வணக்கம் நண்பர்களே!
பூர்வபுண்ணியம் கெட்டுபோய்விட்டாலே அது பித்ருதோஷம் தான். இதனை பித்ருதோஷம் என்று அழைப்பதைவிட மனித தோஷம் என்று சொன்னால் மிக நன்றாக இருக்கும.
பிற மனிதனுக்கு நாம் முன்ஜென்மத்தில் செய்த கொடுமையை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கவேண்டும் என்பதற்க்காக நமக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. பிறமனிதனுக்கு நாம் நல்லது செய்யவேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன்.
பூர்வபுண்ணியம் கெடுதல் என்பது மிகப்பெரிய கஷ்டமான நிலை என்பது எனக்கு நன்றாக தெரியும். பல நண்பர்களை நான் பார்த்து இருக்கிறேன். எந்த ஒரு இடத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளமுடியாத ஒரு பரதேசி வாழ்க்கைபோல் அமையும். உண்மையில் சாமியார்கள் என்று சொல்லுவதை இவர்களை பார்த்து சொல்லலாம். ஏன் என்றால் எந்த ஒரு விசயத்திலும் ஒரு நிலையில் அதாவது ஒரு இடத்தில் இருக்கமுடியாது.
பூர்வபுண்ணியத்தில் பழைய பதிவில் நான் தேடி கண்டிபிடுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதனை செய்யாமல் இருந்தால் கூட உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் ஒழுங்காக தர்பணம் திதி அமாவாசை விரதங்கள் இருந்தாலே போதும்.
நம்முடைய முன்னோர்களுக்கு நாம் செய்யும்பொழுது மேலுகத்தில் இருக்கும் நமது முன்னோர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆத்மாவிற்க்கு நல்லது செய்வார்கள். அதன் வழியாக நாம் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
மனித வாழ்வே நிச்சயமற்ற வாழ்வு தான் இருந்தாலும் வாழ்கின்ற வாழ்வில் ஒரு நிச்சயம் இருக்கவேண்டுமல்லவா. அந்த நிச்சயம் கூட மனிதனுக்கு கிடைக்கவிடாமல் செய்வதில் பூர்வபுண்ணியம் கெட்டவர்களுக்கு நடக்கும் என்பது தான் உண்மையான ஒரு விசயம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment