வணக்கம்!
ஜாதகத்தில் மூன்று ஒன்பதில் இராகு கேது இருந்தால் அது பித்ருதோஷம் என்று அழைக்கப்படுகின்றது. இது பலருக்கு வேலை செய்யாது என்றாலும் ஒரு சிலருக்கு கடுமையாக வேலை செய்துவிட்டுவிடும். இளைமையில் கடுமையான கஷ்டத்தை கொடுத்துவிடும் என்பது தான் உண்மையான ஒன்று.
இளைமையில் ஒருவர் அதிகமாக கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தோஷம் இருக்கின்றது என்பதை சொல்லலாம். அதிகப்பட்சம் இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை அனுபவத்தில் நீங்களே புரிந்துக்கொள்ளலாம்.
பித்ருதோஷம் என்பது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லிருப்பார்கள். இதில் தந்தையால் வந்தது என்று சொல்லுவார்கள். தந்தையால் வந்தது மட்டும் கிடையாது. உங்களின் தாத்தா மற்றும் அவர்களின் முன்னோர்கள் வழி மற்றும் உங்களின் முன்ஜென்ம தொடர்பு இது எல்லாம் சேர்ந்து வரும்.
தோஷம் என்று சொல்லி சோதிடர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும் என்று ஒரு கேள்வி எழும். சோதிடர்கள் சொல்லுவது உங்களின் முன்னோர்கள் வழியாக சொத்து உங்களின் உடல்வாகு எல்லாம் வரும்பொழுது உங்களுக்கு அவர்கள் செய்த தோஷம் மட்டும் வராது என்று சொல்லமுடியாத காரணத்தால் தோஷம் வரும் என்று சொல்லுகிறோம்.
நீங்கள் உருவாவது இவர்கள் சம்பந்தம் இல்லாமல் வருவது கிடையாது. இவர்கள் எல்லாம் சம்பந்தப்படும்பொழுது கண்டிப்பாக அவர்கள் சம்பந்தப்பட்ட பாவமும் உங்களுக்கு வரும். அதனையும் நாம் அனுபவிக்கதான் வேண்டும்.
ராகு கேதுவை வைத்து தான் பித்ருதோஷத்தை அதிகப்பட்சம் சோதிடர்கள் சொல்லுவார்கள். ராகு என்றால் பாட்டன் கேது என்றால் பாட்டி இது எதனை காட்டுகிறது என்றால் உங்களின் அப்பாவைவிட எல்லாம் உங்களின் தாத்தா மற்றும் பாட்டி முக்கியம் வகின்றனர்.
சட்டத்தில் கூட தாத்தா சொத்து பேரனுக்கு என்று சொல்லுகின்றனர். தாத்தாவை வைத்து உங்களுக்கு அதிகப்பட்சம் நல்லது கெட்டது எல்லாம் வரும். இதனை வைத்து பித்ருதோஷமும் கணக்கிட்டு சொல்லுவார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment