Followers

Thursday, September 9, 2010

நான்காம் வீடு



இப்பொழுது நாம் நான்காம் வீட்டைப்பற்றி பார்க்கலாம். நான்காம் வீடு தாயார் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. தாய்,தாய்மாமன்,வாகனம்,உறவினர், இன்பங்கள், மூதாதையர்கள் சொத்து,பயிர்,நிலம்,வீடு வாசல் பள்ளிக்கல்வி ஆகியவற்றை நான்காம் வீட்டின் மூலம் காணலாம்.

இப்பொழுது நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

நான்காம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் பங்களா போன்ற வீடுகள், நிலபுலங்கள், வண்டி வாகனங்கள், மாடு கன்று, பால் பாக்கியம் ஆகியவற்றுடன் நன்றாக வாழ்வான். தாய் வழி பாட்டி மாமன் முதலானேர் ஆதரவு நிரம்பி இருக்கும். கல்வியில் திறமையுடன் இருப்பார்கள் அதைப்போல் உயர்ந்த பதவியில் அமருவான். 4 ஆம் வீட்டு அதிபதி கெட்ட சேர்க்கை ஏற்பட்டால் கெடுதிபலன் நடைபெறும்.


நான்காம் வீட்டு அதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் தாய்வழி ஆதரவையும் சொத்துக்களையும் பெறுவார்கள் குடும்பத்தில் சுகம் நிறைந்து காணப்படும்.

நான்காம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகனிட விட அவன் சகோதரன் சிறந்த விளங்குவான். ஜாதகனின் தாயார் நோய்வாய்ப்படுவார்கள். குடும்பத்தில் கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்படும். வருமானத்தைவிட செலவு அதிகமாகும்.

நான்காம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் நிலபுலங்கள் வீடு வாசல் மாடு கன்றுகள் பால்பாக்கியம்இ கல்வியில் திறமை கீர்த்தி வண்டி வாகனங்கள் முதலியவற்றுடன் வாழ்வான். எல்லாரும் மரியாதையுடன் இவர்களிடம் பழகுவார்கள். நண்பர்கள் இவரின் புகழ் பேசுவார்கள். பெண் சுகம் நிரம்ப பெற்றும். பெண்களின் சொத்துக்களை பெற்றும் விளங்குவார்கள். இவர்களில் நல்ல சுகபோகங்களுடன், செல்வாக்குடன் விளங்குவார்கள்.

நான்காம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல புத்திரங்களை உடையவனகாவும் வண்டி வாகனங்கள் பெற்றவனாகவும் லாபங்களை உடையவனகாவும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு வாழ்வார்கள்.

நான்காம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் சுக சௌகர்யங்களை இழந்தவனாகவும்,தாயிடமும் தாயார் வழிகளிலும் விரோதங்களை கொண்டவனாகவும், பூர்வீக சொத்துக்களை இலந்தவனாகவும்,சண்டை சச்சரவுகளில் செலவு செய்பவனாவும் வியாதி உடையவனாகவும் இருப்பார்கள்.

நான்காம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பலமாக இருந்தால் தாயார் மாமன் வழியில் மனைவி வருவாள். வருமானமும் செலவும் சரிசமாக இருந்து வரும். வீடு மாறி மாறி குடி இருக்கும் படி இருக்கும் வாகனங்கள் அடிக்கடி மாற்ற வேண்டும் மனைவியின் போக்கின் படி ஜாதகர் நடப்பர்.

நான்காம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் தாயார் ஏழை வீட்டில் பிறந்தவராக இருப்பார். தாய்வழி ஆதரவு குறைந்து இருக்கும் வறுமையும் அவமானங்களும் நிறைந்து காணப்படும்.

நான்காம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் நிலபுலங்கள் வீடு வாகனங்கள் பால் பாக்கியம் நிறைந்து இருக்கும். தகனப்பாரின் அன்பை பெற்றவராக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நிறைந்து காணப்படும்.

நான்காம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் பூமி சம்பந்தமான பொருள்களால் லாபத்தை பெறுவார்கள். தொழில் பலம் நிறைந்து காணப்படும். பெரிய அந்தஷ்து உள்ளவர்களிடம் தொடர்பு ஏற்படு்ம். செல்வம், செல்வாக்கு, கீர்த்தி பெற்று விளங்குவான்.

நான்காம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் சுகங்கள் நிறைந்தவனாகவும் பூமி வியாபாரங்கள் மூலம் நல்ல லாபம் ஏற்படும் தாயாருக்கு உடலில் நோய் ஏற்படும்.

நான்காம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் சுகங்கள் அற்றவனாகவும் சொந்தங்கள் ஆதரவு இல்லாமாலும் இருப்பான். வறுமை மிகுந்து காணப்படும். சொந்த நிலம்கள் விரையம் ஏற்படும். மொத்தத்தில் சிரம வாழ்க்கை நடத்தும்படி இருக்கும்.

இத்துடன் நான்காம் வீட்டின் காரத்துவம் முடிந்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: