வணக்கம்!
பிற மதங்களில் இறந்தவர்களை அவர்களின் கோவிலுக்கு சென்று கொண்டு அங்கு வழிபாடு நடத்திவிட்டு அதன் பிறகு அவர்களை அடக்கம் செய்வார்கள். நம்ம மதத்தில் அதனை தீட்டாக நாம் பார்க்கிறோம்.
இறந்த உடலுக்கு செய்யவேண்டிய அனைத்தையும் சுடுகாட்டிலேயே நம்ம ஆளுங்க செய்துவிடுகிறார்கள். இருக்கின்ற சடங்குகளில் சுடுகாட்டில் செய்யப்படுகின்ற சடங்கு தான் அதிகமாக இருக்கின்றன. ஒரு சிலர் அதனை செய்வதில்லை.
முதலில் தீட்டு என்பதை கடைபிடிக்கும் பழக்கமும் நம்மிடம் இருக்கின்றது. ஒரு சில தெய்வங்களுக்கு தீட்டு என்பது ஏற்றுக்கொண்டாலும் அதிலும் ஒரு சில தெய்வங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
எடுத்துக்காட்டாக நமது அம்மனை கூட எடுத்துக்கொள்ளலாம். நமது அம்மனுக்கு இறந்த தீட்டு என்பது கிடையாது. ஒருவர் இறந்தநாளிலேயே நாம் அதனை வணங்கலாம். எந்தவித தீட்டும் ஒன்றும் செய்யாது.
ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் சுடுகாட்டில் அமர்ந்து அல்லது அங்கு இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கில் போது அற்புதமான சக்தியை ஒருவரால் எளிதில் எடுத்துக்கொள்ளமுடியும். பத்து வருடம் கோவிலுக்கு சென்ற புண்ணியத்தை ஒரே தடவையில் சுடுகாட்டில் எடுத்துக்கொள்ளமுடியும்.
இறந்ததை தீட்டு என்று ஒதுக்காமல் சிவன் வாழும் இடம் புண்ணிய இடம் என்று நல்ல தரிசனத்தையும் புண்ணியத்தை பெறலாம் என்பதை அறிந்துக்கொண்டு செயல்படுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment