வணக்கம்!
ஒவ்வொருவரும் நிறைய போராடி ஒரு இடத்தை தக்க வைப்பார்கள். ஒரு இடத்தை தக்க வைப்பதற்க்கு அவர்களின் போராட்டம் மிக கடுமையாக இருக்கும். ஒருவர் போராடி ஒரு இடத்தை தக்க வைக்க முடியவில்லை என்றால் அவர்களின் போராட்டம் தவறாக இருக்காது மாறாக அவர்களின் இலக்கு தவறாக இருக்கும். இந்த இலக்கிற்க்கும் அவர்களின் ஜாதகத்திற்க்கும் நிறைய தொடர்பு இருக்கும்.
ஒருவர் ஒரு இலக்கை தேர்ந்தெடுத்தால் முதலில் ஜாதகத்தில் அந்த இலக்கு இருக்கின்றதா என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும். அந்த இலக்கு ஜாதகத்தில் இல்லை என்றால் அவரால் அந்த இலக்கை தேர்ந்தெடுத்து வெற்றி பெறமுடியாமல் சென்றுவிடுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் இதற்க்காக இவர் தோல்வி பெற்று போவார் என்றால் அதில் ஈடுபட்டு அவர் வாழ்க்கையின் காலத்தை இழக்க வேண்டியதில்லை.
முக்கியமாக மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும் கிரகத்தின் காரத்துவத்தை எடுத்துக்கொண்டு செயல்படும்பொழுது அவர் அதற்க்காக நிறைய போராட்டம் இருக்கும். அதே நேரத்தில் அவர் வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் அவர்க்கு நடைபெறும் தசா முடிவு செய்யும்.
ஒரு இலக்கை தீர்மானிக்கும்பொழுது அவர் வெற்றி பெறுவாரா அல்லது இடையில் தோற்றுபோவாரா என்பதையும் தெரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு இலக்கை நோக்கி செல்லும்பொழுது அந்த இலக்கில் இருக்கும்பொழுது மற்றவர்களின் குறுக்கீடுகளால் வீணாக போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது அல்லவா அதனையும் நாம் தெரிந்துக்கொண்டு செயல்படவேண்டும்.
ஒருவருக்கு இடையில் குறிக்கீடும் கிரகங்கள் அதிகபட்சம் கோச்சாரப்பலன்கள் அவர்களுக்கு பிரச்சினையை கொடுத்துவிடுகின்றது. கோச்சாரபலன்களால் ஏதோ ஒரு குறிக்கீடு வந்து நின்றுவிடுவதும் உண்டு. ஒரு சிலருக்கு ஒரு சில புத்திகள் பிரச்சினையை கொடுத்துவிடுகின்றது. இதனையும் நன்கு தெரிந்துக்கொண்டு செயல்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை எதில் வருகின்றது என்பதை தெரிந்துக்கொண்டு செயல்படலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment