வணக்கம் நண்பர்களே!
சனிப்பெயர்ச்சி நடந்த பிறகு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு என்ன சார் பெயர்ச்சி நடந்துவிட்டது ஒன்றும் நடைபெறவில்லை என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
ஒரு நாளில் நடந்துவிடும் என்று எண்ணுவது மனிதனின் இயல்பு. கிரகங்கள் ஒரே நாளில் அவ்வளவு எளிதில் கொடுத்துவிடாது.கொஞ்ச காலம் எடுத்துக்கொண்டு வேலையை செய்யும். சனி என்றால் அவ்வளவு எளிதில் கொடுக்காது. கொஞ்ச காலத்தில் உங்களுக்கு செய்யும் என்று நம்பலாம்.
கெடுதலும் கொஞ்சகாலம் எடுத்துக்கொண்டு தான் கெடுதலை தரப்போகிறது என்று நினைக்க வேண்டாம். நல்லது நடக்காமல் வேண்டுமானால் போகலாம் ஆனால் கெடுதல் நடந்துவிட்டால் தாங்கிக்கொள்ளமுடியாது. தகுந்த பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்
சனிக்கிரகத்திற்க்கு தகுந்த பரிகாரம் என்றால் உங்களின் குடும்பத்தில் உள்ள சொந்த பந்தங்களை அழைத்துக்கொண்டு ஒரு விருந்து ஏற்பாடு செய்து போடுங்கள். குலதெய்வத்தின் கோவிலில் இதனை செய்யலாம். குலதெயவத்திற்க்கு பரிகாரமாக கூட அமையும் அதே நேரத்தில் சனிக்கும் பரிகாரமாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
பரிகாரம் கூறியமைக்கு நன்றி ஐயா
Post a Comment