வணக்கம்!
பாக்கியஸ்தானத்தில் தீய கிரகங்கள் இருந்தால் அது பித்ருதோஷம் அதனால் நிறைய கஷ்டப்படுவார்கள் என்று பொதுவான சோதிட தகவலை சொல்லிவிடுவதும் உண்டு. ஒன்பதாவது வீட்டில் தீய கிரகங்கள் அமைந்து நல்ல வாழ்க்கையை வாழ்பவர்களும் உண்டு.
ஒன்பதாவது வீட்டில் தீய கிரகங்கள் அமைந்து மற்ற கிரகங்கள் கொஞ்சம் வலுவாக அமைந்தால் அந்த ஜாதகருக்கு இராஜயோகம் அமைந்து நல்ல வாழ்வை வாழ்வார். ஒரு சிலருக்கு தீயகிரகங்கள் ஒன்பதாவது வீட்டில் அமைந்துமற்ற கிரகங்கள் சரியாக அமையவில்லை என்றாலும் கூட ஒன்பதாவது வீட்டு தசா வரும்பொழுது நல்ல வாழ்வு கிடைத்திருக்கிறது.
ஒன்பதாவது வீட்டில் தீயகிரகங்கள் தன்னுடைய தசாவில் இடுப்பு வலியை ஏற்படுத்தும். ஒன்பதாவது வீட்டில் தீயகிரகங்கள் அதிக பயணத்தை ஏற்படுத்தி அதன் வழியாக கூட இடுப்பு வலியை ஏற்படுத்தியதை பல பேருக்கு நான் பார்த்திருக்கிறேன்.
நம்ம நாட்டில் ஒருவர் பயணத்தை அதிகம் மேற்க்கொள்ளும்பொழுது நம்ம சாலை மற்றும் வாகனத்தின் தரத்தில் கூட இடுப்பு வலி அதிகம் ஏற்படுவது உண்டு. வெளிநாட்டில் இது இல்லாமல் இருக்கலாம். நாட்டிற்க்கு தகுந்தமாதிரி பலனும் மாறுபடலாம்.
இன்று மதியம் காரைக்குடி பயணம். நாளை சிவகங்கை மற்றும் காரைக்குடி சுற்றுவட்டாரபகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.
இன்று மதியம் காரைக்குடி பயணம். நாளை சிவகங்கை மற்றும் காரைக்குடி சுற்றுவட்டாரபகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment