வணக்கம்!
பரிகாரம் செய்வதில் இரண்டு வகை இருக்கின்றது. ஒன்று சம்பந்தப்பட்ட கிரகத்தை சாந்தப்படுத்தி அந்த கிரகத்தின் வழியாக நாம் பயன் அடைந்துக்கொள்வது. சாந்தப்படுத்தப்பட்ட கிரகம் சம்பந்தப்பட்ட நபர்க்கு நல்லது செய்யும் அதனை சாந்தப்படுத்தியதால் அது நல்லது செய்யும் மற்றோன்று சம்பந்தபட்ட கிரகத்தை எதிர்த்து வேலை செய்து அதனின் கோபத்தை குறைப்பது இது ஒரு வழிமுறையாகும்.
செவ்வாய்கிரகம் மகர இராசியில் உச்சம் பெறுகின்றது. சனிக்கிரகம் மேஷ இராசியில் நீசம் பெறுகின்றது. செவ்வாய் பலம் வாய்ந்த தன்மையால் சனியின் கோபத்தை குறைக்கும் ஆற்றல் உண்டு. சனிக்கிரகம் உங்களுக்கு பிரச்சினை கொடுக்கும் காலத்தில் குறிப்பாக ஏழரைச்சனி காலம் மற்றும் அஷ்டமசனி இன்னும் பிற காலங்களில் சனிக்கு பரிகாரமாக நீங்கள் செவ்வாய்கிரகத்தை வணங்கி சனியின் வேகத்தை குறைக்கலாம்.
நான் பலருக்கு ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனியின் காலத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லிருக்கிறேன். பலர் அங்கு சென்று வணங்கி சனியின் பிடியில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றனர்.
சென்னை திருவான்மீயூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஒரு முருகர் பக்தர். அவருக்கு ஒரு முறை கால் முறிவு ஏற்பட்டது. கால் முறிவு ஏற்பட்டபொழுது அவர் முருகனை வணங்கி அந்த கால் நல்ல முறையில் சரியானதாக தகவல் இருக்கின்றது. சென்னை திருவான்மீயூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஆலயம் சென்று பார்த்தால் அது நிகழ்வாக இன்றும் கொண்டாடிவருகின்றனர்.
பல முருக பக்தர்களுக்கு சனியின் பாதிப்பில் இருந்து முருகன் காப்பாற்றி இருக்கின்றார். நீங்களும் சனியின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்க்கு செவ்வாயின் கடவுளான முருகனை வணங்கி வரலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் முருகனின் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தாலும் சனியின் பாதிப்பு குறையும்.
இந்த தகவலைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment