Followers

Wednesday, June 13, 2012

வில்லாதி வில்லன் 1



வணக்கம் நண்பர்களே! ஆறாம் வீட்டு தசாவை பற்றி பார்த்து வந்தோம். அந்த வரிசையில் ஆறாம் வீட்டு அதிபரின் தசாவில் அவர் எங்கு அமர்ந்தால் அவரின் தசா என்ன பலனை கொடுக்கும் என்பதை கொஞ்சம் பார்க்கலாம். பொதுவாக ஆறாம் வீடு எதனை காட்டும் என்றால் நோய், கடன், பகை, விபத்து, சந்தேகம், உணவு, வேலை ஆட்கள் போன்றவற்றை காட்டும் இடம் என்பதால் இதில் உள்ளது நடக்கும்.  

ஆறாம் வீட்டு அதிபர் முதல் வீட்டில் அமர்ந்து ஆறாம் தசா ஆரம்பம் ஆனது என்றால் லக்கினத்தில் அமர்ந்ததால் லக்கினம் உடல் நிலையை காட்டும் இடமாக வருகிறதா அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

வேலை செய்யும் பெண்களிடம் தொடர்பு ஏற்பட்டு அதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும் இதை நான் பல முதலாளிகளின் ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன். ஒரு சிலர் அனைத்து சொத்துகளையும் அதாவது கம்பெனியையே இழந்து உள்ளார்கள். 

நீங்கள் ஒரு கம்பெனிக்கு முதலாளியாக இருந்தால் உங்கள் ஜாதகத்தை நன்றாக அலசி பார்த்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் கஷ்டபட்டு ஆரம்பித்த கம்பெனி அடுத்தவர்கள் கைக்கு போக வைத்துவிடும் இந்த மாதிரி தசாக்கள்.

ஆறாம் வீட்டு தசா ஆரம்பித்து ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் இரண்டாம் வீடு பொதுவாக நன்மை அதிகம் செய்யும். நீங்கள் செல்வநிலையில் உயரலாம். இரண்டாம் வீடு தனம் தரும் வீடாக இருப்பதால் செல்வ நிலை தட்டுபாடு இருக்காது.

ஆறாம் வீடு கடன்களை குறிக்கும் வீடாக இருப்பதால் நீங்கள் வங்கியில் கடனுக்கு மனு செய்திருந்தால் வங்கி கடன் உங்களுக்கு கிடைக்கும். இப்பொழுது எல்லாம் வங்கியில் கடன் வாங்கினால் அந்த பணம் நமக்கு எல்லாம் நிரந்தர பணம் தானே யார் வங்கிக்கு பணத்தை திருப்பி தருகிறார்கள் அதனால் சொன்னேன். 

வங்கியில் மட்டும் தான் கடன் வாங்கலாம் என்று நினைக்காதீர்கள் யாராக இருந்தாலும் கடன் கேட்டு பார்க்கலாம் கடன் உடனே உங்களுக்கு கிடைத்துவிடும். பொதுவாக ஆறாம் வீட்டு தசா நடந்தால் நம்மை அறியாமலே கடன் வந்துவிடும் அப்படி கடன் வரவில்லை என்றால் நோய் வந்துவிடும். 

ஒரு வங்கியில் ஒருவர் லோன் வாங்க வங்கிக்கு சென்று மேனேஜரிடம் எனக்கு லோன் வேண்டும் என்று கேட்டாராம் மேனேஜர் உங்களுக்கு கடன் தருகிறேன் என்றாராம் அதற்கு இவர் கடன் வேண்டாம் லோன் தாருங்கள் என்று கேட்டாராம் ஏன் சொல்லுகிறேன் என்றால் கடன் என்பது திருப்பி கொடுக்க வேண்டும் லோன் என்றால் திருப்பி கொடுக்க தேவையில்லை என்று மக்கள் நினைத்து கொள்ளுகிறார்கள்.

உங்கள் ஜாதகத்தை பாருங்கள் ஆறாம் வீட்டு அதிபதி அல்லது ஆறாம் வீட்டில் அமர்ந்த அதிபரின் தசா நடந்தால் உடனே உங்களிடம் பணம் இருந்தாலும் கொஞ்சமாவது கடன் வாங்குங்கள் அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டில் அமர்ந்து கெடுதல் தரும் விஷயம் எதுவாக இருக்கும் என்று பார்த்தால் இரண்டாம் வீடு குடும்பத்தை காட்டும் இடம் என்பதால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு கொண்டே இருக்கும். அது எந்த உருவத்தில் வருகிறது என்றே தெரியாது சண்டை சச்சரவு நிறைந்து இருக்கும். 

நான் சில ஜாதகன்களை பார்த்து இருக்கிறேன் அவர் சொல்லுவார்கள் என்ன என்றே தெரியவில்லை சில நாட்களாகவே என் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்று கூறுவார்கள் அவர்களின் ஜாதகத்தில் ஆறாம் அதிபர் இரண்டாம் வீட்டில் அமர்ந்து இருப்பார். தசா எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தீர்கள் அல்லவா.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் 

நண்பர்களே வரட்டா.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: