Followers

Saturday, October 5, 2019

இல்லறம்


வணக்கம்!
          நேற்றைய பதிவில் வீட்டில் சமையலைப்பற்றி சொல்லிருந்தேன். பல நண்பர்கள் நன்றாக சொல்லி உள்ளீர்கள் எங்களின் வீட்டில் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் சமையல் மற்றைய நாட்களில் உணவகத்தில் தான் சாப்பிடுகிறோம் இனிமேல் மாற்ற முயற்சி செய்கிறோம் என்றனர்.

இன்றைய காலத்தில் இருவரும் வெளியில் வேலை செய்கின்றனர் வேலைப்பளு காரணமாக வெளியில் சாப்பிடுகிறோம் என்றும் சொல்லுகின்றனர். வேலைப்பளு என்றாலும் வெளியில் சாப்பிடுவதை முடிந்தளவுக்கு நிறுத்திக்கொண்டு வீட்டில் சமைத்து சாப்பிட ஆரம்பியுங்கள் என்று சொல்லிருந்தேன். முதலில் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் போக போக சரியாகிவிடும் என்றேன்.

ஒரு சில நண்பர்கள் தன்னுடைய துணையைப்பற்றி குறையாகவே சொல்லிருந்தனர். சமைக்கவே முடியாது என்று அடம்பிடிக்கின்றார் என்றும் சொல்லிருந்தனர். பெரும்பாலும் இப்படிப்பட்ட பெண்கள் தங்களின் வளர்ந்த வீட்டில் அதிகமான வேலைப்பளுவை சந்திருப்பார்கள். அங்குள்ள கோபத்தை உங்களிடம் காட்டுவார்கள் கொஞ்ச நாள்கள் சென்றுவிட்டால் அவர்களின் கோபம் தணிந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்றேன்.

நமது பதிவை படிக்கும் பெண்கள் முடிந்தவரை வீட்டில் சமைத்து உங்களின் குடும்பத்திற்க்கு பரிமாறுங்கள். சந்தோஷத்தோடு உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறினால் நீங்கள் இந்த பிறவி எடுத்த ஜென்மகணக்கு தீரும். உங்களின் குடும்பமும் நன்றாக இருக்கும்.

வெளிநாடுகளாக இருந்தாலும் சரி அங்கு வேறுவிதமான கலாசாரம் இருந்தாலும் முடிந்தவரை வீட்டில் சமைக்க பாருங்கள். நல்ல நிலைக்கு உங்களின் குடும்பம் வரவேண்டும் என்றால் நான் சொல்லுவதை கொஞ்சம் கடைபிடித்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: