Followers

Friday, November 6, 2015

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
     பாக்கியஸ்தானம் என்று வந்தவுடனே அது தந்தைப்பற்றி அதிகம் பேசக்கூடிய ஒரு தலைப்பு. தந்தை நல்ல புண்ணியம் செய்து வைத்திருந்தால் அந்த புண்ணியம் நமக்கு எந்த வித தடங்கலும் இல்லாமல் கிடைக்க வழி செய்யும்.

ஒரு சில தந்தை தன்னுடைய காலத்தில் சம்பாதிக்கவேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இலக்காக கொண்டு ஓடிக்கொண்டு இருப்பார்கள். எதற்கு சம்பாதிக்கிறோம் ஏன் சம்பாதிக்கிறோம் என்று தெரியாமலே அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று ஓடுவார்கள்.

எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றவர்க்கு சம்பாதித்துவிடுவார் ஆனால் அவரின் மகனுக்கு சேர்த்த சொத்து எல்லாம் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். தன் மகன் வேலைக்கு ஆகாதவனாக இருப்பான். ஏன் என்றால் இவர் சம்பாதிக்கிறத்திலேயே கவனத்தை செலுத்திக்கொண்டு இருப்பார். பையன் எப்படி வளர்கிறான் என்பது கூட தெரியாது.

பையனுக்கு சொத்தை சேர்ப்பதோடு கொஞ்சம் அவனை நல்லமுறையில் வளர்க்க என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்து அது போல் வளர்க்கவேண்டும். நாம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பது நல்லது. அதே நேரத்தில் நமது வாரிசுக்கும் நல்ல விசயத்தை சொல்லிக்கொடுத்துவிடவேண்டும் அவர்களுக்கு தேவையான புண்ணியத்தை நீங்களே செய்துவைத்துவிடவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களின் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்.

உங்களின் வாரிசுக்கு நீங்கள் செய்யும் புண்ணிய வேலை எல்லாம் தெரியாமல் செய்தால் கூட அவ்வப்பொழுது உனது நன்மைக்கு இதனை எல்லாம் செய்து வருகிறேன் என்று சொல்லிவையுங்கள். அப்பொழுது தான் அவரின் வாரிசுக்கும் இதனை எல்லாம் செய்ய உங்களின் வாரிசு நினைப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: