இப்பொழுது நாம் ஐந்தாம் வீட்டைப்பற்றி பார்க்கலாம் ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம் எனப்படுகிறது.
ஐந்தாம் வீட்டு மூலம் குழந்தை பிறப்பு, பூர்வ புண்ணிய பலன்கள், வித்தை, எண்ணங்கள், கல்வியில் திறமை, மஹான்களின் சந்திப்பு, பதவி உயர்வு, குலதெய்வம் வழிபாடு ஆகியவற்றை காணமுடியும்.
இப்பொழுது ஐந்தாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழும். மஹான்களிடம் ஆசி பெறுவான் அரசாங்கத்திலும் மக்களிடம் நல்ல பெயர் பெற்று விளங்குவான்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் பிள்ளைகளால் தனம் சந்தோஷம் நிறைந்து இருக்கும் பக்தி விசுவாசத்துடன் பிள்ளைகள் இருப்பார்கள் கல்வியில் தேர்ச்சி நல்ல அறிவுடன் இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல வருமானம் குடும்பத்திற்க்கு கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் உண்டாகும். புராணங்கள்இ சாஸ்திரங்கள் மீது ஈடுபாடு இருக்கும். பிள்ளைகளால் ந்ன்மை ஏற்படாது.
ஐந்தாம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும் வண்டி வாகனம்இ நிலபுலங்கள் கிடைக்கும். பெரிய மனிதர் தொடர்பு கிடைக்கும்.
குடும்பத்தை கௌருவத்துடன் நடத்துபவராக இருப்பார்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் உயர் பதவிகளில் இருப்பார்கள் படித்த அறிவாளிகளின் சமூகத்திலும் சுற்றத்திலும் வாழ்க்கை நடத்துவார்கள் கல்வியில் நல்ல ஞானம் இருக்கும். அரசாங்கத்தில் உயர்பதவிகள் வசிப்பார்கள். ஐந்தாம் வீட்டில் சுபகிரங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ராஜயோகம் ஏற்படும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்பட்டாலும் எதிரிகளாக மாறுவார்கள். புத்திரர்களால் நன்மையே லாபமே ஏற்படாது. இவர்களுக்கு ஞாபசக்தி குறைவு. பெரியவர்களிடம் விரோதம் ஏற்படும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவியின் குடும்பத்தாரால் மனஅமைதி குழையும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும் சிரமமாக குடும்பத்தை நடத்துவார். நல்ல வருமானம் இருக்காது.
ஐந்தாம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர விருத்தி இருக்கும். புத்திரர்களால் சந்தோஷங்களும் சுகமும் ஏற்படும். கல்வியில் பிரகாசத்துடன் விளங்குவார்கள். தெய்வீக வழிபாடுகளில் பற்றுதலுடன் இருப்பார்கள் .
ஐந்தாம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள். மதங்களை பரப்புவதில் ஆர்வம் இருக்கும். புத்திரர்களால் நல்ல தொழில்கள் அமையும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடையும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் மனைவிக்கு அடிக்கடி கர்ப்ப சிதைவு ஏற்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருக்கமாட்டார்கள். குடும்பம் அமைதி இல்லாமல் இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment