வணக்கம்!
நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் பல விசயங்கள் நம் கையில் இல்லை அப்படி தான் பல விசயங்கள் நடக்கும். கடந்த முறை பழனி பாதயாத்திரை சென்றேன் இந்த முறை பழனி பாதயாத்திரை செல்வதற்க்கு சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. தை பூசம் முதல் நாள் ஒரு நண்பரிடம் சொல்லிருந்தேன் நாளை பழனி சென்றாலும் செல்வேன் என்று மட்டும் சொல்லிருந்தேன்.
காலையில் பூஜையை முடித்துவிட்டு அதன்பிறகு காலையில் எட்டு மணிக்கு முடிவு செய்து பழனி கண்டிப்பாக சென்று தரிசனம் செய்துவிடவேண்டும் என்று முடிவு செய்து கிளம்பிவிட்டேன். மாலை பழனி நான்கு மணிக்கு சென்றடைந்தேன் அதன்பிறகு ஐந்து மணிக்கு மலை ஏற ஆரம்பித்தேன். இருநூறு கட்டண தரிசனத்தில் சென்று காத்திருந்தேன்.
வரிசையில் இருந்துக்கொண்டு ஒரு வீடியோ பதிவை எடுத்து நமது நண்பர்களின் வாட்ஸஅப்பில் அனுப்பிருந்தேன். மாலை ஆறு இருபதுக்கு இராஜ அலங்காரத்தில் முருகனின் தரிசனம் கிடைத்தது. எப்படியோ நாம் இழுத்துக்கொண்டு ஒரு சக்தி கிளம்பி தரிசனம் செய்ய வைத்தது என்பது தான் உண்மை.
நமது நண்பர்களின் குடும்பத்திற்க்காவும் பிராத்தனையை வைத்தேன். நம்மை நம்பி இருக்கும் அனைத்து குடும்பத்தின் உறுப்பினர்களுக்காவும் நான் சென்று இதனை செய்தேன் என்று சொல்லவேண்டும். நமது ஜாதககதம்பதின் குடும்பங்களின் நபர்கள் வேலை பளுவில் இருப்பார்கள் அவர்களின் சார்பாக நான் வந்திருக்கிறேன். அனைத்து குடும்பங்களும் நன்றாக வாழவேண்டும் என்று பிராத்தனை செய்தேன்.
நான் கடந்த ஒரு வாரமாக தைபூசத்திற்க்காக விரதம் மேற்க்கொண்டு இருந்தேன். எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில கடமைகளை செய்யவேண்டும் அந்த கடமையில் இதுவும் ஒன்று. நல்ல திருப்திகரமாக இருந்தது என்று தான் சாெல்லவேண்டும். முருகனை தரிசனம் செய்தபிறகு தான் அந்த திருப்தி எனக்கு கிடைத்தது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment