Followers

Tuesday, June 12, 2012

பலே திருடன்



வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் நாம் பார்க்கபோவதும் ஆறாம் வீட்டு அதிபரின் லீலை தான். எனது ஊருக்கு பக்கத்தில் ஒருவன் இருந்தான் அவன் பார்ப்பதற்க்கு பார்த்தால் அப்பாவியாக தெரிவான். அவனை பற்றி ஊர் மக்கள் சொல்லும் தகவல் அவன் பலே திருடன். அவன் யாரிடமும் மாட்டியது கிடையாது.

அவன் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன். அவன் திருடுவது அவன் தொழிலாக ஆரம்பித்தது ஆறாம் வீட்டு தசாவில் தான். என்னடா திருடுவதும் ஆறாம் வீடு தானா என்று கேட்க தோன்றும். 

ஒருவருடைய ஜாதகத்தை எடுத்தால் எதனையும் தீர்மானிப்பது அவர்களுடைய லக்கினாதிபதி தான் ஒருவருக்கு லக்கினாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒருவருக்கு லக்கினாதிபதி நல்ல நிலையில் இருந்து ஆறாம் வீட்டு அதிபதியும் நல்ல நிலையில் இருந்தால் அவன் செய்யும் தவறு எவராலும் கண்டுபிடிக்க முடியாது. 

இன்றைக்கு நாட்டில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் கண்டுபிடிக்க முடியாதற்க்கு காரணமும் திருடுவர்களின் ஜாதகத்தில் இந்த மாதிரி அமைப்பு இருப்பது தான் காரணம்.

நமது நாட்டில் இருக்கும் தலைவர்கள் ஏன் வெளிநாட்டில் இருக்கும் தலைவர்களும் அடிக்கும் கொள்ளைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாதற்க்கு காரணம் அவர்களின் ஜாதகத்தில் இந்த மாதிரி கிரக நிலைகள் இருக்கும். அவர்கள் கொள்ளை அடித்ததை கண்டுபிடித்தாலும் அவர்களை காப்பாற்றுவதும் இந்த கிரக நிலைகள் தான் காரணமாக இருக்கிறது.

நமது நாட்டில் இருக்கும் தலைவர்கள் அடிக்கும் கொள்ளைகளை அவர்கள் ஜாதகத்தை எடுத்து ஆராய்ச்சி செய்யலாம் நமக்கு ஏன் இந்த வீண் வம்பு அவர்களின் கிரக நிலைகளே நம்மை தாக்கலாம். நீங்கள் தனியாக எடுத்து ஆராய்ச்சி செய்து பாருங்கள் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்று அவர்களின் ஜாதகமே காட்டி கொடுத்துவிடும்.

சில போதை கும்பல் கடத்தும் போதை பொருட்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது அது யார் என்று பார்த்தால் லக்கினாதிபதி மற்றும் ஆறாம் வீட்டு அதிபருடன் பனிரெண்டாம் வீட்டு அதிபரும் கூட்டணி வகிப்பார். 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: