Followers

Sunday, June 17, 2012

சந்தேகம்


கேள்வி 

நண்பரே! எனக்கு கும்ப லக்னம் பிறக்கும் போதே ஆறாம் அதிபதி சந்தரன் திசை முடித்ந்து விட்டது.இனிமேல் எந்த பயமும் இல்லை என கொள்ளலாமா? வேறு எந்த திசை கெடுதல் செய்யும்.எனக்கு நான்காம் திசையாக குருதிசை நடக்கிறது.அதன் பலன் என்ன ? இதில் தசாவிற்கு தான் இது பொருந்துமா? இல்லை புத்திக்குமா?
ஆனந்த் பாண்டிச்சேரி  


பதில்

வணக்கம் நண்பரே நல்ல கேள்வி கேட்டு உள்ளீர்கள். ஒரு மனிதனை எடுத்துக்கொண்டால் தினம் சந்தோஷத்தில் இருக்கிறான ஒவ்வொருவருக்கும் சிறு சந்தோஷம் சிறு கவலை ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. நாம் சோதிடத்தை நடைமுறை வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்த்தால் புரியும். விதி விலக்காக ஒரு சிலர் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக மனது ரீதியாக கஷ்டபடலாம். 

சில பேர் ஆறாம் வீட்டு தசாவை அவர்கள் வாழ்க்கையில் சந்தித்து இருக்க மாட்டார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுவது இல்லையா எந்த தசாவும் அனைத்து வீட்டு பலனையும் சேர்த்து தான் கொடுக்கும். என்ன அந்த வீட்டிற்க்கு கொஞ்சம் முக்கியதுவம் கொடுக்கும். இதைப்பற்றி நான் எழுத இன்னும் 100 பதிவை தாண்டவேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் நினைத்துக்கொண்டு இருக்கும் சோதிட விதி எல்லாம் அரைகுறையாக தான் இருக்கிறது ஆனால் சில விதிகள் எல்லாம் இன்னும் வெளியில் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்தளவுக்கு சோதிடத்தில் கரை காண்பது கடினமான ஒன்று.

இந்த ஆறாம் வீட்டு தசாவை பற்றி குறைந்தது 50 பதிவு நாளும் போடலாம் என்று நினைத்து இருக்கிறேன். ஆனால் நேரம் எப்படி கிடைக்கும் என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்தால் 1000 பதிவு போதாது. நீங்கள் சோதிட அறிவு பெறவேண்டும் என்றால் வலைபதிவுகளில் படிப்பது போதாது உங்கள சோதிட அறிவை பெருக்கி கொள்ள வெறி கொண்ட தாகம் இருக்க வேண்டும். 

புத்தகங்கள் படிப்பது 25 சதவீதம் தான் 75 சதவீதம் அனுபவத்தில் தான் வரும். அனுபவத்தில் வரும் போது ஒரு கேள்விக்கு விடை எங்கு இருந்து வருகிறது என்று தெரியாது அந்த விடை கடவுள் உங்கள் மூலம் சோதிடம் கேட்பவருக்கு அளிக்கலாம் அந்த நிலையை அடைய உழையுங்கள். 

லாபநோக்கத்தோடு ஒரு விடை இந்த கேள்வியை உங்களுக்காக தான் கேட்டீர்கள் என்றால் உடனே நீங்கள் கட்டண சோதிடத்தில் வந்துவிடுங்கள் உங்களுக்கு அங்கு தான் சரியான தீனி கிடைக்கும்.



நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: