வணக்கம்!
ஒருவன் நோய் நொடி இல்லாமல் வாழும் காலம் முழுவதும் வாழ்ந்தாலே அவன் மிகப்பெரிய பாக்கியம் செய்தவனாகிறான். நன்றாக கடைசி வரை எதனையும் ஒதுக்காமல் சாப்பிட்டால் அதனை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.
இன்றைய காலத்தில் எதனை தொட்டாலும் அதில் இருந்து இந்த வியாதி வருகின்றது என்று சொல்லிக்கொண்டு பெரும்பாலான உணவுகளை எடுக்காமலே இருக்கின்றோம். நோயும் அப்படி தான் எதாவது ஒரு விதத்தில் வந்துக்கொண்டே இருக்கின்றது.
ஒரு சில கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன். தொண்ணூறு வயதில் உள்ளவர்கள் அனைத்தையும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் நன்றாக இருப்பார்கள். ஏதாவது வேலை செய்துக்கொண்டும் இருப்பார்கள்.
கடைசி வரை நன்றாக இருப்பதும் அவன் அவன் செய்த பாக்கியம் தான். இன்றைய உலகத்தில் விளையும் உணவு வகைகள் எல்லாம் கலப்படம் மற்றும் இரசயன உரமாக இருந்தபொழுதிலும் ஒருவன் நன்றாக வாழ்கிறான் என்றால் அவன் செய்த பாக்கியமாகவே இதனை கருதவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment