வணக்கம்!
நேற்று நீண்ட நாள்களுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நான் தஞ்சாவூர் பகுதியில் இருந்தாலும் இந்த கோவிலுக்கு செல்ல நேற்று தான் எண்ணம் உருவானது.
தஞ்சாவூர் பெரிய கோவிலை பெரும்பாலும் அனைவரும் சென்று தரிசனம் செய்து இருப்பீர்கள். இந்த கோவிலுக்கு செல்லும் மக்களின் எண்ணம் எல்லாம் எப்படி இருக்கும் என்றால் அந்த கோவிலை பார்த்து பிரமிப்பாக தான் பார்ப்பார்கள்.
நான் சென்ற கோவில்களிலேயே புகைப்படம் எடுப்பதற்க்கு என்று ஒரு கோவில் இருக்கின்றது என்றால் அது இந்த கோவிலாக தான் இருக்கும். போகின்ற அனைவரும் கிளிக் செய்வதில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். திரும்புகின்ற பக்கம் எல்லாம் ஒரே கிளிக் செய்வதில் தான் மக்கள் ஈடுபடுவார்கள்.
உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லுகிறேன். இந்த கோவிலில் உள்ள சக்தியை தரிசனம் செய்வதற்க்கு மட்டும் செல்வது மட்டும் தான் என்னுடைய எண்ணம் எல்லாம் இருக்கும். அற்புதமான எனர்ஜீயை தன்னுள் செலுத்த இந்த இடம் ஒரு நல்ல இடம்.
குடும்பத்தோடு சென்றால் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். தனியாக சென்றால் அங்குள்ள சக்தியை நல்ல தரிசனம் செய்து நம்முள் ஏற்றிக்கொள்ளலாம். மக்கள் பிரம்பிப்பை பார்ப்பார்கள். நாம் சக்தியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு வரலாம். அடுத்தமுறை நீங்கள் செல்லும்பொழுது இவ்வாறு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
இந்த கோவிலுக்கு சென்றால் எனக்கு ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லுவார்கள் இருக்கின்றார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்பது தான் உண்மையான ஒன்று. நம்மை பார்த்து நாமே கெட்டவன் என்று சொல்லிக்கொண்டால் வெளியில் உள்ள சக்தியும் அவ்வாறு தான் வேலை செய்யும். அதனால் அதனை எல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் அனைவரும் சென்று வரலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment