Followers

Wednesday, September 8, 2010

மூன்றாம் வீடு



மூன்றாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். மூன்றாம் வீடு சகோதர ஸ்தானமாகும். ஜாதகன் குணங்கள் மனோவலிமை இளைய சகோதரம் எப்படி இருப்பார் . அவர் ஜாதகருக்கு நன்மை செய்வாரா தாயாரின் விரையம் தபால் போக்குவரத்து இப்பொழுது ஏது தபால் போக்குவரத்து email லை வைத்துக்கொள்ளலாம் பக்கத்துவீட்டு நபர்கள் எப்படி இருப்பார்கள் குறுகிய பயணம் எப்படி இருக்கும், காது சம்பந்தமான நோய், நீங்கள் இருக்கும் வீடு எப்பொழுது காலி செய்வது ஆகியவைகள் எல்லாம் மூன்றாம் வீடு மூலம் காணலாம்.

இப்பொழுது மூன்றாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

மூன்றாம் வீட்டு கிரகம் 1 வது வீடாகிய லக்கினத்தில் இருந்தால் இளைய சகோதரம் இருக்கும் பல வேலைகளை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் கிடைக்கும். சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். உடல் பலம் போகங்களுடன் இருப்பார்கள் வைரம்.நகைகள பெறுவார்கள் சகோதர. சகோதரிகளின் ஆதரவை பெறுவார்கள்.

மூன்றாம் வீட்டு கிரகம் 2 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர.சகோதரிகளின் ஆதரவில் காலம் கழிப்பவனாகவும்.தைரியமில்லாதவனாகவும் உடலில் வியாதி உடையவனாகவும் இருப்பார்கள். மூன்றாம் வீட்டு அதிபதி கெட்ட கிரகங்கள் பார்வை இல்லை என்றால் சகோதர சகோதரிகளின் சொத்து கிடைக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 3 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார்கள் அவர்களால் இவருக்கு எல்லாவிதத்திலும் ஆதரவு இருக்கும். கலைகளில் பிரியம் கொண்டவனாக இருப்பார்கள் . நல்ல பலசாலியாகவும் இருப்பார்கள். தங்கம்.வெள்ளி ஆடை மீது ஆசை இருக்கும் அதுபோல் கிடைக்கும். தெய்வ வழிபாடு கிடைக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 4 ஆம் வீட்டில் இருந்தால் சுபபலமிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாகவும் குடும்பத்தில் செல்வமும் சுகமும் நிறைந்து விளங்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 5 ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை பாக்கியங்களை பெற்றவனாகவும். சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்றவராகவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து விளங்கும் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக வழிபாட்டில் உள்ளவர்களிடம் தொடர்பு கிடைக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 6 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் பரம எதிரிகளாக இருப்பார்கள் உடல் பலமில்லாமலும் இருப்பார்கள் அடிக்கடி நோய் வந்து தொந்தரவு தரும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்தால் பெண்களின் மீது ஈர்ப்புடன் இருப்பான். வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவனாகவும் இருப்பான். தன்னுடைய சுகங்கள் மட்டும் பார்ப்பான். மனைவியின் சொத்துக்களை பெற முயல்வார்கள். நன்றாக சாப்பிடுவார்கள்.

மூன்றாம் வீட்டு கிரகம் 8 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் உடன் சண்டை இருந்து கொண்டு இருக்கும். உடல் ஊனம் ஏற்படும். சிரமத்துடன் குடும்பம் நடத்த வேண்டும். சில பேர்க்கு கடன்கள் ஏற்படும். சிலருக்கு அவமானம் ஏற்படும்

மூன்றாம் வீட்டு கிரகம் 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாகவும் பூர்வ புண்ணியத்தில் நல்ல வசதி பெற்றவராகவும் இருப்பார்கள். தெய்வபக்தியுடன் இருப்பார்கள்.

மூன்றாம் வீட்டு கிரகம் 10 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகளின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் குடும்பத்தை நடத்துபவர்களாக இருப்பார்கள்.

மூன்றாம் வீட்டு கிரகம் 11 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகளின் அன்பை பெற்றவர்களாக இருப்பார்கள் அவர்களிடம் இருந்து லாபம் கிடைக்கும்

மூன்றாம் வீட்டு கிரகம் 12 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் மூலம் விரையம் ஏற்படும். சொத்துகள் விரையத்தை ஏற்படுத்தலாம். அலைச்சலும் மன சஞ்சலம் ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: