வணக்கம்!
குரு பெயர்ச்சியைப்பற்றி நீங்கள் எழுதவேண்டும் என்று நண்பர்கள் பலர் பரிந்துரை செய்தனர். பலர் போன் செய்து எனக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று கேட்டனர். பலரின் விருப்பத்திற்க்காக சுருக்கமாக அனைத்து இராசியினர்க்கும் கொடுத்துவிடுவோம் என்று எழுதுகிறேன்.
குரு பெயர்ச்சி என்ற கோச்சாரபலனை எல்லாம் நடக்கவேண்டும் என்றால் தசாநாதன் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் அப்பொழுது தான் கோச்சாரபலன்கள் எல்லாம் உங்களுக்கு நடக்கும். தசாநாதன் நன்றாக இருந்து தசா நடந்தால் உங்களுக்கு கோச்சாரபலன்கள் எல்லாம் குறைவாக தான் நடக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
பெரும்பாலும் ஐம்பது சதவீதம் கோச்சாரபலன்கள் கொடுத்தாலே அது பெரிய விசயமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நான் பார்த்தவரை முப்பது சதவீதம் நடந்தால் போதுமானதாக எடுத்துக்கொள்ளலாம். குருவின் பலன் என்பது குறைவாகவே கொடுக்கும்.
குருவின் பெயர்ச்சி பெரியளவில் என்ன நன்மை செய்யும் என்றால் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு நல்லதாக நாம் எடுத்துக்கொள்ளலாம் என்பதற்க்காவே குரு பெயர்ச்சி முக்கியபங்கு வகின்றது.
குரு பெயர்ச்சி அடைந்து அதன் பார்வை பெற்றால் நல்லது நடக்கும். குரு பார்வை வந்துவிட்டது திருமணம் செய்யலாம் என்று சோதிடர்கள் அல்லவா அதற்க்கு இந்த குரு பெயர்ச்சி முக்கியபங்கு வகின்றது.
ஒருவருக்கு குருவின் தசா நடந்தால் பெரும்பாலும் கோச்சாரபலன்கள் அதிக பாதிப்பை கொடுப்பதில்லை. குரு தசா நடந்தால் நீங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பதையும் சொல்லிவிடுகிறேன். குரு பலனால் என்ன நடக்கும் என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லுவது ஒரு வேலையை எளிமையாக செய்வதற்க்கு என்று நமக்கு ஒரு காலம் வரும் அல்லவா. இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்லதாக நடந்தாக இருந்தால் உங்களின் வேலை எளிமையாக இருக்கும். அவர்கள் இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புக்கு : 9551155800, 8940773309 What'sApp Number: 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment