Followers

Monday, March 9, 2020

ஆலய தரிசனம்


வணக்கம்!
         சனிக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்றுருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பயணம் திட்டம் போட்டு விடியற்காலையில் கிழப்பினேன். திருச்செந்தூர் மதியம் 12 மணியளவில் சென்று அடைந்தேன். கடலில் குளித்துவிட்டு நாழி கிணற்றில் குளித்துவிட்டு மாலை தரிசனத்திற்க்கு சென்றேன். திருச்செந்தூர் கோவிலை பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

திருச்செந்தூர் முருகன் நல்ல சக்தி வாய்ந்த முருகன் அதனை வைத்து நம்ம மக்கள் சம்பாதிக்கும் வழி சுத்தமாகவே எனக்கு பிடிக்கவில்லை. எப்படி சென்றாலும் மக்களிடம் இருந்து எப்படி சம்பாதிக்கலாம் என்பதில் தான் கவனத்தை நிர்வாகம் திட்டம் தீட்டுகின்றனர். முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்றால் நீங்கள் பணம் இல்லாமல் அவ்வளவு எளிதில் பார்த்துவிடமுடியாது.

இங்கு சொல்லுவதற்க்கு காரணம் இதனை படிக்கும் யாராவது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் இருக்கலாம் அவர்கள் இதனை கருத்தில்கொண்டு வசூல் செய்வதில் கொஞ்சம் குறைக்கலாம். ஏதோ ஒரு வழியை மட்டும் வைத்து அதில் சம்பாதித்துக்கொள்ளலாம் மற்றயவை அப்படியே விட்டுவிட்டால் எளிதில் மக்கள் பார்ப்பார்கள். கோவிலில் கட்டணத்தை வைத்தாலும் அதிலும் நிறைய குளறுபடி இருக்கின்றது.

வெளியில் நின்றுக்கொண்டு நிறைய பேர் நீங்கள் எளிதில் தரிசனம் செய்யலாம் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று நிறைய பேர் கேட்கின்றார்கள். இதனை எல்லாம் தவிர்த்தால் நன்றாகவே இருக்குமே என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான கோவில்கள் எல்லாம் இருப்பது ஒன்றுமே இல்லாத மக்கள் இதனை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த காலத்தில் உருவாக்கின்றார்கள்.

நான் செல்லும் கோவில்களைப்பற்றி நான் வெளியில் சொல்லுவது உண்டு. என்னுடைய கண்ணிற்க்கு இது எல்லாம் தவறாகபட்டது அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டேன். திருநெல்வேலி வடி திருச்செந்தூர் சாலை படுமோசமான ஒரு சாலையாக இருக்கின்றது. இதனை சரி செய்யவும் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதனைப்பற்றி சொல்லுங்கள். உயர் அதிகாரிகள் நினைத்தால் இது நடக்கும். திருச்செந்தூர் சென்றததால் வீடியோ பதிவை போடமுடியவில்லை இன்று மாலை வீடியோ பதிவு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: