வணக்கம்!
திடீர் பயணமாக சென்னை சென்ற காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. இன்று தஞ்சாவூர் திரும்பி வந்துவிட்டேன். இனிமேல் தொடர்ந்து பார்க்கலாம்.
ஒருவரின் வாழ்வில் மாற்றங்களை கொடுப்பதற்க்கு சக்தி என்பது வேண்டும். இதனை புரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். சக்தி படைத்த நபர்கள் உங்களோடு இணையும்பொழுது தான் உங்களின் வாழ்க்கை பலவித மாறுதல்களுக்கு உருவாகின்றது.
என்னுடைய வாழ்விலும் மாற்றங்களை கொடுப்பதற்க்கு ஒரு குரு எனக்கு தேவைப்பட்டார். அவர் வந்த பிறகு தான் எனக்கு மாற்றங்களே வந்தன. அவர் கொடுத்த அந்த சக்தியை வைத்து தான் இன்று பலரின் வாழ்வில் நல்ல மாற்றங்களை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
உங்களின் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தாலும் சரி அது என்னை போன்றவர்களின் தொடர்பை நீங்கள் உருவாக்கிக்கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நடக்கும். உங்களுக்கு கண்டிப்பாக அதனை உருவாக்கிக்கொடுப்பார்கள்.
இது வியாபார யுக்தி போல சொல்லவில்லை. எதார்த்தமான ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லுகிறேன். கிரகங்கள் சரியில்லை என்று இருக்காமல் உங்களுக்கு தெரிந்த நல்ல ஆன்மீகவாதிகளோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment