வணக்கம்!
ஊரு எல்லாம் தற்பொழுது குருபெயர்ச்சியை பற்றி தான் பேச்சு அதிகமாக இருக்கின்றது. இதனைப்பற்றி நமது நண்பர்களும் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இதனைபற்றி அதிகம் கவலைப்படதேவையில்லை.
குரு கிரகம் ஒரளவுக்கு நமக்கு நன்மையை தரவில்லை என்றாலும் அதிக தீமையை எல்லாம் கொடுத்துவிடாது. குரு கிரகம் நன்மை தரும் நிலையில் இருந்தால் அது அதிகமாக உங்களுக்கு நல்ல சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
குரு கிரகம் என்றாலே அது சுபநிகழ்ச்சிகள் அதிகம் தரக்கூடிய ஒரு கிரகம். உங்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்றால் உடனே இதற்கு தயாராகுங்கள். சுபநிகழ்ச்சிகள் நடத்தமுடியவில்லை என்றால் உங்களின் குலதெய்வத்திற்க்கு சென்று ஒரு பொங்கல் வைத்து கூட இரண்டு உறவினர்களை அழைத்து கொண்டு சென்றுவிட்டு வரலாம்.
குரு கிரக பெயர்ச்சி என்று ஒரு கோவில் விடாமல் ஹோமம் அல்லது ஏதாவது ஒன்றை செய்துக்கொண்டு இருப்பார்கள். இதில் எல்லாம் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை அதற்கு பதிலாக பொறுமையாக ஒரு நாள் சென்று அமைதியாக கோவிலுக்கு சென்று வாருங்கள்.
குரு கிரகத்தை கவனிப்பதை விட உங்களுக்கு நடக்கும் தசா என்ன என்பதை பார்த்து அது செல்வது சரியாக இருக்கின்றதா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். தசாநாதன் அனைத்தையும் மீறி வேலை செய்துக்கொண்டு இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment