின்றனர். நாம் யார்க்கு கொடுக்கிறோம் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து நாம் செய்தால் அதிக பலனை நாம் பெறலாம்.

இன்று நமக்கு இருக்கும் திருஷ்டியை போக்கி நாமும் தர்மம் செய்யவேண்டும் என்றால் அதற்க்கு அலிககளை தேர்வு செய்து தான தர்மம் செய்தால் நமக்கு திருஷ்டி நீக்கி நல்ல பலன் நமக்கு கிடைக்கும் அது உங்களுக்கு பலவிதத்திலும் உதவியாக இருக்கும்.

பேருந்து நிலையத்தில் மற்றும் இரயில் நிலையத்தில் எங்கு அலிகளை பார்த்தாலும் உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து அவர்களிடம் ஒரு ஆசீர்வாதத்தை வாங்கிக்கொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதம் உங்களின் திருஷ்டியை போக்கும் அதோடு உங்களுக்கு நல்லதும் நடக்கும்.

ஒருவருக்கு புதன் தசா நடந்து அந்த தசா அவர்களுக்கு நல்லதை தரவில்லை என்றால் புதனின் காரத்துவத்தில் இருக்கும் அலிகளிடம் இருந்து ஆசீர்வாதம் வாங்கினால் புதன் தசா அவர்களுக்கு நல்லதை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 29, 2018

வாரிசுகளுக்காக புண்ணியம்


வணக்கம்!
          ஒரு சில ஊர்களில் நான் பார்த்த விசயத்தைபற்றி ஒன்றை சொல்லுகிறேன். ஒருவர் குடும்பம் இருந்தால் அந்த குடும்பத்தின் தலைவர் அதாவது தந்தை ஒருவர் சந்நியாசி போல அலைந்திருந்தால் அவர்களின் பிள்ளைகள் இன்று பெரியளவில் சாதித்து இருக்கின்றனர்.

சந்நியாசி போல இருந்தவர்களின் பிள்ளைகள் ஒரு ஊரில் பெரிய மனிதர்களாக இருக்கின்றனர். இது எப்படி என்று தெரியவில்லை ஆனால் இது உண்மையாக பல இடங்களில் நான் பார்த்தும் இருக்கிறேன். பலர் சொல்லியும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்று நாம் செய்யும் செயல் நமது சந்ததினரை சென்று அடையும் என்பது மட்டும் உண்மையாக இருக்கின்றது. நமது சந்ததினரை நல்ல படியாக உருவாக்குவதற்க்கு நீ்ங்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். நாம் செய்கின்ற செயலில் அதிகளவு நன்மையை நோக்கி செல்வது போல இருக்கவேண்டும். 

பல பெற்றோர்களை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பகட்டாக வாழவேண்டும் என்று நினைத்துக்கொண்டு முடிந்தளவுக்கு ஆட்டம் போடுவது அதன் பிறகு அவர்களின் வாரிசுகள் வீணாக போய்விடுகின்றன. ஒரு வயதிற்க்கு மேல் உங்களின் வாரிசுகளின் மேல் தான் அதிக கவனம் வைக்கவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் சம்பாதிக்க பல வழிகளை செய்யவேண்டியிருக்கின்றது என்றாலும் நேரம் கிடைக்கும்பொழுது புண்ணியத்தையும் செய்துக்கொண்டு வாருங்கள். உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 28, 2018

மூன்றாம் பிறை வழிபாடு


வணக்கம்!
          உணர்வு பூர்வமாக கொண்டு செல்வது தான் ஆன்மீக வழிபாடு. உங்களின் உணர்வுகளை கடவுளிடம் செலுத்தினாலே அது உங்களுக்கு நிறைய கொடுக்கும். வாய்வழியாக சொல்லுவதை விட உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்தால் நீங்கள் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பீர்கள். பெரும்பாலான வழிபாடுகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும்.

மூன்றாம்பிறை வழிபாடு சிறந்த வழிபாடாக இருக்கும். மூன்றாம் பிறையை காண்பது சிறந்தது என்பார்கள். நம் மதத்திலும் சரி பிற மதத்திலும் சரி மூன்றாம் பிறைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள்.

மாலை நேரத்தில் உங்களின் வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றி விட்டு சாமி கும்பிட்டுவிட்டு கற்பூரம் ஆராத்தி காட்டிவிட்டு அந்த ஆராத்தியை அப்படியே வெளியில் வந்து வானத்தை நோக்கி மூன்றாம் பிறையை நோக்கி காட்டிவிட்டு அப்படியே மறுபடியும் உள்ளே சென்று சாமி கும்பிடுங்கள்.

இது ஒரு உணர்வு பூர்வமான ஒரு வழிபாடு தான் இதில் மந்திரங்களை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உணர்வு பூர்வமாக நாம் செய்யும் இந்த செயல் உங்களுக்கு நிறைய நல்ல வாய்ப்பை கொண்டு வரும்.

நமது சோதிடத்தின் அடிப்படை சந்திரனை கொண்டு தான் இருக்கின்றது. சோதிடத்தின் வழியாக நமக்கு நல்லது நடப்பதற்க்கும் இந்த வழிபாட்டை நீங்கள் செய்து பயன் பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாற்றங்கள்


வணக்கம்!
          திடீர் பயணமாக சென்னை சென்ற காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. இன்று தஞ்சாவூர் திரும்பி வந்துவிட்டேன். இனிமேல் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒருவரின் வாழ்வில் மாற்றங்களை கொடுப்பதற்க்கு சக்தி என்பது வேண்டும். இதனை புரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். சக்தி படைத்த நபர்கள் உங்களோடு இணையும்பொழுது தான் உங்களின் வாழ்க்கை பலவித மாறுதல்களுக்கு உருவாகின்றது.

என்னுடைய வாழ்விலும் மாற்றங்களை கொடுப்பதற்க்கு ஒரு குரு எனக்கு தேவைப்பட்டார். அவர் வந்த பிறகு தான் எனக்கு மாற்றங்களே வந்தன. அவர் கொடுத்த அந்த சக்தியை வைத்து தான் இன்று பலரின் வாழ்வில் நல்ல மாற்றங்களை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

உங்களின் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தாலும் சரி அது என்னை போன்றவர்களின் தொடர்பை நீங்கள் உருவாக்கிக்கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நடக்கும். உங்களுக்கு கண்டிப்பாக அதனை உருவாக்கிக்கொடுப்பார்கள்.

இது வியாபார யுக்தி போல சொல்லவில்லை. எதார்த்தமான ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லுகிறேன். கிரகங்கள் சரியில்லை என்று இருக்காமல் உங்களுக்கு தெரிந்த நல்ல ஆன்மீகவாதிகளோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 26, 2018

ஆறாவது வீட்டு தசா


வணக்கம்!
         ஒருவரின் ஜாதகத்தில் ஆறுக்குடையவனின் தசா நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அது நீண்ட தசாவாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு திருமண வயது ஆகுகின்றது அந்த நேரத்தில் திருமணம் நடக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக அவர்க்கு திருமணம் நடக்கும்.

ஏழாவது வீட்டிற்க்கு எதிராக ஆறாவது வீடு இருந்தாலும் நடக்கின்ற புத்தி மற்றும் கோச்சாரபலன் நன்றாக இருந்தால் அவர்க்கு திருமணம் நடக்கும். நாம் ஆறாவது வீட்டு தசா நடக்கின்றது அதனால் திருமணம் நடக்காது என்று சொல்லிவிடமுடியாது.

ஆறாவது தசா நடந்தாலும் திருமணம் நடக்கும் அதே நேரத்தில் அவரகளின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால் அதில் மட்டும் அவ்வப்பொழுது சண்டை சச்சரவு வந்துக்கொண்டே இருக்கும்.

தம்பதினர்களிடையே அதிகமாக பிரச்சினை வந்து அடிக்கடி இருவீட்டார்களும் பஞ்சாயத்து செய்யும் நிலைக்கு இந்த தசா வேலை செய்யும். பெரும்பாலான ஜோடிகள் பிரிய மாட்டார்கள் ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

பொதுவாகவே மறைமுகஸ்தான வீடுகளின் தசா நடக்கும்பொழுது ஒன்று வெளியில் இருந்து பிரச்சினையை உருவாக்கிவிடும் அப்படி இல்லை என்றால் வீட்டிற்க்குள்ளேயே பிரச்சினையை உருவாக்கிவிட்டுவிடும்.

நாளை சென்னையில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு